லோக்சபா தேர்தல்.. முதல் முறையாக 35 தொகுதிகளில் அ.தி.மு.க.- தி.மு.க. நேரடி மோதல்
சென்னை: லோக்சபா தேர்தல் வரலாற்றில் முதல் முறையாக அதிமுகவும் திமுகவும் 35 தொகுதிகளில் நேரடியாக மோதுகின்றன. அதேபோல் இரண்டு திராவிட கட்சிகளும் தேசியக் கட்சிகளுடன் கூட்டணி அமைக்காமல் லோக்சபா தேர்தலை சந்திப்பதும் இதுவே முதல் முறை.
முதல் முறையாக 1952-ம் ஆண்டு லோக்சபா தேர்தல் நடத்தப்பட்டது. சுதந்திர அப்போது முதக் 67ஆம் ஆண்டு காங்கிரஸ் கை மட்டுமே ஓங்கி இருந்தது.
1967-ம் ஆண்டு நடந்த லோக்சபா தேர்தலில் தி.மு.க. 25 தொகுதிகளை கைப்பற்றி காங்கிரசை வீழ்த்தியது. தற்போது 45 ஆண்டுகள் ஆன நிலையிலும் காங்கிரஸ் கட்சியால் தமிழகத்தில் எழுந்திருக்க முடியவில்லை.

அதிமுக தனித்து போட்டி
தமிழகத்தில் தி.மு.க.-அ.தி.மு.க. தலைமையிலான கூட்டணிதான் அதன் பிறகு தேர்தல்களை சந்தித்து வருகிறது. வரும் தேர்தலில் தமிழகம் புதுச்சேரி உள்ளிட்ட 40 தொகுதிகளிலும் அ.தி.மு.க. தனித்து போட்டியிடுகிறது.

திமுக அணியில் கூட்டணிக்கு 5
அதே நேரத்தில் தி.மு.க. தலைமையிலான ஜனநாயக முற்போக்கு கூட்டணியில், விடுதலை சிறுத்தைகள் கட்சிக்கு சிதம்பரம், திருவள்ளூர் தொகுதிகள், புதிய தமிழகம் கட்சிக்கு தென்காசி, மனிதநேய மக்கள் கட்சிக்கு மயிலாடுதுறை, இந்தியன் யூனியன் முஸ்லிம் லீக் கட்சிக்கு வேலூர் தொகுதிகள் ஒதுக்கப்பட்டுள்ளது.

35-ல் திமுக போட்டி
புதுச்சேரி உள்ளிட்ட எஞ்சிய 35 தொகுதிகளிலும் தி.மு.க.வே நேரடியாக போட்டியிடுகிறது. அதாவது 35 தொகுதிகளில் அ.தி.மு.க.வும், தி.மு.க.வும் நேரடியாக மோதுகிறது.

முதல் முறையாக..
லோக்சபா தேர்தல் வரலாற்றில் அ.தி.மு.க. - தி.மு.க. இப்படி 35 தொகுதிகளில் தொகுதிகளில் மோதுவது இதுதான் முதல்முறையாகும்.

தேசிய கட்சிகளுடன் கூட்டணி இல்லை
அத்துடன் திராவிட கட்சிகளான திமுகவும் அதிமுகவும் முதல் முறையாக பாஜக, காங்கிரஸ், இடதுசாரிகள் போன்ற தேசியக் கட்சி எதனுடனும் கூட்டணி அமைக்காமல் லோக்சபா தேர்தலை சந்திப்பதும் இதுவே முதல் முறையாகும்.
-
“முஸ்லீம் மக்களை காப்பாற்றும் லட்சணம் இதுதானா?" TVK + IUML கட்சிகளை லெஃப்ட் ரைட் வாங்கிய திமுக -
ராஜாக்கள் மந்திரியானால் இப்படித்தான்! டி.ஆர்.பி ராஜாவுக்கு எதிராக கிளம்பிய மா.செ.க்கள்! -
"கடைசி மூச்சு வரை உங்களுக்காக உழைப்பேன்!" - கலைஞர் கருணாநிதியின் இறுதிப் பேருரை.. என்ன பேசினார்? -
“ஒரு இயக்கம்.. இன்னொரு இயக்கத்தின் சின்னத்தில் போட்டியிடக்கூடாது” - துரை வைகோ! -
விஜய்யை இப்படியே விடக்கூடாது.. பாஜக பாணியை கையில் எடுக்கும் திமுக.. பெரிய மாற்றம் வரப்போகுது -
திமுக நாசமா போக காரணமே நாமதான்..ஒரிஜினல் திமுககாரன வளர்த்து விடுங்க! மேடையில் வெடித்த மாஜி மூர்த்தி! -
தாத்தா காலத்து பாலிடிக்ஸ் வேலைக்கு ஆகாது! உதய் போடும் மாஸ்டர் ப்ளான்! இனி Gen Z ஸ்டைல் தானாமே! -
"இது அதுல்ல?.. ஜனநாயகத்தை சிதைப்பதில் பாஜகவும் தவெகவும் ஒண்ணு” - திமுக சரமாரி அட்டாக்! -
கை கால் ஆட்டி பேசி..சட்டமன்றத்தில் எங்க போச்சு BRO உங்க BODY LANGUAGE விஜய்யை விடாமல் அடித்த ஆ.ராசா! -
ஏற்கனவே கொதிக்குது.. ஆத்திரத்தில் திமுக! தூபம் போட்ட துரை! பனையூருக்கு பறக்கும் எழும்பூர் எக்ஸ்ப்ரஸ் -
திமுகவுடன் உறவு தொடரும்.. கம்யூனிஸ்ட்கள் அதிரடி முடிவு.. சண்முகம் பளீச்.. விஜய் ஷாக் -
தவெக ஆட்சி சூப்பரா இருக்கு! பாராட்டிய லீமா ரோஸ்! அப்போ எடப்பாடி சொன்ன சட்டம் ஒழுங்கு பிரச்சனை?












Click it and Unblock the Notifications