டெல்லி விசிட் எதிரொலி... உடையும் திமுக கூட்டணி... வெளியேறும் காங், விசிக
திமுக கூட்டணியில் இருந்து காங்கிரஸ், விடுதலை சிறுத்தைகள் வெளியேறுகின்றன.
Recommended Video

சென்னை: தமிழக அரசியல் களத்தில் அதிர்வலைகள் ஏற்பட தொடங்கிவிட்டன. திமுகவின் மூன்றாவது அணி முயற்சி அரசியல் களத்தை மாற்ற தொடங்கியுள்ளது.
காங்கிரஸை கூட்டணியில் இருந்து எப்படியாவது வெளியேற்ற வேண்டும் என்பது திமுக செயல் தலைவர் ஸ்டாலின் தரப்பின் விருப்பம். திமுக கூட்டணியை விட்டு வெளியேறி தினகரனை தாங்கிப் பிடிக்க வேண்டும் என்பது தமிழக காங்கிரஸ் கமிட்டி தலைவர் திருநாவுக்கரசரின் முயற்சி.

இந்த இரண்டுக்கும் சரியான வாய்ப்பாக அமைந்துள்ளது திமுகவின் 3-வது அணி முயற்சி. பாஜக, காங்கிரஸ் அல்லாத கட்சிகளை ஒருங்கிணைக்கும் சந்திரசேகர ராவ், மமதா பானர்ஜியின் முயற்சிகளில் திமுகவும் தீவிரமாக கை கோர்த்திருக்கிறது.
இது திமுக கூட்டணியில் இருந்து காங்கிரஸை தானாக வெளியேற்ற வைக்கும் முயற்சி என்பதை டெல்லி மேலிடம் உணர்ந்திருக்கிறது. அதேபோல கடந்த காலங்களில் விடுதலை சிறுத்தைகளை ஸ்டாலின் தரப்பு ஒரு பொருட்டாகவே மதிக்கவில்லை என்கிற குமுறல் இருந்து வந்தது.
பின்னர் பிரச்சனைகளின் அடிப்படையில் திமுகவின் அனைத்து கட்சி கூட்டங்களுக்கு சிறுத்தைகளும் வரவழைக்கப்பட்டனர். ஆனால் காங்கிரஸுக்கு எதிரான திமுகவின் நிலைப்பாட்டை விடுதலை சிறுத்தைகள் விரும்பவில்லை.
இந்நிலையில் திமுகவை சீண்டும் வகையில் டெல்லியில், எங்கே முடிந்தால் எங்களுடன் கூட்டணியே இல்லை என திமுக சொல்லட்டும் என சீறினார் திருநாவுக்கரசர். அதேபோல டெல்லியில் சிபிஎம் பொதுச்செயலாளர் சீதாராம் யெச்சூரி, காங்கிரஸ் தலைவர் ராகுலை திருமாவளவன் சந்தித்தார். அத்துடன் காங்கிரஸ் தலைமையிலான கூட்டணியில் மட்டுமே இருப்போம் என திட்டவட்டமாக தெரிவித்துவிட்டார் திருமாவளவன்.
இதனால் திமுக கூட்டணி உடைவது உறுதியாகி இருக்கிறது. தற்போதைய நிலையில் காங்கிரஸ், விடுதலைச் சிறுத்தைகள் ஆகியவற்றை திமுக கூட்டணியில் இருந்து வெளியேறுவதற்கான கதவுகளை அண்ணா அறிவாலயம் வேகமாகவே திறந்துவிட்டிருக்கிற என்பதுதான் களநிலவரம்.












Click it and Unblock the Notifications