காஞ்சிபுரத்தில் பயங்கரம்.. தேமுதிக பேச்சாளர் நடு ரோட்டில் ஓட ஓட விரட்டி வெட்டிக் கொலை
காஞ்சிபுரம்: காஞ்சிபுரத்தில் நேற்று தேமுதிக தலைமை கழக பேச்சாளரும் கட்சியின் நகர துணை செயலாளருமான சரவணன் என்பவர் மர்ம நபர்களால் வெட்டி படுகொலை செய்யப்பட்டார். நடுரோட்டில் ஓட ஓட விரட்டி படுகொலை செய்துள்ளனர்.
காஞ்சிபுரம் பெருநகராட்சிக்குட்பட்ட 19 வது வார்டு செங்கல்வராயன் ஒத்தைவாடை தெருவில் சரவணன் வயது 38 என்பவர் வாடகை வீட்டில் தன் குடும்பத்துடன் கடந்த சில வருடங்களாக வசித்து வருகிறார். இவர் தேமுதிக கட்சியின் தலைமை கழக பேச்சாளராகவும் கட்சியின் நகர துணை செயலாளருமாக இருந்து வந்தார்.
சரவணனுக்கு மனைவி மற்றும் மகன், மகள் உள்ளனர். கட்சி பணியுடன் ரியல் எஸ்டேட் புரோக்கராகவும் இருந்து வந்தார் சரவணன். நேற்று இரவு சுமார் 10.15மணியளவில் இவர் வீட்டு அருகே உள்ள பகுதியில் தன் நண்பர்களுடன் மது அருந்திவிட்டு வீட்டிற்கு வந்து பைக்கை நிறுத்தியுள்ளார்.

ஓட ஓட விரட்டி கொலை
அப்போது அங்கே மறைந்திருந்த ஐந்து பேர் கொண்ட மர்ம கும்பல் வீட்டை வாசலில் வைத்து சரவணனை மடக்கி வெட்டியது. அதிரச்சி அடைந்த சரவணன் அங்கிருந்து ஓடத் தொடங்கினார். சாலையில் தப்பி ஓட முயன்றவரை விடாமல் விரட்டி விரட்டி வெட்டிவிட்டு கண் இமைக்கும் நேரத்தில் மர்மநபர்கள் தப்பி சென்றுவிட்டனர். இதில் சரவணன் படுகாயமடைந்து ரத்த வெள்ளத்தில் கீழே விழுந்தார்.

சம்பவ இடத்திலேயே பலி
சப்தம் கேட்டு அருகில் வசிப்பவர்கள் ஓடிவந்து சரவணனை மீட்டு காஞ்சிபுரம் அரசு தலைமை மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக கொண்டு சென்றனர். சரவணனை பரிசோதித்த மருத்துவர்கள் அவர் ஏற்கனவே இறந்து விட்டதாக கூறினர். இச்சம்பவம் குறித்து தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு வந்த சிவ காஞ்சி போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகின்றனர். ஏஎஸ்பி ஸ்ரீநாதா நேரில் வந்து கொலையுண்ட இடத்தை ஆய்வு செய்தார். மேலும் காவல்துறை மோப்ப நாய் அஜய், கைரேகை டிஎஸ்பி சங்கர், தடவியல் டிஎஸ்பி விஜயலட்சுமி ஆகியோர் தடயங்களை சேகரித்தனர்.

அடுத்தடுத்து கொலைகள்
காஞ்சிபுரத்தில் நேற்று முன்தின்தான் திமுக பிரமுகர் மற்றும் தொண்டு நிறுவனம் நடத்தி வந்த சந்துரு என்கிற சந்திரசேகர் என்பவர் வெட்டி படுகொலை செய்யப்பட்டார். இந்த நிலையில் நேற்று தேமுதிக பிரமுகர் கொல்லப்பட்டுள்ளது. காஞ்சி மக்களை அதிர்ச்சிக்குள்ளாக்கியுள்ளது.

