தேமுதிக டூ அதிமுக.. ஏண்டா வந்தோம்னு மனதுக்குள் புலம்பும் 8 எம்.எல்.ஏக்கள்!

Subscribe to Oneindia Tamil

சென்னை: தேமுதிகவிலிருந்து மனம் மாறி அதிமுக பக்கம் நகர்ந்து போன அதிருப்தி தேமுதிக எம்.எல்.ஏக்கள் கடும் புழுக்கத்தில் உள்ளனராம். அதிமுகவினர் ஆரம்பத்திலிருந்தே இவர்களை தீண்டத்தகாதவர்கள் போல நடத்தி வருவதுதான் காரணம். இப்போதோ, சுத்தமாக இவர்களை ஒதுக்கி வைத்து விட்டதாம் அதிமுக.

இப்போது தேர்தல் வரப் போவதால் எங்கே பங்கு கேட்க வருவார்களோ என்று பயந்து போய் இவர்களை திரும்பிக் கூட பார்ப்பதில்லையாம் அதிமுக நிர்வாகிகள். குறிப்பாக அமைச்சர்கள் இவர்களிடம் பேசக் கூட விரும்புவதில்லையாம்.

இதனால் என்ன செய்வது என்று தெரியாமல் வெம்பி வெதும்பி மனதுக்குள் புழுங்கிக் கொண்டுள்ளனராம். வெளியில் சிரித்தபடி நடமாடினாலும் கூட உள்ளுக்குள் குமைச்சலுடன்தான் உள்ளது.

மதுரை மத்தி சுந்தரராஜன், திருத்தணி அருண் சுப்பிரமணியம், ஆலந்தூர் பண்ருட்டி ராமச்சந்திரன், செங்கம் சுரேஷ் குமார், திட்டக்குடி தமிழழகன், பேராவூரணி அருண் பாண்டியன், ராதாபுரம் மைக்கேல் ராயப்பன், சேந்தமங்கலம் சாந்தி, விருதுநகர் மாபா பாண்டியராஜன் ஆகியோரே இந்த தேமுதிக அதிருப்தி எம்.எல்ஏக்கள். இதில் பண்ருட்டியார் நாகரீகமாக தனது பதவியை ராஜினாமா செய்து விட்டுத்தான் அதிமுகவில் இணைந்தார்கள். மற்றவர்கள் அணிதான் மாறியுள்ளனர்.

திகட்டத் திகட்ட

திகட்டத் திகட்ட

ஆனாலும் இவர்களுக்காக யாரும் பரிதாபப்படவும் தேவையில்லை. காரணம், விஜயகாந்த்திடமிருந்து பிரிந்து வருவதற்காக இவர்கள் "வேண்டியதையும், விரும்பியதையும்" திகட்டத் திகட்ட அதிமுக தலைமை செய்து கொடுத்த பிறகே தற்போது ஓரம் கட்டி வைத்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது..

மேடையில் இடமில்லை

மேடையில் இடமில்லை

இப்போது இந்த அதிருப்தி தேமுதிக எம்.எல்.ஏக்களுக்கு அதிமுக மேடையில் இடம் கிடைப்பதில்லையாம். ரொம்பப் போராடித்தான் இடம் பெறுகிறர்களாம். அப்படியே ஏறினாலும் கூட பேசுவதற்கு அனுமதி கிடையாதாம்.

போஸ்டர்களில் பெயர் போட மாட்டார்கள்

போஸ்டர்களில் பெயர் போட மாட்டார்கள்

அதேபோல இவர்களது தொகுதியில் நடக்கும் கூட்டமாக இருந்தாலும் கூட இவர்களது படங்கள் போஸ்டர்களில் வராதாம். பெயர் கூட வராதான்னு பார்த்துக்கங்க.

பாதிப் பேருக்கு காசு போகலையாம்

பாதிப் பேருக்கு காசு போகலையாம்

இதில் பாதி எம்.எல்.ஏக்களுக்கு முழுக் காசும் போய்ச் சேரவில்லையாம். தலைமை கொடுத்த பணத்தை பாதியிலேயே சிலர் அமுக்கி விட்டதாக சொல்கிறார்கள். இதுகுறித்து எங்கு போய் முறையிடுவது என்று கூட தெரியவில்லையாம் இவர்களுக்கு.

துரோகிகளாக நடமாடும் அவலம்

துரோகிகளாக நடமாடும் அவலம்

கட்சி மாறிப் போய் விட்டதால் சொந்தத் தொகுதியில் மரியாதை இல்லை. தேமுதிகவினர் தூ என்று பார்க்கின்றனர். மக்கள் மத்தியிலும் கூட நல்ல அபிப்பிராயம் இல்லை.

சிடுசிடுக்கும் அமைச்சர்கள்

சிடுசிடுக்கும் அமைச்சர்கள்

அமைச்சர்களிடம் போனால் அதான் எல்லாம் கொடுத்தாச்சுல்ல. போய் தொகுதியில போய் வேலையைப் பாருங்கப்பா என்று விரட்டுகிறார்களாம்.

மீண்டும் சீட் கிடைக்காது

மீண்டும் சீட் கிடைக்காது

இவர்களுக்கு மீண்டும் சீட் கிடைக்குமா என்பதும் உறுதியாகத் தெரியவில்லை. வாய்ப்பில்லை என்றுதான் சொல்கிறார்கள். அப்படியே கிடைத்தாலும் யாராவது ஓரிருவருக்கு மட்டுமே கிடைக்கும் என்கிறார்கள். அது சுந்தரராஜன் மற்றும் மாபா பாண்டியராஜனாக இருக்கலாம் என்றும் சொல்கிறார்கள்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+