68-வது சுதந்திர தினம்: தமிழக அரசியல் கட்சி அலுவலகங்களில் கொண்டாட்டம்
சென்னை: நாட்டின் 68-ஆவது சுதந்திர தினத்தை ஒட்டி, தமிழக அரசியல் கட்சி அலுவலகங்களில், கட்சித் தலைவர்கள், நிர்வாகிகள் தேசியக் கொடியை ஏற்றி வைத்தனர்.
அறிவாலயம்
திமுகவின் தலைமை அலுவலகமான அண்ணா அறிவாலயத்தில், கட்சியின் துணை பொதுச்செயலாளர் துரைசாமி தேசியக் கொடியை ஏற்றி வைத்தார். முன்னாள் மேயர் சுப்பிரமணியன் உள்ளிட்ட பலர் இதில் பங்கேற்றனர்.

கம்யூனிஸ்ட்டுகள் கொண்டாட்டம்
இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயலாளர் தா. பாண்டியன் தியாகராய நகரிலுள்ள கட்சி அலுவலகத்தில் தேசியக் கொடி ஏற்றி வைத்து மரியாதை செலுத்தினார்.
சென்னை தியாகராய நகரிலுள்ள மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி அலுவலகத்தில் அந்த கட்சியின் மூத்த தலைவர் என். சங்கரய்யா தேசிய கொடியை ஏற்றினார். இதில், மாநில செயலாளர் ஜி.ராமகிருஷ்ணன் உள்ளிட்ட நிர்வாகிகள் கலந்துகொண்டு சுதந்திர தின வாழ்த்துகளை தெரிவித்தனர்.

கமலாலயம்
பாரதிய ஜனதாவின் மாநில தலைமை அலுவலகமான கமலாலயத்தில், அந்த கட்சியின் மூத்த தலைவர் லட்சுமணன் தேசிய கொடியை ஏற்றி வாழ்த்து தெரிவித்தார். இதில், தமிழிசை செளந்திரராஜன், வானதி ஸ்ரீநிவாசன், எச். ராஜா உள்ளிட்ட கட்சி நிர்வாகிகள் கலந்துகொண்டனர்.
சத்தியமூர்த்தி பவன்
சென்னை சத்தியமூர்த்தி பவனில் தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் ஞானதேசிகன் தேசிய கொடியை ஏற்றினார். இதில், காங்கிரஸ் கட்சியின் மாநில நிர்வாகிகள் பலர் கலந்துகொண்டனர்.

விஜயகாந்த் கொடியேற்றினார்
தேசிய முற்போக்கு திராவிட கழகத்தின் சார்பில் தே.மு.தி.க. தலைமை அலுவலகத்தில் விஜயகாந்த் தேசியக் கொடியை ஏற்றி வைத்து, கழகத் தொண்டர்களுக்கு இனிப்புகளை வழங்கினார்.
இந்நிகழ்ச்சியில் தலைமை நிர்வாகிகளும், உயர்மட்ட குழு உறுப்பினர்களும்,அனைத்து மாவட்ட செயலாளர்களும், சட்டமன்ற உறுப்பினர்களும் மற்றும் சார்பு அணி நிர்வாகிகளும், மகளிர் அணி, தொழிற்சங்க நிர்வாகிகள், பள்ளி குழந்தைகள்,உட்பட பலர் கலந்து கொண்டனர்.
சோ. அய்யர்
தமிழ்நாடு மாநில தேர்தல் ஆணையத்தில் மாநில தேர்தல் ஆணையர் முனைவர் சோ. அய்யர் தேசியக் கொடியேற்றினார். பின் காவல்துறை அணிவகுப்பு மரியாதையை ஏற்றுக் கொண்டார்.
இந்நிகழ்ச்சியில் மாநில தேர்தல் ஆணைய செயலாளர் பா. ஜோதி நிர்மலாசாமி, மற்றும் அலுவலர்கள், பணியாளர்கள், பொதுமக்கள், மற்றும் குழந்தைகள் கலந்து கொண்டனர்.
சிதம்பரம் கோவிலில்
சுதந்திர தினத்தை ஒட்டி சிதம்பரம் நடராஜர் கோவிலில் 140 அடி உயர ராஜகோபுரத்தில் தேசிய கொடியேற்றப் பட்டது. பொது தீட்சிதர்கள் சார்பில் கோவிலில் சிறப்பு அபிஷேக, ஆராதனை நடத்தப்பட்டது. பின், 140 அடி உயரமுள்ள ராஜகோபுர உச்சியில் தேசிய கொடியேற்றி இனிப்பு வழங்கினர்.
-
கார் ஓட்டுநரின் மகனுக்கு சீட்! எங்கயோ இடிக்குதே! விஜய்யின் ரியல் எஸ்டேட் தொழில் குறித்து ஷாக் தகவல் -
மகளிர் உரிமை தொகை கிடைக்காது.. ஆனாலும் நாளை முதல் தமிழக அரசு தரும் ரூ.2000.. யாருக்கு வரும்? -
காற்றழுத்த தாழ்வு பாதை.. பிச்சு உதறப் போகும் மழை.. இடி, மின்னலுடன் கொட்டப் போகுது! -
திமுக-அதிமுக இடையே கடும் போட்டி.. ஆட்சியை பிடிப்பது யார்? ஆட்டத்திலேயே இல்லாத தவெக! புதிய சர்வே -
யார் அந்த அதிர்ஷ்டசாலி? நகைக்கடை, விவசாயக்கடன் தள்ளுபடி, மாதம் 10000 சலுகை? விவசாயிகளின் செம திட்டம் -
சொதப்பிட்டீங்களே.. இப்போ பாருங்க போக முடியல.. கடுப்பான விஜய்.. காரணம் புஸ்ஸி, ஆதவ்? என்னாச்சு? -
திடீரென வீடியோ வெளியிட்டு மதுரை மத்திய தொகுதி வேட்பாளர் சுந்தர் சி உருக்கம்! பிடிஆர் இருக்காரே! -
சிலிண்டர் ஏஜென்சி வைத்திருக்கும் நண்பனின் தந்தைக்கு மாதம் 1.90 லட்சம் வருமானம்.. நெட்டிசன் தகவல் -
Free Fridge: அதிமுகவின் இலவச பிரிட்ஜ்! யாருக்கெல்லாம் கிடைக்கும்? எவ்வளவு ரூபாய்க்கு இருக்கும்? -
எவ்வளவு வேகம்! சிட்டிக்கு நடுவே வளர்ந்து நிற்கும் ஸ்டீல் ராட்சசன்.. சென்னையின் காஸ்ட்லி ப்ராஜெக்ட் -
ஸ்டாலின் தான் சிறந்த CM வேட்பாளர்.. பின்னாலேயே துரத்தும் எடப்பாடி.. விஜய்க்கு அதிர்ச்சி! புதிய சர்வே -
தவெகவில் விஜய்க்கு அடுத்ததாக அதிக சொத்து உள்ள நபர் இவரா? அதுவும் இத்தனை கோடி! ஆச்சரியத்தில் நெட்டிசன்கள்












Click it and Unblock the Notifications