ஆளுநர் கடிதத்தை சட்டசபையில் படித்துக்காட்ட மறுத்த சபாநாயகர்... திமுக - காங்., வெளிநடப்பு
ஆளுநரிடம் இருந்து வந்த கடிதத்தை சட்டசபையில் சபாநாயகர் படித்து காட்ட மறுத்ததை கண்டித்து திமுகவினர் வெளிநடப்பு செய்துள்ளனர்.
சென்னை: தமிழக சட்டசபையில் எம்எல்ஏக்கள் பண பேர விவகாரம் இன்றும் புயலை கிளப்பியது. எம்எல்ஏக்கள் மீது நடவடிக்கை எடுக்கக் கோரி ஆளுநர் வித்யாசாகர் அனுப்பிய கடிதத்தை விதிப்படி சபாநாயகர் சட்டசபையில் படித்து காட்ட வேண்டும் என்று எதிர்கட்சித்தலைவர் ஸ்டாலின் வலியுறுத்தினார். இதற்கு சபாநாயகர் மறுக்கவே, அதனை கண்டித்து திமுகவினர் வெளிநடப்பு செய்தனர்.
கூவத்தூரில் அதிமுக எம்எல்ஏக்களுக்கு கோடிக்கணக்கான பணம் கொடுக்கப்பட்டதாக சரவணன் எம்எல்ஏ பேசியதாக ஒரு வீடியோ ஒளிபரப்பானது. இது கடந்த 14ஆம் தேதியன்று கூடிய சட்டசபை கூட்டத் தொடரில் எதிரொலித்தது.

இது குறித்த விவாதம் நடத்த வேண்டும் என்று எதிர்கட்சித்தலைவர் ஸ்டாலின் வலியுறுத்தவே திமுகவினர் கூண்டோடு வெளியேற்றப்பட்டனர்.
தினசரியும் சட்டசபையில் இந்த விவகாரம் எதிரொலிக்கிறது. சபாநாயகர் ஆதாரம் கேட்கவே, அதை சிடி வடிவில் சபாநாயகர் அறையில் சென்று ஸ்டாலின் அளித்தார்.
இதனையடுத்து சென்னை வந்த ஆளுநர் வித்யாசாகர் ராவிடம் புகார் மனுவாக சிடியுடன் அளித்தார் ஸ்டாலின். இந்த நிலையில் ஆளுநர் வித்யாசாகர் ராவ், எம்எல்ஏக்கள் பண பேர விவகாரம் தொடர்பாக சட்டசபை சபாநாயகர், செயலருக்கு கடிதம் எழுதியுள்ளார்.
இன்று சட்டசபை கூடிய உடன் கேள்வி நேரம் நடைபெற்றது. கேள்வி நேரம் முடிந்த உடன் நேரமில்லா நேரத்தில் ஆளுநர் கடிதத்தை படித்துக்காட்ட வேண்டும் என்று ஸ்டாலின் வலியுறுத்தினார். அதற்கு சபாநாயகர் மறுக்கவே, இதற்கு கண்டனம் தெரிவித்து திமுக உறுப்பினர்கள் எதிர்கட்சித்தலைவர் ஸ்டாலின் தலைமையில் வெளி நடப்பு செய்தனர். கூடவே கூட்டணி கட்சியான காங்கிரஸ் கட்சி உறுப்பினர்களும் வெளிநடப்பு செய்தனர்.
-
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்! -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
விசில் அடித்து முன்னேறும் கர்நாடகா, ஆந்திரா.. இனி தமிழ்நாடு வேடிக்கை பார்க்கணும்! விஜய் போட்ட பிரேக் -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு -
GH-ல் கடைநிலை ஊழியர்கள் மீது நடவடிக்கை எடுத்த ரமேஷுக்கு அர்ச்சகர்கள் மீது ஆக்ஷன் எடுக்க தாமதம் ஏன்? -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பூந்தமல்லி டூ வடபழனி இனி 20 நிமிடங்களில்.. ஆளில்லா மெட்ரோ ரயில் சேவைக்கு கிடைத்த பச்சை சிக்னல் -
மாடுகளை பலியிட தடை.. நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு! விஜய்க்கு சிபிஎம் வைத்த முக்கிய கோரிக்கை! -
ஆரம்பமே அடி சறுக்கல்.. சிங்கப்பெண் அதிரடிப்படை திட்டத்தின் தொடக்க விழா ரத்து!












Click it and Unblock the Notifications