ஸ்டாலினுக்கு பயம்.. தினகரன் கிண்டல்
சென்னை: இடைத்தேர்தலை கண்டு திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் பயப்படுவதாக அம்மா மக்கள் முன்னேற்றக் கழகத்தின் துணைப் பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் விமர்சித்தார்.
சென்னையில் செய்தியாளர்களிடம் பேசிய தினகரன் இதுகுறித்து கூறியதாவது:
இடைத்தேர்தலை கண்டு ஸ்டாலின் அச்சப்படுகிறார். திருப்பரங்குன்றத்தில் தேர்தல் நடத்தக்கூடாது என்று ஏற்கனவே வழக்கு தொடுத்த ஸ்டாலின், இப்போது தேர்தல் நடத்தப்பட வேண்டும் என்றும் சொல்கிறார்.
[ நேரம் வந்துவிட்டது.. வேகமாக நெருங்கும் பேரழிவு.. 2030க்கு நாள் குறித்த ஐநா! ]

சரியில்லை
திருப்பரங்குன்றத்தில் இதற்கு முன்பாக நவம்பர் மாதத்தில் தான் இடைத்தேர்தல் நடைபெற்றது. எனவே மழையை காரணம் காட்டி இடைத்தேர்தலை தள்ளி வைத்திருப்பது என்பது சரியான நடைமுறை கிடையாது.

அரசியல்
வானிலை ஆய்வு மையம் கூட அரசியல் செய்கிறது என்ற எண்ணம் இதன் மூலமாக ஏற்படுகிறது. கல்வித் துறையில் நிறைய புகார்கள் வருவதாக முன்னாள் பொறுப்பாளர் ஆளுநர் வித்யாசாகர் ராவ் என்னிடம் தெரிவித்து இருந்தார். இவ்வாறு டிடிவி தினகரன் தெரிவித்தார்.

ரெட் அலர்ட் வாபஸ்
தமிழகத்தில் மிகுந்த கன மழை இருப்பதாக இந்திய வானிலை இலாகா ரெட் அலர்ட் எச்சரிக்கை கொடுத்திருந்தது. ஆனால், பிறகு அதை வாபஸ் பெற்றுக்கொண்டது. கன மழையை காரணம் காட்டி, இடைத் தேர்தல் அறிவிப்பை வெளியிட வேண்டாம் என்று தமிழக தலைமைச் செயலாளர், தலைமை தேர்தல் ஆணையத்திற்கு கடிதம் எழுதியிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

ஸ்டாலின் வலியுறுத்தல்
முன்னதாக ஸ்டாலின் வெளியிட்டிருந்த அறிக்கையில், திருப்பரங்குன்றம் மற்றும் திருவாரூர் சட்டசபை இடைத் தேர்தலை நடத்த வேண்டும் என்று தேர்தல் ஆணையத்திற்கு கோரிக்கை விடுத்திருந்தார். ஒன்றரை ஆண்டுகளாக உள்ளாட்சித் தேர்தலை நடத்தாமல் உள்ள நிலையில் இடைத் தேர்தலை நடத்தாமல் இருப்பது ஜனநாயகத்திற்கு எதிரானது என்று ஸ்டாலின் கண்டனம் தெரிவித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.












Click it and Unblock the Notifications