மருத்துவமனையில் சிகிச்சை பெறும் சோ ராமசாமியை நேரில் சந்தித்து நலம் விசாரித்த கருணாநிதி
சென்னை: உடல்நலக்குறைவால் மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுவரும் மூத்த பத்திரிகையாளர் 'சோ' ராமசாமியை நேரில் சந்தித்து நலம் விசாரித்தார் திமுக தலைவர் கருணாநிதி.
மூச்சு திணறல் உள்ளிட்ட சில பிரச்சினைகளால், ஆயிரம் விளக்கு பகுதியிலுள்ள அப்போலோ மருத்துவமனையில் சோ ராமசாமி சிகிச்சைக்காக சேர்க்கப்பட்டுள்ளார். அவருக்கு ஐசியூவில் வைத்து சிகிச்சையளிக்கப்படுகிறது. அதே மருத்துவமனையில்தான், திமுக தலைவர் கருணாநிதியின் மகள் கனிமொழிக்கும், தைராய்ட் அறுவை சிகிச்சை மேற்கொள்ளப்பட்டது.

அறுவை சிகிச்சைக்கு பின் மருத்துவமனையில் ஓய்வு பெற்று வரும், கனிமொழியை நேற்றிரவு கருணாநிதி சந்தித்து நலம் விசாரித்தார். பின்னர் ஐசியூவில் சிகிச்சை பெற்று வரும் 'சோ' வையும் நேரில் சந்தித்து நலம் விசாரித்தார்.
சுமார் 10 நிமிடங்கள் இந்த சந்திப்பு நடைபெற்றது. உடன் ராசாத்தி அம்மாள், துரைமுருகன், ஆ.ராசா, எ.வ.வேலு போன்றோரும் இருந்தனர். கருணாநிதியும், சோவும் நீண்ட கால நண்பர்களாக இருந்தவர்கள். ஆனால், நட்பு பிளவுபட்ட நிலையில், கடந்த பல ஆண்டுகளாக கருணாநிதியை நையாண்டி செய்து தனது துக்ளக் இதழில் எழுதி வருபவர் சோ. சமீபகாலமாகவே, ஜெயலலிதா ஆதரவு நிலைப்பாடுடையவராக அறியப்படும் சோவை கருணாநிதி சந்தித்து நலம் விசாரித்திருப்பது குறிப்பிடத்தக்கது.
-
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன? -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்! -
காலியான ராஜ்யசபா எம்பி பதவி! இன்று வேட்புமனு தாக்கல் தொடக்கம்! தவெகவின் முதல் எம்பி யார்?












Click it and Unblock the Notifications