கச்சத்தீவு விஷயத்தில் திமுகவும், அதிமுகவும் மோதிக் கொள்வது மோசடி: திருமாவளவன்
சென்னை: கச்சத்தீவு விஷயத்தில், திமுகவும், அதிமுகவும் இணைந்து மத்திய அரசுக்கு அழுத்தம் தராமல் ஒருவர் மீது ஒருவர் குறை சொல்வது மோசடியான செயலாகும். இந்த விவகாரத்தில் ஒருவரை ஒருவர் குறை சொல்லிக் கொள்வதற்கு பதிலாக, மத்திய அரசிடம் இணைந்து வலியுறுத்தியிருக்க வேண்டும் என விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் தொல். திருமாவளவன் கூறினார்.
சென்னையில் செய்தியாளர்களை சந்தித்த திருமாவளவன் மேலும் கூறுகையில், கச்சத்தீவினை திமுக தலைவர் கருணாநிதி, அவர் முதல்வராக இருந்த போது இலங்கைக்கு தாரை வார்த்தார் என்று முதல்வர் ஜெயலலிதா கூறுகிறார்.

கச்சத்தீவை இலங்கைக்கு அளித்த போது, முதல்வராக இருந்த கருணாநிதி, அதற்காக பெரியளவில் எதிர்ப்பை தெரிவிக்காமல் இருந்திருக்கலாம். ஆனால், ஒரு மாநில முதல்வருக்கு நாட்டின் ஒரு பகுதியை இன்னொரு நாட்டுக்கு அளிப்பதற்கு எந்த உரிமையும் கிடையாது. அப்போதைய பிரதமர் இந்திரா காந்தி, முதல்வரின் அனுமதியின்றியும், நாடாளுமன்றத்தில் விவாதிக்காமலும் தான் கச்சத்தீவை இலங்கைக்கு கொடுத்தார்.
திமுகவை ஆதரிப்பதற்காக நான் இதை சொல்லவில்லை. கச்சத்தீவு பிரச்சினையில் திமுகவை அதிமுக குறை சொல்வதும். அதிமுக இதற்காக எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை என்று திமுக குற்றஞ்சாட்டுவதும் மிகப்பெரிய மோசடியாகும். ஏனென்றால், இவர்கள் ஒருவரை ஒருவர் குறை சொல்லிக் கொள்வதற்கு பதிலாக, மத்திய அரசிடம் இணைந்து வலியுறுத்தியிருக்க வேண்டும். அதற்கான துணிச்சல் இல்லாததை திமுக, அதிமுகவின் செயல்கள் காட்டுகின்றன என்று திருமாவளவன் கூறினார்.
-
ஸ்டாலின், பினராயி, சித்தராமையா, கே.சி.ஆர்.. அடுத்தடுத்து சரிந்த ராஜ்ஜியம்.. பாஜகவிற்கு அடித்த லக்! -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
குடும்பத்தினருடன் குடகு மலைக்குச் சென்ற திமுக தலைவர் ஸ்டாலின்.. கூட யார் யார்லாம் பாருங்க! -
தொங்கலில் விடப்பட்ட சிங்கப்பெண் அதிரடிப்படை! தவெக அரசு தீவிரத்தை உணரவில்லை என கனிமொழி சாடல் -
"மனக் குழப்பத்தில் மனோ தங்கராஜ்".. திமுகவுக்குள் பரபரப்பை உண்டாக்கிய அனிதா ராதாகிருஷ்ணன் பேச்சு -
“காங்கிரஸ், கம்யூனிஸ்ட்களை விமர்சிக்க அவர்களுக்கு துணிச்சல் இல்லை”.. திருமாவளவன் அட்டாக்! -
திட்டமிட்டு விஜய்யுடனான சந்திப்பை அமித்ஷா ரத்து செய்தார்.. திமுகவின் முரசொலி விமர்சனம் -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
சிவக்குமார் விஜய்யை பாராட்டி பேச பேச சத்யராஜ் கொடுத்த ரியாக்ஷன் பாருங்க.. அமைதியாக கவனிக்கும் திமுக -
“MLA-களை பிடிப்பதை விட்டுவிட்டு.. போலீஸை ஆக்கப்பூர்வமா செயல்பட வைக்கவும்!” விஜய்க்கு உதயநிதி அட்வைஸ் -
திருமாவளவன் ஆர்எஸ்எஸின் பேரப்பிள்ளை.. தவெகவில் நடப்பது கழுதை பேரம்.. வளைத்து வளைத்து அடித்த பொன்னார் -
பெங்களூர், ஹைதராபாத்-யிடம் தோற்றுப்போகும் சென்னை.. தலையெழுத்தை மாற்றுவாரா விஜய்!












Click it and Unblock the Notifications