சென்னையில் 4 மாவட்டச் செயலாளர்கள் பதவியைப் பிடிக்க திமுகவில் கடும் போட்டி
சென்னை: சென்னையில் 4 மாவட்டச் செயலாளர்கள் பதவியைப் பிடிக்க திமுகவில் கடும் போட்டி நிலவி வருகிறது.
வட சென்னை மாவட்டம் வடக்கு, கிழக்கு என்று பிரிக்கப்பட்டுள்ளது. இதில் வட சென்னை மாவட்டச் செயலாளர் பதவியைப் பிடிக்க முன்னாள் எம்எல்ஏ ரெங்கநாதனுக்கும் முன்னாள் திருவள்ளூர் மாவட்டப் பொறுப்பாளர் சுதர்சனத்துக்கும் இடையே கடும் போட்டி நிலவுகிறது.

அதே போல கிழக்கு மாவட்டச் செயலாளர் பதவியைப் பிடிக்க சேகர் பாபு முயன்று வருகிறார். இவருக்கு ஸ்டாலினின் ஆதரவு இருந்தாலும் திமுகவிலேயே ஒரு தரப்பின் கடும் எதிர்ப்பும் நிலவுகிறது. காரணம், இவர் அதிமுகவில் இருந்து வந்தவர் என்பதோடு அதிமுகவில் இருந்தபோது சட்டசபையில் திமுக தலைவர் கருணாநிதியையே திட்டியபடி அடிக்கப் பாய்ந்தவர் என்பதை நினைவுகூறுகின்றனர் இவரது எதிர்ப்பாளர்கள்.
அதே போல தென் சென்னையைப் பொறுத்தவரை இந்த மாவட்டம் தெற்கு, மேற்கு என பிரிக்கப்பட்டுள்ளது.
இதில் மேற்கு மாவட்டத்தில் ஜெ.அன்பழகனுக்கு போட்டியாக கு.க.செல்வம் முட்டி மோதுகிறார். ஆனாலும் அன்பழகனுக்கு கட்சியினர் மத்தியிலும் மாவட்ட நிர்வாகிகள் மத்தியிலும் எப்போதுமே தனிப்பட்ட செல்வாக்கு உண்டு.
மனதில் பட்டதை பேசிவிடுவார், எதையும் மறைக்க மாட்டார், தவறுகளை சுட்டிக் காட்டுவார் என்பதால் கருணாநிதியிடமும் அன்பழகனுக்கு தனி இடம் உண்டு. ஆனாலும் இவருக்கு எதிராக செல்வத்தை ஒரு தரப்பு தயார் செய்து கொண்டுள்ளது.
அதே போல தெற்கு மாவட்டத்துக்கு முன்னாள் மேயர் மா.சுப்பிரமணியன் மற்றும் தனசேகரன் இடையே கடும் போட்டி நிலவுகிறது.
கே.கே.நகர், சைதாப்பேட்டை, வேளச்சேரியில் தனசேகரனுக்கு பெருவாரியான ஆதரவு கிடைத்துள்ளது. ஆனால், ஸ்டாலினுடனான நெருக்கத்தை மட்டுமே முன் வைத்து மா.சுப்பிரமணியன் பதவியைப் பிடிக்க முயல்வதாக புகார் எழுந்துள்ளது.
தனசேகரனுக்கு கருணாநிதியின் முழு ஆசிர்வாதம் இருப்பதாகவும் கூறப்படுகிறது. அதே நேரத்தில் மா.சுப்பிரமணியனுக்கு ஸ்டாலினின் ஆதரவு முழுமையாக இல்லை என்கிறார்கள்.
நான் தான் மாவட்டச் செயலாளர், ஸ்டாலினே சொல்லி விட்டார் என்று மா.சுப்பிரமணியன் தரப்பு பரப்பி விட்டதாகவும் இதை ஸ்டாலினே ரசிக்கவில்லை என்றும் சொல்கிறார்கள்.
இதனால் இந்த மாவட்டத் தலைவர் பதவியைப் பிடிக்கப் போவது யார் என்பதில் பெரும் சஸ்பென்ஸ் நிலவுகிறது.
-
4 தொகுதி இடைத்தேர்தலை புறக்கணிக்க திமுக முடிவு? ஸ்டாலினின் ராஜதந்திரம்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
ஸ்டாலின் குடகு பயணம்.. திமுகவில் நடக்கும் பெரிய மாற்றம்.. கூண்டோடு தூக்கப்படும் தலைகள்! பின்னணி -
கை கால் ஆட்டி பேசி..சட்டமன்றத்தில் எங்க போச்சு BRO உங்க BODY LANGUAGE விஜய்யை விடாமல் அடித்த ஆ.ராசா! -
உதயசூரியன் சின்னத்தில் போட்டியிட திமுக நிர்பந்தித்தது! ஜூன் 27ல் முக்கிய முடிவு! கொதித்து பேசிய வைகோ -
திமுகவை குறை கூறுவதால்.. சட்டம் ஒழுங்கு பிரச்சனையை மக்கள் மறக்க மாட்டார்கள்.. கனிமொழி கொடுத்த பதில்! -
Gen Z மீட்டிங் நடத்திய திமுக.. தவெக பலமான இடமே வேறு.. நெட்டிசன்கள் சொல்லும் விஷயம் -
இதாம்லே ட்விஸ்டு.. துண்டை போட்ட உடன்பிறப்புகள்! நழுவிய தவெக நிர்வாகிகள்! விஜய் காதுக்கு போன மேட்டர்! -
அதிமுகவிற்கு ஆதரவாக வந்த திமுக.. முதல்வர் விஜய்க்கு எதிராக வியூகம்.. கவனிச்சீங்களா -
வேளாங்கண்ணி பேராலயத்துக்கு வந்த சென்னை மருத்துவ மாணவி.. யாருக்குமே இப்படி ஆகக்கூடாது -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
வாட்டி எடுத்த வெயில்! வேலூரில் அதிகபட்சமாக 106°F பதிவு! 15 இடங்களில் செஞ்சுரி!












Click it and Unblock the Notifications