கூட்டணி கதவு மூடப்பட்டுவிட்டது... எந்த கட்சிக்கும் இனி அழைப்பு இல்லை: மு.க. ஸ்டாலின்

லோக்சபா தேர்தலில் தேமுதிகவை வளைத்துப் போட திமுக பகீரத முயற்சிகளை மேற்கொண்டது. ஆனால் அது பலனளிக்கவில்லை. திமுக அணியில் தேமுதிக இடம்பெறுமா என்ற சந்தேகம் நீடித்து வந்தது.
இந்த நிலையில் கிருஷ்ணகிரியில் நேற்று பல்வேறு கட்சிகளில் இருந்து 4 ஆயிரத்து 806 பேர் விலகி தி.மு.க.வில் இணையும் விழா நடைப்பெற்றது. அந்த நிகழ்ச்சியில் மு.க. ஸ்டாலின் பேசியதாவது:
லோக்சபா தேர்தலுக்காக அனைத்து கட்சிகளும் தயாராகிக் கொண்டிருக்கின்றன. திருச்சியில் நடைபெற்ற மாநாட்டிற்கு பிறகு மற்றவர்கள் தி.மு.க மீது கொண்டிருந்த கண்ணோட்டம் மாறிவிட்டது. தி.மு.க.வின் செல்வாக்கு பல மடங்கு உயர்ந்திருப்பதை திருச்சி மாநாடு உறுதி செய்துள்ளது.
தி.மு.க. தற்போது 20 தொகுதிகளுக்கான வேட்பாளர் நேர்காணலை நடத்தி முடித்துள்ளது. நேர்காணலின் போது கலந்துகொண்ட தி.மு.க.வினர் அனைவரும் ஒட்டுமொத்தமாக தெரிவித்த கருத்து, தி.மு.க. கூட்டணி தமிழகம் மற்றும் புதுச்சேரியில் உள்ள 40 தொகுதிகளிலும் கண்டிப்பாக வெற்றி பெறும்.
அதற்கு தி.மு.க தற்போது அமைத்துள்ள கூட்டணியே போதுமானதாகும் என்பதுதான். எனவே தி.மு.க.வின் கூட்டணி கதவுகள் மூடப்பட்டு விட்டது. இனிமேல் எந்த கட்சிக்கும் அழைப்பு கிடையாது.
இவ்வாறு மு.க. ஸ்டாலின் தெரிவித்தார்.
இதனால் திமுக தற்போதுள்ள விடுதலை சிறுத்தைகள், புதிய தமிழகம், மனித நேய மக்கள் கட்சி, இந்திய தேசிய லீக் கட்சி போன்றவற்றுடனேயே தேர்தலை சந்திக்கும் என்றே தெரிகிறது.
-
பிளான் A எடப்பாடி.. பிளான் B திருமா.. திமுக பிளான்.. புட்டு புட்டு வைத்த காதர் மொகிதீன் -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
தேர்தல் புயலில் சேதாரமான கோட்டை.. படக்கென எழுந்த ’திமுக’ குதிரை.. படுத்தே கிடக்கும் ’அதிமுக’ யானை! -
திட்டமிட்டு விஜய்யுடனான சந்திப்பை அமித்ஷா ரத்து செய்தார்.. திமுகவின் முரசொலி விமர்சனம் -
Gen Z DMK Meetup.. விஜய் ஏற்படுத்திய ‘இன்ஸ்டா’ புயல்! இளைய தலைமுறையை நெருங்கும் திமுக! கைகொடுக்குமா? -
10ல் 1ல் மட்டுமே வெற்றி.. எனன் நடந்தது? தேமுதிக மா.செக்களை அழைத்து விசாரிக்கும் பிரேமலதா விஜயகாந்த் -
ஸ்டாலினே சொன்னா தான் உண்டு.. திமுக - அதிமுக கூட்டணி முயற்சி நடந்ததா? 30 நாளாய் நீடிக்கும் மர்மம்! -
விஜய்க்கு விஷப் பரிட்சை..திமுகவுக்கு அக்னி பரிட்சை! இடைத் தேர்தலுக்கு ரெடியான கழகங்கள்! அதிமுக அமைதி -
புதிய தலைமுறை சேனல் நீக்க விவகாரம்: ஜனநாயக குரல்வளையை நெறிக்காதீர்கள்..விஜய் அரசுக்கு அதிமுக கண்டனம் -
தொங்கலில் விடப்பட்ட சிங்கப்பெண் அதிரடிப்படை! தவெக அரசு தீவிரத்தை உணரவில்லை என கனிமொழி சாடல் -
“MLA-களை பிடிப்பதை விட்டுவிட்டு.. போலீஸை ஆக்கப்பூர்வமா செயல்பட வைக்கவும்!” விஜய்க்கு உதயநிதி அட்வைஸ் -
பரந்தூர்-க்கு சொன்ன நோ.. சென்னை மக்களுக்கு அடுத்த அதிர்ச்சி! சீட்டுக்கட்டுப்போல் சரியும் மெகா திட்டங்கள்!












Click it and Unblock the Notifications