சகோதரி அஞ்சலி நிகழ்ச்சியில் கண்ணீருடன் அழகிரியை சந்தித்த கருணாநிதி.. கண்கள் பனிக்குமா?
சென்னை: முன்னாள் அமைச்சர் மாறனின் தாயார் சண்முகசுந்தரம்மாள் மறைவுக்கு, அஞ்சலி செலுத்த சென்ற இடத்தில், தி.மு.க. தலைவர் கருணாநிதிக்கும், முன்னாள் மத்திய அமைச்சர் அழகிரிக்கும் இடையே, சந்திப்பு நடந்துள்ளதாக வெளியாகி உள்ளது.
மதுரை சுற்றுவட்டார மாவட்டங்களில் திமுகவின் முக்கிய புள்ளியாக விளங்கிய அழகிரி மீது,
தி.மு.க. தலைமை, கடந்த ஆண்டு ஜனவரி, 14ம் தேதி, நடவடிக்கை எடுத்து, கட்சியை விட்டு தற்காலிகமாக நீக்கியது.

நிரந்தர நீக்கம்
அழகிரியின் விமர்சனம் அதிகமானதை அடுத்து, இரு மாதங்களில் அதாவது மார்ச், 25ல், அவர், கட்சியை விட்டு நிரந்தரமாக நீக்கப்பட்டார். தன்பின், கருணாநிதியை சந்திக்க அழகிரி, பிடிவாதமாக மறுத்துவந்தார். கடந்த மார்ச், 3ம் தேதி, சென்னையில், அழகிரியின் தம்பி தமிழரசு மகன் அருள்நிதியின் திருமண நிச்சயதார்த்தம் நடந்தது. அந்த விழாவுக்கு, அழகிரி, குடும்பத்துடன் வந்திருந்தார்.

அன்பழகன் விருப்பம்
அந்த நிகழ்ச்சியில், ஒரே பகுதியில் இருவரும் இருந்த போதிலும், கருணாநிதியும், அழகிரியும் ஒருவரை ஒருவர் சந்திக்கவில்லை. அப்போது நடந்த சமரச முயற்சியும், தோல்வியில் முடிந்தது. இதற்கிடையில், கடந்த ஏப்ரல், 13ம் தேதி, உடல்நலம் பாதிக்கப்பட்டு, வீட்டில் ஓய்வில் இருந்த கட்சியின் பொதுச் செயலர் அன்பழகனை சந்தித்தார் அழகிரி. அன்பழகன் தலையீட்டால் அழகிரியை கட்சியில் சேர்ப்பதற்கான பேச்சில் முன்னேற்றம் ஏற்பட்டுள்ளது

கையை பிடித்து பேசிய கருணாநிதி
இந்நிலையில்தான், கருணாநிதியின் அக்கா சண்முக சுந்தரம்மாள் காலமானார். அதையடுத்து, தனது அத்தைக்கு அஞ்சலி செலுத்த அழகிரி சென்றார். அங்கே மிகுந்த சோகத்துடன் இருந்த கருணாநிதியிடம் சென்று, அழகிரி பேசியுள்ளார். அப்போது அவர், அழகிரியின் கையை பிடித்தபடி, பேசியதாக கூறப்படுகிறது. குறிப்பாக, சண்முக சுந்தரம்மாளுக்கும், சிறு வயதில் அழகிரிக்கும் இடையேயான பாசத்தை குறிப்பிட்டு காட்டி உருக்கமாக பேசியுள்ளாராம் கருணாநிதி.

கண்டுகொள்ளாத ஸ்டாலின்
கண்ணீருடன் நடந்த இந்த சந்திப்பின் போது, ஸ்டாலினும் பக்கத்தில்தான் இருந்துள்ளார். ஆனால், அழகிரி மற்றும் ஸ்டாலின் இருவரும், ஒருவரை மற்றொருவர் கண்டுகொள்ளவில்லை என்று கூறப்படுகிறது. தேர்தல் நெருங்கும் நேரத்தில், தென் மாவட்டங்களில் கட்சியை ஒற்றுமைப்படுத்த வசதியாக அழகிரியை மீண்டும் கட்சியில் சேர்த்துக்கொள்ள கருணாநிதி விரும்புவதாக கூறப்படுகிறது. எனவே விரைவிலேயே கருணாநிதியின், கண்கள் பனிக்க வாய்ப்புள்ளது.
-
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்! -
தொங்கலில் விடப்பட்ட சிங்கப்பெண் அதிரடிப்படை! தவெக அரசு தீவிரத்தை உணரவில்லை என கனிமொழி சாடல் -
புதிய தலைமுறை சேனல் நீக்க விவகாரம்: ஜனநாயக குரல்வளையை நெறிக்காதீர்கள்..விஜய் அரசுக்கு அதிமுக கண்டனம் -
"மனக் குழப்பத்தில் மனோ தங்கராஜ்".. திமுகவுக்குள் பரபரப்பை உண்டாக்கிய அனிதா ராதாகிருஷ்ணன் பேச்சு -
சிவக்குமார் விஜய்யை பாராட்டி பேச பேச சத்யராஜ் கொடுத்த ரியாக்ஷன் பாருங்க.. அமைதியாக கவனிக்கும் திமுக -
“MLA-களை பிடிப்பதை விட்டுவிட்டு.. போலீஸை ஆக்கப்பூர்வமா செயல்பட வைக்கவும்!” விஜய்க்கு உதயநிதி அட்வைஸ் -
தமிழ்த்தாய் வாழ்த்து விவகாரத்தை கையில் எடுத்த விஜய்.. உள்துறை அமைச்சகத்திடம் சொல்லுங்க.. விஜய் வைத்த கோரிக்கை! -
வெறும் 10 நிமிடங்கள்தான்.. உடனே வெளியே வந்த விஜய்! மோடி உடனான சந்திப்பில் இப்படி நடந்ததே இல்லை! -
“காங்கிரஸ், கம்யூனிஸ்ட்களை விமர்சிக்க அவர்களுக்கு துணிச்சல் இல்லை”.. திருமாவளவன் அட்டாக்! -
டோட்டலாக தனிமைப்படுத்தப்பட்ட திமுக! உச்சக்கட்ட ஹேப்பியில் பாஜக.. தவெக விஜய் அரசுக்கு சிக்கலா? -
மோடி, நிர்மலா சீதாராமன் சந்திப்பின்போது.. கூடவே போன ஜோசியர்! சலசலப்பை கிளப்பிய விஜய்! -
97 ரன்களில் அவுட்.. ஒட்டுமொத்த மைதானமும் சோகம்.. உலக சாதனையை தவறவிட்ட வைபவ் சூர்யவன்ஷி!












Click it and Unblock the Notifications