சென்னையில் மோடி தூதருடன் சுதீஷ் சந்திப்பு: தேமுதிக- பாஜக கூட்டணி உறுதியானது?
சென்னை: லோக்சபா தேர்தலில் பாரதிய ஜனதா கட்சி தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணியில் தேமுதிக இடம்பெறுவது உறுதியாகிருப்பதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.
லோக்சபா தேர்தலில் எந்த கட்சியுடன் கூட்டணி என்பதை தேமுதிக அறிவிக்கவில்லை. அக்கட்சியின் தலைவர் விஜயகாந்த் சிங்கப்பூர் சென்றுள்ளார். அவர் மார்ச் 3--ந் தேதி சென்னை திரும்புகிறார்.

இந்நிலையில் குஜராத் முதல்வரும் பாரதிய ஜனதாவின் பிரதமர் வேட்பாளருமான நரேந்திர மோடியின் தூதர் சென்னை வந்ததாகவும் அவருடன் விஜயகாந்தின் மைத்துனர் சுதீஷ் பேச்சுவார்த்தை நடத்தியதாகவும் கூறப்படுகிறது.
இந்த சந்திப்பின் போது பாஜக அணியில் தேமுதிக இடம்பெறும் என்று உறுதியளிக்கப்பட்டதாகவும் பாஜக வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. தேமுதிகவைப் பொறுத்தவரையில் 14 முதல் 19 தொகுதிகள் வரை கேட்கிறது. பாரதிய ஜனதாவோ 12 தொகுதிகள் ஒதுக்க தயாராக இருக்கிறது.
ஆனால் பாட்டாளி மக்கள் கட்சியோ, தாங்கள் வேட்பாளர்களை அறிவித்த 10 தொகுதிகளை ஒருபோதும் விட்டுக் கொடுக்க முடியாது என்பதில் உறுதியாக இருக்கிறதாம். அதனால் அந்த கட்சி, பாஜக அணியில் இடம்பெறுமா என்பது கேள்விக் குறியாக இருக்கிறது.
-
விஜய்க்கு நேரடி குடைச்சல் தரப்போகும் அண்ணாமலை.. பாஜகவில் இருந்து விலகிய கையோடு போட்ட பிளான்! பின்னணி -
பாஜக கொடியை நீக்கிய அண்ணாமலை.. உருவாகும் 'மக்கள் சக்தி இயக்கம்'.. காரில் வரும் புதிய கொடி! -
ஓரங்கட்டப்பட்ட அண்ணாமலை.. நீண்ட நாள் ரகசிய ஆயுதத்தை கையில் எடுக்க முடிவு! அதிரடி திட்டம் -
பலே ஆளுங்க அண்ணாமலை.. ‘பயோ’வைப் பாருங்களேன்! பிள்ளையையும் கிள்ளி.. தொட்டிலையும் ஆட்டி.. பரபர பாஜக! -
அந்த ‘4’ ஓல்டு ஸ்டூடண்ட்ஸ்.. என்னை ஒதுக்கி ஓரம் கட்டிட்டாங்க! நபினிடம் கொட்டித் தீர்த்த அண்ணாமலை! -
ஐபிஎஸ் டூ அரசியல்.. 5 பக்க லெட்டரில் முடிந்த 7 ஆண்டு பாஜக பயணம்.. அண்ணாமலைக்கு அடுத்தது என்ன? -
அண்ணாமலை முடிவால் கண்சிவந்த அமித்ஷா.. நயினாரை உடனே டெல்லி அழைத்த பாஜக மேலிடம்.. பாஜகவில் பரபரப்பு -
அண்ணாமலையை பஞ்சராக்கிய பாஜக டபுள் இன்ஜின்.. 5 வருஷம் ஆட்டத்தின் அன்டோல்டு கதை -
நேரம் ஒதுக்காத அமித்ஷா.. கிரீன் சிக்னல் கொடுக்காத பாஜக தலைமை! டெல்லியில் காத்திருக்கும் அண்ணாமலை -
"சிங்க பெண்ணுக்கே பாதுகாப்பில்லாத ஆட்சி!" பெண் காவலருக்கு பாலியல் தொல்லை.. சாடிய நயினார் நாகேந்திரன் -
அண்ணாமலையா, மோடியா.. பாஜக ஆதரவாளர்களுக்கு இப்போ டெலிகேட் பொசிஷன்! -
டைம் பார்த்து அடிக்க ரெடியாகும் பாஜக? தொகுதி மறுவரையறை, ஒரே நாடு ஒரே தேர்தல்! மோடி போடும் கணக்கு












Click it and Unblock the Notifications