குடிப்பது தப்பா என்று கேட்ட விஜயகாந்த் டாஸ்மாக் கடைகளுக்கு எதிராக பேசலாமோ...?
சென்னை: தேமுதிக தலைவர் விஜயகாந்த்தின் பேச்சுக்கள் ஒவ்வொன்றும் ஒன்றுக்கொன்று முரணா்கவே உள்ளன. அப்படித்தான் அவரது கட்சியின் பொதுக்குழுவில் நிறைவேற்றப்பட்ட ஒரு தீர்மானம் அமைந்துள்ளது.
என்னை குடிக்கிறேன், குடிக்கிறேன் என்று சொல்கிறார்கள். குடிக்கத்தானே கடையைத் திறந்து வச்சுருக்கீங்க. யாருமே இங்கு குடிக்கவில்லையா என்று ஒரு முறை பேசினார் விஜயகாந்த்.
ஆனால் நேற்றைய தேமுதிக பொதுக்குழுவில் டாஸ்மாக் கடைகளைத் திறப்பதைக் கண்டித்து தீர்மானம் போட்டுள்ளனர்.

தேமுதிகவின் டாஸ்மாக் தீர்மானம் சொல்வது என்ன...
தமிழ்நாட்டில் மக்களுக்கு தேவையான அடிப்படை வசதிகள் கிடைப்பதற்கு தமிழக அரசு எந்தவித நடவடிக்கையும் எடுப்பதில்லை. ஆனால் தமிழ்நாட்டு மக்களை குடிக்கு அடிமையாக்குவதற்கு தேவையான நடவடிக்கைகளை எடுத்து வருகிறது.

கிராமந்தோறும், தெருக்கள் தோறும்...
கிராமந்தோறும், தெருக்கள்தோறும் மதுக்கடைகளை திறந்தது போதாது என்று சொல்லி, மிகப்பெரிய வணிக வளாகங்களில் (Shopping Mall) எலைட் என்ற பெயரில் ஏசி வசதிகளுடன் மதுக்கடைகளை திறந்துள்ளது.

இளைஞர்களை சீரழிக்கிறார்கள்
தமிழ்நாட்டில் பல லட்சம் இளைஞர்கள் வேலை வாய்ப்பில்லாமல் திண்டாடிக் கொண்டுள்ளனர். அவர்களின் வேலை வாய்ப்பிற்கு உரிய வழிவகைகளை காணாமல் இளைஞர்களின் வாழ்க்கைக்கு வழிகாட்ட வேண்டிய தமிழக அரசு மதுக்கடைகளை தொடர்ந்து திறப்பதன் மூலம் இளைஞர்களின் வாழ்க்கையை சீரழிக்கிறது.

தாய்மார்களின் வாழ்க்கை கேள்விக்குறியாகிறது...
தாய்மார்களின் வாழ்க்கை கேள்விக்குறியாகிறது. இதுபோன்று மதுக்கடைகள் திறப்பதை இப்பொதுக்குழு வன்மையாகக் கண்டிக்கிறது என்று அந்தத் தீர்மானம் சொல்கிறது.

ஆனால் மகன் பட பூஜையின்போது...
ஆனால் சமீபத்தில் தனது மகன் சண்முகப்பாண்டியன் அறிமுகமான பட விழாவின்போது விஜயகாந்த் பேசுகையில், கிட்டத்தட்ட குடிப்பழக்கத்திற்கு ஆதரவுப் பேச்சாகவே இருந்தது.

குடிக்கிறது பெரிய தப்பா என்ன...
அப்போது விஜயகாந்த் பேசுகையில், குடிக்கிறேன் குடிக்கிறேன் என்று சொல்கிறார்கள். யாருமே இங்கு குடிக்கவில்லையா? குடிக்கிறது பெரிய தப்பா என்ன? அப்புறம் எதுக்கு தமிழ்நாடு முழுவதும் கடையை திறந்துவச்சிருக்கீங்க என்று கேட்டார்.
முரண்பாடாக இருக்கிறதா இல்லையா...
-
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன? -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்!












Click it and Unblock the Notifications