திமுக - காங்கிரஸ் தொகுதி பங்கீடு ஓரிரு நாளில் இறுதி செய்யப்படும்: ஈ.வி.கே.எஸ். தகவல்
சென்னை: திமுக-வுடனான தொகுதி பங்கீடு குறித்து செவ்வாய் அல்லது புதன்கிழமைகளில் இறுதி செய்யப்பட்டுவிடும் என்று தமிழக காங்கிரஸ் தலைவர் ஈ.வி.கே.எஸ். இளங்கோவன் கூறினார்.
தமிழக சட்டப் பேரவைத் தொடர்பாக காங்கிரஸ் தலைமையகமான சத்தியமூர்த்தி பவனில் அக்கட்சியின் மாநிலத் தலைவர் ஈ.வி.கே.எஸ். இளங்கோவன் தலைமையில் இன்று ஆலோசனை கூட்டம் நடைபெற்றது. இதில் காங்கிரஸ் தேசிய செயலாளர் திருநாவுக்கரசு, தமிழக முன்னாள் காங்கிரஸ் தலைவர்கள் எம்.கிருஷ்ணசாமி, கே.வீ.தங்கபாலு, முன்னாள் எம்எல்ஏ யசோதா உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

பின்னர் செய்தியாளர்களை சந்தித்த ஈ.வி.கே.எஸ். இளங்கோவன் கூறுகையில், நடைபெற உள்ள 2016 சட்டப் பேரவைத் தேர்தலில் திமுக-வுடன் கூட்டணி வைத்துள்ள காங்கிரஸ் கட்சி எத்தனைத் தொகுதிகளில் போட்டியிடப் போகிறது என்பது ஓரிரு நாளில் இறுதி செய்யப்பட்டுவிடும். உடனடியாக, எந்தெந்த தொகுதிகள் என்பதும் முடிவாகிவிடும்.
அதிமுக-வுக்கு எதிராக பாஜக பிரசாரம் செய்வது சந்தர்ப்பவாதமே. ஏனெனில் அதிமுக-வுடன் எப்படியாவது கூட்டணி வைத்துக் கொள்ளவேண்டும் எனக் கடும் முயற்சிகளை பாஜக மேற்கொண்டது. பிரதமர் நரேந்திர மோடி, அருண் ஜேட்லி என மத்தியிலிருந்து பலர் ஜெயலலிதாவைச் சந்தித்து பேசினர்.
இந்த முயற்சிகள் பலனளிக்கவில்லை என்றதும், அதிமுக-வை இப்போது அவர்கள் விமர்சிக்கின்றனர். இது தமிழக அரசின் பொறுப்பற்ற தன்மையையேக் காட்டுகிறது. இதற்காக வருகின்ற தேர்தலில் மக்கள் அதிமுக-வுக்கு சரியான பாடம் புகட்டுவர் என்று அவர் தெரிவித்துள்ளார்.
புதிய மின் திட்டங்களை கொண்டு வருவதற்காக மத்திய அமைச்சர் பியூஸ் கோயல் பலமுறை தொடர்பு கொண்டும், அவரை ஜெயலலிதா சந்திக்க மறுத்ததற்கு அவர் கண்டனம் தெரிவித்தார். மேலும், சட்டப்பேரவை தேர்தல் பிரசாரம் செய்ய காங்கிரஸ் துணை தலைவர் ராகுல் தமிழகம் வருகை தருவார் என்றும், திமுக, காங்கிரஸ் கூட்டணியை விமர்சிக்க பாஜகவுக்கு தகுதியும் இல்லை என்றும் ஈவிகேஎஸ் இளங்கோவன் கூறினார்.
-
“காங்கிரஸ், கம்யூனிஸ்ட்களை விமர்சிக்க அவர்களுக்கு துணிச்சல் இல்லை”.. திருமாவளவன் அட்டாக்! -
திமுகவில் உதயநிதிக்கு செயல் தலைவர் பதவி? மெல்ல நகரும் திட்டம்.. ஸ்டாலின் மேஜையில் ரிப்போர்ட் -
ஒருவழியாக இறங்கி வந்த சித்தராமையா.. ஆனால் அடுத்த நொடியே வைத்த செக்! உச்சக்கட்ட டென்ஷனில் சிவக்குமார் -
ஒட்டுமொத்த தென்னிந்திய அரசியலும் மாறிடுச்சு.. ஒரே மாதத்தில் ராகுல் எடுத்த 3 முடிவுகள்.. முக்கியம் -
விஜய் மீது வெறுப்பில் ராகுல்! டெல்லி ப்ரோக்ராம் கேன்சல்! எம்எல்ஏ வேட்டையால் வேதனையில் டெல்லி தலைகள்! -
முதலமைச்சர் விஜய்யை சந்திக்க வாய்ப்பில்லை! மேயர் பிரியா கறார்! காரணம் இதுதான்! -
"வாயை மூடி பேசவும்" மாவட்டச் செயலாளர்கள் கண்ட்ரோலில் திமுக குழு.. விரக்தியில் அடிமட்ட தொண்டர்கள்! -
திமுகவின் TAPS தேவாமிர்தம்.. இப்போ OPS வேணுமா? கரைவேட்டி கட்டாத கட்சிக்காரர்கள்.. TNGEA விளாசல்! -
“MLA-களை பிடிப்பதை விட்டுவிட்டு.. போலீஸை ஆக்கப்பூர்வமா செயல்பட வைக்கவும்!” விஜய்க்கு உதயநிதி அட்வைஸ் -
சிவக்குமார் விஜய்யை பாராட்டி பேச பேச சத்யராஜ் கொடுத்த ரியாக்ஷன் பாருங்க.. அமைதியாக கவனிக்கும் திமுக -
டெல்லியிலும் கொங்கு சமையல் மணக்கப்போகுது.. முதல்வர் விஜய்க்கு சமைக்கும் மாதம்பட்டி ரங்கராஜ்! -
உதயநிதி வீட்டை கேட்கும் ஆதவ் அர்ஜுனா.. இந்த வீடுதான் வேண்டும்.. கோட்டையில் நீடிக்கும் மல்லுக்கட்டு











Click it and Unblock the Notifications