என்ன காரணம்
தேமுதிக பிரமுகர் சரவணன் கொலை சம்பவம் ரியல் எஸ்டேட் போட்டியால் நடைபெற்றதா? கட்சி பதவிக்காக நடைபெற்றதா? உள்ளாட்சி தேர்தலில் போட்டியிடுவதால் கொலை நடந்ததா என்றும் தனிப்படை விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

டான் ஸ்ரீதர் கைவரிசையா
இந்தக் கொலையில் டான் ஸ்ரீதர் பெயரும் அடிபடுகிறது. 7 கொலை வழக்கு, 20 கொலை முயற்சி வழக்கு உள்பட 70க்கும் மேற்பட்ட வழக்குகளை சுமந்து நிற்பவர் டான் ஸ்ரீதர். துபாயில் தற்போது வசித்து வருகிறார். அவரைப் பிடிக்க நீண்ட போராட்டத்தில் காவல்துறை ஈடுபட்டுள்ளது. அவரது ஆட்கள்தான் காஞ்சிபுரத்தில் நடைபெற்ற சந்துரு மற்றும் சரவணன் ஆகியோரை கொலை செய்திருக்கலாம் என காவல்துறை வட்டாரம் சந்தேகிக்கிறது.
-
ரூ.100 கோடியை போய் FDல் போட்டு இருக்காரே.. விஜய் சொதப்பிட்டாரே.. யாருங்க இந்த ஐடியா தந்தது? -
கார் ஓட்டுநரின் மகனுக்கு சீட்! எங்கயோ இடிக்குதே! விஜய்யின் ரியல் எஸ்டேட் தொழில் குறித்து ஷாக் தகவல் -
மகளிர் உரிமை தொகை கிடைக்காது.. ஆனாலும் நாளை முதல் தமிழக அரசு தரும் ரூ.2000.. யாருக்கு வரும்? -
காற்றழுத்த தாழ்வு பாதை.. பிச்சு உதறப் போகும் மழை.. இடி, மின்னலுடன் கொட்டப் போகுது! -
திமுக-அதிமுக இடையே கடும் போட்டி.. ஆட்சியை பிடிப்பது யார்? ஆட்டத்திலேயே இல்லாத தவெக! புதிய சர்வே -
யார் அந்த அதிர்ஷ்டசாலி? நகைக்கடை, விவசாயக்கடன் தள்ளுபடி, மாதம் 10000 சலுகை? விவசாயிகளின் செம திட்டம் -
சொதப்பிட்டீங்களே.. இப்போ பாருங்க போக முடியல.. கடுப்பான விஜய்.. காரணம் புஸ்ஸி, ஆதவ்? என்னாச்சு? -
திடீரென வீடியோ வெளியிட்டு மதுரை மத்திய தொகுதி வேட்பாளர் சுந்தர் சி உருக்கம்! பிடிஆர் இருக்காரே! -
சிலிண்டர் ஏஜென்சி வைத்திருக்கும் நண்பனின் தந்தைக்கு மாதம் 1.90 லட்சம் வருமானம்.. நெட்டிசன் தகவல் -
Free Fridge: அதிமுகவின் இலவச பிரிட்ஜ்! யாருக்கெல்லாம் கிடைக்கும்? எவ்வளவு ரூபாய்க்கு இருக்கும்? -
எவ்வளவு வேகம்! சிட்டிக்கு நடுவே வளர்ந்து நிற்கும் ஸ்டீல் ராட்சசன்.. சென்னையின் காஸ்ட்லி ப்ராஜெக்ட் -
ஸ்டாலின் தான் சிறந்த CM வேட்பாளர்.. பின்னாலேயே துரத்தும் எடப்பாடி.. விஜய்க்கு அதிர்ச்சி! புதிய சர்வே












Click it and Unblock the Notifications