வாக்கு சீட்டு முறையை திரும்ப கொண்டு வாருங்கள்.. தேர்தல் ஆணையத்தில் திமுக வலியுறுத்தல்
டெல்லி: லோக்சபா தேர்தல் அடுத்த ஆண்டு நடைபெற பல்வேறு விஷயங்களில் சீர்திருத்தங்கள் கொண்டு வர தலைமை தேர்தல் ஆணையம் திட்டமிட்டுள்ளது. அரசியல் கட்சிகளின் ஒத்துழைப்பு இருந்தால்தான் இந்த சீர்திருத்தங்களை அமல்படுத்த முடியும். எனவே, அரசியல் கட்சிகளிடம் இதில் ஒருமித்த கருத்தை உருவாக்க தலைமை தேர்தல் கமிஷன் முடிவு செய்துள்ளது.
இதற்காக தேசிய மற்றும் மாநில கட்சிகளின் ஆலோசனைக் கூட்டத்துக்கு தேர்தல் கமிஷன் இன்று ஏற்பாடு செய்திருந்தது. இந்த கூட்டத்தில் அங்கீகரிக்கப்பட்ட 7 தேசிய கட்சிகளும், 51 மாநில கட்சிகளும் கலந்து கொள்ள அழைப்பு விடுக்கப்பட்டது.

அதன்படி, இன்று டெல்லியில் இந்த கூட்டம் நடைபெற்றது. இக்கூட்டத்தில் தமிழகத்தில் இருந்து திமுக சார்பில் டிகேஎஸ் இளங்கோவன், அதிமுக சார்பில் தம்பிதுரை பங்கேற்கின்றனர்.
தேர்தல் ஆணைய கூட்டத்தில் பங்கேற்ற பிறகு திமுகவின் டி.கே.எஸ்.இளங்கோவன் பேட்டியளித்தார். அப்போது அவர் கூறியதாவது:
வாக்குப்பதிவு இயந்திரத்தில் முறைகேடு நடப்பதாக குற்றம்சாட்டினோம். வாக்குப்பதிவு இயந்திரத்தை பயன்படுத்தி உங்களை வெற்றிபெற வைக்கிறோம், எங்களுக்கு இவ்வளவு தொகையை தாருங்கள் என புரோக்கர்கள் இறங்கி செயல்படும் நிலை வந்துள்ளது. நாடாளுமன்றத்தில் இந்த புரோக்கர் விவகாரம் விவாதமாக பதிவாகியுள்ளது. எந்தெந்த தொகுதிகளில் யார் வெற்றி பெறுவார் என்பதை முன்னே கணித்து வைக்கும் நிலை உள்ளது.
வாக்குப்பதிவு இயந்திரத்தில் திருத்தம் செய்து, மக்கள் கருத்துக்கு மாறாக ஒருவர் வெற்றி பெறும் சூழ்நிலை வரும் என்றால், இயந்திரத்தையே நீக்கிவிட்டு, பழையபடி வாக்குச் சீட்டு முறைக்கே செல்ல வேண்டும் என்று வலியுறுத்தினேன். வாக்கு பதிவானதாக கூறிய சதவீதத்தில் கூட வித்தியாசம் வந்துள்ளதை பார்த்துள்ளோம்.
வாக்குப்பதிவு இயந்திரத்தால், முறைகேடு நடப்பது உண்மை என்றால், வாக்கு சீட்டு முறைக்கே செல்ல வேண்டும். எந்த வாக்குச்சாவடியில் இருந்து விவிபேட் பற்றி புகார் வந்தால், விவிபேட் பேப்பர்களை பரிசீலிக்க வேண்டும். வாக்காளர் பட்டியல் நியாயமாக தயாரிக்கப்பட வேண்டும். ஆண்டுக்கு ஒருமுறை வாக்காளர் பட்டியல் சரிபார்க்கப்பட வேண்டும்.
19 கட்சிகள், வாக்கு சீட்டு முறைக்கே செல்ல வேண்டும் என்று, வலியுறுத்தியுள்ளன. இதில் வலிமையான மாநில கட்சிகளும், காங்கிரஸ் உள்ளிட்ட வலிமையான தேசிய கட்சிகளும் அடங்கும். வாக்குப்பதிவு இயந்திரம் தேவை இல்லை என்றுதான் கூறியுள்ளனர்.
-
விஜய்யை வளர விடக்கூடாது.. உதயநிதி டீமுக்கு போகும் "பவர்"?.. மைசூரில் ஸ்டாலின் போடும் பெரிய பிளான் -
ஸ்டாலின், பினராயி, சித்தராமையா, கே.சி.ஆர்.. அடுத்தடுத்து சரிந்த ராஜ்ஜியம்.. பாஜகவிற்கு அடித்த லக்! -
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்! -
தொங்கலில் விடப்பட்ட சிங்கப்பெண் அதிரடிப்படை! தவெக அரசு தீவிரத்தை உணரவில்லை என கனிமொழி சாடல் -
புதிய தலைமுறை சேனல் நீக்க விவகாரம்: ஜனநாயக குரல்வளையை நெறிக்காதீர்கள்..விஜய் அரசுக்கு அதிமுக கண்டனம் -
"மனக் குழப்பத்தில் மனோ தங்கராஜ்".. திமுகவுக்குள் பரபரப்பை உண்டாக்கிய அனிதா ராதாகிருஷ்ணன் பேச்சு -
சிவக்குமார் விஜய்யை பாராட்டி பேச பேச சத்யராஜ் கொடுத்த ரியாக்ஷன் பாருங்க.. அமைதியாக கவனிக்கும் திமுக -
திட்டமிட்டு விஜய்யுடனான சந்திப்பை அமித்ஷா ரத்து செய்தார்.. திமுகவின் முரசொலி விமர்சனம் -
“MLA-களை பிடிப்பதை விட்டுவிட்டு.. போலீஸை ஆக்கப்பூர்வமா செயல்பட வைக்கவும்!” விஜய்க்கு உதயநிதி அட்வைஸ் -
தமிழ்த்தாய் வாழ்த்து விவகாரத்தை கையில் எடுத்த விஜய்.. உள்துறை அமைச்சகத்திடம் சொல்லுங்க.. விஜய் வைத்த கோரிக்கை! -
வெறும் 10 நிமிடங்கள்தான்.. உடனே வெளியே வந்த விஜய்! மோடி உடனான சந்திப்பில் இப்படி நடந்ததே இல்லை! -
“காங்கிரஸ், கம்யூனிஸ்ட்களை விமர்சிக்க அவர்களுக்கு துணிச்சல் இல்லை”.. திருமாவளவன் அட்டாக்!












Click it and Unblock the Notifications