நள்ளிரவு 12.20க்கு பூட்டப்பட்ட கருணாநிதி வீட்டு கதவுகள்.. தொண்டர்கள் கலைந்து செல்ல உத்தரவு
Recommended Video

சென்னை: கருணாநிதியின் கோபாலபுரம் வீட்டு கதவு இரவு 12.20 மணியளவில் பூட்டப்பட்டது. எனவே இரவு இனிமேல் தலைவர்கள் யாரும் பார்க்க வர வாய்ப்பில்லை என்று தெரிகிறது.
கருணாநிதி உடல் நிலை குறித்த வதந்தியால் கோபாலபுரம் இல்லத்தில் தொண்டர்கள் ஆயிரக்கணக்கில் கூடிவிட்டனர். இதையடுத்து அந்த பகுதியில் பரபரப்பு தொற்றிக்கொண்டது.

இரவு 11.30 மணிக்கெல்லாம் மு.க.ஸ்டாலின் கோபாலபுரம் இல்லத்தில் இருந்து ஆழ்வார்பேட்டை இல்லத்திற்கு கிளம்பிவிட்டார். ஆனால், தொண்டர்கள் கலையவில்லை. எவ்வளவோ வேண்டுகோள்விடுத்தும் தொண்டர்கள் கருணாநிதியை வாழ்த்தி கோஷமிட்டபடி இருந்தனர்.
எங்கள் குரல் கருணாநிதி காதில் விழுந்தாலே போதும், அவர் மருந்து மாத்திரை சக்திகளையும் மீறி எழுந்துவிடுவார் என அவர்கள் ஆவேசமாக கூறினர். இதையடுத்து இரவு 12.20 மணியளவில் கோபாலபுரம் வீட்டு இரும்பு கேட் இழுத்து பூட்டப்பட்டது. வெளியே போடப்பட்டிருந்த விளக்குகளை இல்லத்தினர் அணைத்தனர். எனவே, தொண்டர்கள் பலரும் வீடு திரும்பினர்.

தொண்டர்கள் கலைய உத்தரவு:
இதற்கிடையே, திமுக தலைவர் கருணாநிதி ஓய்வில் இருப்பதால் இடையூறு செய்யாமல் கோபாலபுரம் பகுதியில் குழுமியுள்ள தொண்டர்கள் கலைந்து செல்லுமாறு திமுக தலைமைக்கழகம் தொண்டர்களுக்கு வேண்டுகோள் விடுத்துள்ளது.
-
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன? -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்! -
காலியான ராஜ்யசபா எம்பி பதவி! இன்று வேட்புமனு தாக்கல் தொடக்கம்! தவெகவின் முதல் எம்பி யார்?












Click it and Unblock the Notifications