திடீரென உயர்நிலை செயல் திட்டக் குழுவைக் கூட்டும் திமுக.. நாளை
திமுக உயர்நிலை செயல் திட்டக் குழுக் கூட்டம் நாளை நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
சென்னை: திமுக தனது உயர்நிலை செயல் திட்டக் குழுவைக் கூட்டியுள்ளது. 13ம் தேதி, அதாவது நாளை இக்கூட்டம் நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
திமுகவின் உயர் மட்டக் குழு இதுதான். முக்கிய முடிவுகளை எடுப்பதற்கு முன்பு இந்தக் குழுவின் ஒப்புதல் பெறப்படுவது வழக்கம். இந்த நிலையில் தற்போது இந்தக் கூட்டம் நாளை கூட்டப்பட்டுள்ளதாக கட்சியின் பொதுச் செயலாளர் அன்பழகன் அறிவித்துள்ளார்.

இந்தக் கூட்டத்தில் உயர் நிலை செயல் திட்டக் குழு உறுப்பினர்கள் அனைவரும் தவறாமல் கலந்து கொள்ள வேண்டும் என்றும் அன்பழகன் கூறியுள்ளார். இக்குழுக் கூட்டத்தில் தற்போதயை தமிழக அரசியல் குழப்பம் குறித்து முக்கியமாக விவாதிக்கப்படவுள்ளது. இதில் திமுகவின் நிலைப்பாடு குறித்தும் விவாதிக்கப்படவுள்ளது.
இக்கூட்டத்தில் முக்கிய முடிவுகள் ஏதேனும் எடுக்கப்படுமா என்ற எதிர்பார்ப்பும் எழுந்துள்ளது. முதல்வர் ஓ.பன்னீர் செல்வம் சட்டசபையில் நம்பிக்கை வாக்கு கோரினால் அதை ஆதரிப்பது குறித்து இக்கூட்டத்தில் முடிவெடுக்கப்படலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
திமுக செயல் தலைவராக மு.க.ஸ்டாலின் தேர்ந்தெடுக்கப்பட்ட பின்னர் நடைபெறும் முதல் உயர்நிலை செயல் திட்டக் குழுக் கூட்டம் இது என்பது குறிப்பிடத்தக்கது.
-
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
உதயசூரியன் சின்னத்தில் போட்டியிட திமுக நிர்பந்தித்தது! ஜூன் 27ல் முக்கிய முடிவு! கொதித்து பேசிய வைகோ -
திமுகவை குறை கூறுவதால்.. சட்டம் ஒழுங்கு பிரச்சனையை மக்கள் மறக்க மாட்டார்கள்.. கனிமொழி கொடுத்த பதில்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
"திமுககாரன்னா திமிர் இருக்கணும்".. காரணம் சொல்லி ‘ஜென் ஸி' மீட்டப்பில் பேசிய டிஆர்பி ராஜா -
Gen Z மீட்டிங் நடத்திய திமுக.. தவெக பலமான இடமே வேறு.. நெட்டிசன்கள் சொல்லும் விஷயம் -
Gen Z DMK Meetup.. விஜய் ஏற்படுத்திய ‘இன்ஸ்டா’ புயல்! இளைய தலைமுறையை நெருங்கும் திமுக! கைகொடுக்குமா? -
இந்த லட்சணத்துல உங்களுக்கு பொ.செ பதவி வேற வேணுமா? தேர்தல் தோல்விக்குப் பின் ஸ்டாலின் ஆவேசம் -
கங்கணம் கட்டி சதி பண்ணிருக்கீங்க.. சேகர் பாபுவை போனில் வறுத்து எடுத்த ஸ்டாலின்.. ஷாக் தகவல்! -
“கொளத்தூரில் ஸ்டாலின் தோற்பார் என முன்பே தெரியும்.. திமுகவிடம் சொன்னோம்”.. காதர் மொய்தீன் தடாலடி! -
Ilaiyaraja Birthday: ராஜாவின் ராஜாங்கம் தொடரட்டும்! இளையராஜாவுக்கு ஸ்டாலின் வாழ்த்து -
விஜய்க்கு விஷப் பரிட்சை..திமுகவுக்கு அக்னி பரிட்சை! இடைத் தேர்தலுக்கு ரெடியான கழகங்கள்! அதிமுக அமைதி












Click it and Unblock the Notifications