அரவக்குறிச்சி- கே.சி.பி, தஞ்சை - அஞ்சுகம், திருப்பரங்குன்றம்- சரவணன்.. வேட்பாளர்களை அறிவித்தது திமுக
சென்னை: அரவக்குறிச்சி, தஞ்சாவூர், திருப்பரங்குன்றத்திற்கு திமுக வேட்பாளர்கள் அறிவிக்கப்பட்டுள்ளனர். அரவக்குறிச்சி தொகுதிக்கு கே.சி. பழனிச்சாமி, தஞ்சாவூர் தொகுதிக்கு அஞ்சுகம் பூபதி என முந்தைய வேட்பாளர்களே அறிவிக்கப்பட்டுள்ளனர். திருப்பரங்குன்றம் தொகுதிக்கு புதுமுகமாக அதே தொகுதியைச் சேர்ந்த டாக்டர் சரவணன் அறிவிக்கப்பட்டுள்ளார்.
தஞ்சாவூர், அரவக்குறிச்சி, திருப்பரங்குன்றம் ஆகிய 3 சட்டப்பேரவைத் தொகுதிகளுக்கு நவம்பர் 19ம் தேதி தேர்தல் நடைபெறும் என தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது. ஆளுங்கட்சியான அதிமுக, 3 தொகுதிகளுக்கும் வேட் பாளர்களை அறிவித்துள்ளது. அதன்படி தஞ்சாவூரில் எம்.ரெங்கசாமி, அரவக்குறிச்சியில் வி.செந் தில் பாலாஜி, திருப்பரங்குன்றம் தொகுதியில் ஏ.கே.போஸ் ஆகியோர் போட்டியிடுகின்றனர்.

3 தொகுதிகளி லும் போட்டியிட விருப்பம் தெரிவித்து நேற்று மாலை வரை23 பேர் திமுகவில் மனு அளித்துள்ளனர். அவர்களிடம் திமுக தலைவர் கருணாநிதி, பொதுச்செயலாளர் க.அன்பழகன், பொருளாளர் மு.க.ஸ்டாலின், முதன்மைச் செயலாளர் துரை முருகன் ஆகியோர் இன்று நேர் காணல் நடத்தினர்.
அரவக்குறிச்சியில் ஏற்கனவே போட்டியிட்ட கே.சி.பழனிச்சாமி தஞ்சையில் டாக்டர் அஞ்சுகம் பூபதி திருப்பரங்குன்றத்தில் போட்டியிட்டு தோல்வியடைந்த மு.மணிமாறன் ஆகியோர் மீண்டும் போட்டியிட வாய்ப்புகள் அதிகம் என திமுக வட்டாரங்கள் தெரிவித்தன. எதிர்பார்க்கப்பட்டது போலவே அரவக்குறிச்சியில் ஏற்கனவே போட்டியிட்ட கே.சி.பழனிச்சாமி தஞ்சையில் டாக்டர் அஞ்சுகம் பூபதி வேட்பாளர்களாக அறிவிக்கப்பட்டுள்ளனர்.
திருப்பரங்குன்றத்தில் வலுவான வேட்பாளரை நிறுத்த ஸ்டாலின் விரும்புவதாகக் கூறப்பட்டது. அதன்படி அதே தொகுதியைச் சேர்ந்த டாக்டர் சரவணன் என்பவரை வேட்பாளராக அறிவித்துள்ளனர். இவர் இந்த தொகுதி மக்களால் நன்கு அறியப்பட்டவர்.
கடந்த ஆண்டு வரை மதிமுக புறநகர் மாவட்ட செயலாளராக பதவி வகித்தவர் டாக்டர் சரவணன். அதற்கு முன்பு திமுகவில் இருந்தார். பின்னர் அந்தக் கட்சியில் இருந்து விலகி மதிமுகவில் இணைந்தார். அக்கட்சியில் இருந்து விலகி பாஜகவில் இணைந்தார். பாஜகவில் சிறிது காலம் பணியாற்றி வந்த சரவணன், பாஜகவில் இருந்து விலகி திமுகவில் இணைந்தார் அவருக்கு இடைத்தேர்தலில் போட்டியிட வாய்ப்பு அளிக்கப்பட்டுள்ளது.
அரவக்குறிச்சி- கே.சி.பி, தஞ்சை - அஞ்சுகம், திருப்பரங்குன்றம் - சரவணன்.. வேட்பாளர்களை அறிவித்தது திமுக #DMK https://t.co/6AwdWlso7m pic.twitter.com/JncER6NL3Q
— Oneindia Tamil (@thatsTamil) October 21, 2016
மூன்று தொகுதிகளுக்கும் அதிமுக, திமுக வேட்பாளர்கள் அறிவிக்கப்பட்டதை அடுத்து தேர்தல் களம் பரபரப்பான கட்டத்தை எட்டியுள்ளது.
-
“முஸ்லீம் மக்களை காப்பாற்றும் லட்சணம் இதுதானா?" TVK + IUML கட்சிகளை லெஃப்ட் ரைட் வாங்கிய திமுக -
காங். துரோகம்.. மனக்காயத்தில் தொண்டர்கள்! இந்திய கூட்டணி கூட்டத்தில் பங்கேற்க மாட்டோம்! - திமுக -
“ஒரு இயக்கம்.. இன்னொரு இயக்கத்தின் சின்னத்தில் போட்டியிடக்கூடாது” - துரை வைகோ! -
திமுக நாசமா போக காரணமே நாமதான்..ஒரிஜினல் திமுககாரன வளர்த்து விடுங்க! மேடையில் வெடித்த மாஜி மூர்த்தி! -
தாத்தா காலத்து பாலிடிக்ஸ் வேலைக்கு ஆகாது! உதய் போடும் மாஸ்டர் ப்ளான்! இனி Gen Z ஸ்டைல் தானாமே! -
"இது அதுல்ல?.. ஜனநாயகத்தை சிதைப்பதில் பாஜகவும் தவெகவும் ஒண்ணு” - திமுக சரமாரி அட்டாக்! -
உதயநிதிக்கு ஸ்டாலின் சொன்ன நோ! செயல் தலைவர் பதவி கிடையாது.. கூர்க் ரகசிய மீட்டிங்கில் முடிவு? -
அரசியல் சதுரங்கத்தின் அசாத்திய மூளை.. நவீன தமிழகத்தின் சிற்பி! யார் இந்த ‘கலைஞர்’ கருணாநிதி? -
"கடைசி மூச்சு வரை உங்களுக்காக உழைப்பேன்!" - கலைஞர் கருணாநிதியின் இறுதிப் பேருரை.. என்ன பேசினார்? -
ராஜாக்கள் மந்திரியானால் இப்படித்தான்! டி.ஆர்.பி ராஜாவுக்கு எதிராக கிளம்பிய மா.செ.க்கள்! -
கை கால் ஆட்டி பேசி..சட்டமன்றத்தில் எங்க போச்சு BRO உங்க BODY LANGUAGE விஜய்யை விடாமல் அடித்த ஆ.ராசா! -
ஸ்டாலினை ஓரங்கட்டிவிட்டு விஜய்யை வாரி அணைத்த ராகுல் காந்தி! பின்னணியில் டெல்லி மாஸ்டர் பிளான்












Click it and Unblock the Notifications