வாக்குப்பதிவின்போது பிரச்சாரம் செய்கிறார் அதிமுக வேட்பாளர் வளர்மதி – திமுக குற்றச்சாட்டு
Subscribe to Oneindia Tamil
திருச்சி: ஸ்ரீரங்கம் சட்டமன்றத் தொகுதிக்கு இன்று இடைத்தேர்தல் நடைபெற்று வருகின்றது. இதற்கான வாக்குப்பதிவு காலை 7 மணிக்கு துவங்கி விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.
இந்நிலையில் ஸ்ரீரங்கம் ஆண்கள் மேல்நிலைப்பள்ளியில் நடந்த வாக்குப்பதிவை அ.தி.மு.க வேட்பாளர் வளர்மதி பார்வையிட்டார். பார்வையிட்டபோது, வாக்களிக்க வந்திருந்த வாக்காளர்களை நோக்கி கையெடுத்து கும்பிட்டப்படியே இருந்தார்.

அப்போது அங்கிருந்த திமுக பிரமுகர்கள், ஆளும்கட்சி வேட்பாளர் வாக்குப்பதிவு நடைபெறும் இடத்தில் வாக்குப்பதிவை பார்வையிட வருவதுபோல வந்து, வாக்காளர்களை நோக்கி கையெடுத்து கும்பிட்டு வாக்கு சேகரிக்கிறார். இருப்பினும் மக்கள் விழிப்புணர்வுடன் உள்ளனர். அவர்கள் தங்கள் வாக்கினை நேர்மையாக செலுத்துவார்கள் என்ற நம்பிக்கை உள்ளது என்று தெரிவித்தனர்.












Click it and Unblock the Notifications