For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

திமுக வேட்பாளர் பட்டியல்.. 6 தேவர், 6 கவுண்டர், 4 வன்னியர், 4 நாடார்

By Mathi
|

சென்னை: திமுகவின் வேட்பாளர் பட்டியலில் தேவர் மற்றும் கவுண்டர் சமூகத்தைச் சேர்ந்த தலா 6 பேருக்கும் வன்னியர்கள் மற்றும் நாடார் சமூகத்தைச் சேர்ந்த தலா 4 பேருக்கும் வாய்ப்பு கொடுக்கப்பட்டுள்ளது.

லோக்சபா தேர்தலுக்கான திமுக வேட்பாளர்கள் பட்டியல் நேற்று வெளியிடப்பட்டது. இதில் தேவர் மற்றும் கவுண்டர் சமூகத்தினர் தலா 6 பேருக்கு போட்டியிட வாய்ப்பு அளிக்கப்பட்டுள்ளது.இது அந்த சமூகங்களை ஆறுதல்படுத்தியுள்ளது.

4 வன்னியர்கள்

4 வன்னியர்கள்

ஆனால் வடமாவட்டங்களில் அதிகம் உள்ள வன்னியர் சமூகத்தைச் சேர்ந்த 4 பேருக்கு மட்டும் வாய்ப்பு அளிக்கப்பட்டுள்ளது.

4 பேர்தானா?

4 பேர்தானா?

திமுக வேட்பாளர் பட்டியலில் கடலூர் ஆர்.நந்தகோபாலகிருஷ்ணன், ஸ்ரீபெரும்புதூர் ஜெகத்ரட்சகன், தருமபுரி தாமரைச்செல்வன், ஆரணி சிவானந்தம் ஆகிய நான்கு பேர் மட்டுமே வன்னியர் சமூகத்தைச் சேர்ந்தவர்கள்.

எதிர்பார்ப்பும் ஏமாற்றமும்

எதிர்பார்ப்பும் ஏமாற்றமும்

அதே நேரத்தில் சேலம், கள்ளக்குறிச்சி, அரக்கோணம், திருவண்ணாமலை தொகுதிகளில் வன்னியர் சமூகத்தினருக்கு வாய்ப்பு கிடைக்கும் என்று எதிர்பார்க்கப்பட்டது.

சேலத்திலும் கூட..

சேலத்திலும் கூட..

குறிப்பாக சேலத்தில் வன்னியருக்கு பதிலாலக கொங்கு வேளாளர் சமூகத்தைச் சேர்ந்த உமாராணிக்கு சீட் வழங்கப்பட்டுள்ளது. அவர் மு.க. ஸ்டாலின் மனைவி துர்காவின் நெருங்கிய தோழி என்பது குறிப்பிடத்தக்கது.அதே நேரத்தில் அதிமுக 8 வன்னியர்களை வேட்பாளர்களாக அறிவித்திருந்தது குறிப்பிடத்தக்கது.

4 நாடார்கள்..

4 நாடார்கள்..

மேலும் அதிமுகவில் 3 நாடார்களுக்கே வாய்ப்பு அளிக்கப்பட்டிருந்தது. ஆனால் திமுக கன்னியாகுமரி, தூத்துக்குடி, திருநெல்வேலி, விருதுநகர் ஆகிய 4 தொகுதிகளில் நாடார் வேட்பாளர்களை களமிறக்கியுள்ளது.

வன்னியருக்கு அதிமுக, தேவர்களுக்கு திமுக ..மாறிய விந்தை

வன்னியருக்கு அதிமுக, தேவர்களுக்கு திமுக ..மாறிய விந்தை

வழக்கமாக தேர்தல்களில் அதிமுகதான் தேவர்களுக்கு அதிக வாய்ப்பு கொடுக்கும். திமுக வன்னியர்களுக்கு கூடுதல் வாய்ப்புகளைக் கொடுக்கும் ஆனால் இந்த லோக்சபா தேர்தலில் இரு கட்சிகளுமே வழக்கத்துக்கு மாறாக வாய்ப்புகளைக் கொடுத்திருக்கின்றன. அதாவது அதிமுக வன்னியர்களுக்கும் திமுக தேவர்களுக்கும் கூடுதல் வாய்ப்புகளைக் கொடுத்திருப்பது குறிப்பிடத்தக்கது.

English summary
While AIADMK has given eight seats for vanniyars, DMK has allotted four. DMK has allotted each six seats each for gounders and thevars. With seven reserved constituencies in the state, the main fronts have fielded seven dalits candidates each.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X