டிஆர் பாலு மகனை களமிறக்கி 'சசி' நடராஜனை 'கார்ட்டூ'னாக்கி வெளுத்து கட்டிய திமுக!
மெரினா வன்முறைக்கு ஸ்டாலினே காரணம் என கூறிய நடராஜனை கார்ட்டூன் என்பது உள்ளிட்ட பல பெயர்களில் கடுமையாக விமர்சித்துள்ளது திமுக.
சென்னை: சென்னை மெரினா வன்முறைக்கே ஸ்டாலின்தான் காரணம் என கூறிய நடராஜனை இப்போது கார்ட்டூன் ரேஞ்சுக்கு கொண்டு போய்விட்டது திமுக.
சென்னை மெரினா புரட்சியை தங்களது சுயநலத்துக்காக, முதல்வர் ஓ. பன்னீர்செல்வத்துக்கு எதிராக பயன்படுத்த மன்னார்குடி கோஷ்டி திட்டமிட்டது. ஆனால் மாணவர்கள் இதை அனுமதிக்கவில்லை.

காரணமே மன்னார்குடி கோஷ்டி
இதனால் போலீஸை தூண்டிவிட்டு வன்முறையை கட்டவிழ்த்துவிட்டது மன்னார்குடி கோஷ்டி. இதை ஊடகங்களும் அரசியல் கட்சித் தலைவர்களும் தொடர்ந்து சுட்டிக்காட்டி வருகின்றனர்.

ஸ்டாலின் காரணம்
இதனை திசைதிருப்பும் வகையில் திமுக செயல் தலைவர் ஸ்டாலின்தான் வன்முறைக்கு காரணம்; அவர் பகிரங்க மன்னிப்பு கேட்க வேண்டும் என சசசிகலாவின் கணவர் நடராஜன் பேட்டி கொடுத்தார். இப்பேட்டிக்கு திமுக, காங்கிரஸ் கட்சிகள் கடும் கண்டனம் தெரிவித்துள்ளன.

திமுக விளாசல்
அதுவும் திமுகவின் மூத்த தலைவர் டி.ஆர். பாலுவின் மகனான டி.ஆர்.பி ராஜா, நடராஜனை கார்ட்டூன் ரேஞ்சுக்கு விமர்சித்திருக்கிறார். அதாவது சுப்பிரமணியன் சுவாமியைப் போல ஒரு கோமாளிதான் என நடராஜனை வசைபாடி வெளுத்து கட்டியிருக்கிறார்.

திருநாவுக்கரசர் சாடல்
நடராஜனின் நண்பர் திருநாவுக்கரசரும் இது தொடர்பாக கூறுகையில் பொய் பிரச்சாரம் செய்யக் கூடாது என சாடியிருந்தார். கார்ட்டூன், பொய்யர், தலைமறைவு அரசியல்வாதி என ஏகத்துக்கும் ஒரே பேட்டியில் வாங்கி குவித்துவிட்டார் நடராஜன்.
வாயை கொடுத்து வாங்கிக் கட்டுவது என்பதற்கு நடராஜனே நல்ல உதாரணம்!
-
திமுகவே கணிக்கல.. விஜய்யுடன் நெருங்கிய காங்கிரஸ்! பாஜகவை வீழ்த்த இந்தியா கூட்டணி மாஸ்டர் ஸ்கெட்ச் -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
"திமுககாரன்னா திமிர் இருக்கணும்".. காரணம் சொல்லி ‘ஜென் ஸி' மீட்டப்பில் பேசிய டிஆர்பி ராஜா -
தேர்தல் புயலில் சேதாரமான கோட்டை.. படக்கென எழுந்த ’திமுக’ குதிரை.. படுத்தே கிடக்கும் ’அதிமுக’ யானை! -
திட்டமிட்டு விஜய்யுடனான சந்திப்பை அமித்ஷா ரத்து செய்தார்.. திமுகவின் முரசொலி விமர்சனம் -
10ல் 1ல் மட்டுமே வெற்றி.. எனன் நடந்தது? தேமுதிக மா.செக்களை அழைத்து விசாரிக்கும் பிரேமலதா விஜயகாந்த் -
ஸ்டாலினே சொன்னா தான் உண்டு.. திமுக - அதிமுக கூட்டணி முயற்சி நடந்ததா? 30 நாளாய் நீடிக்கும் மர்மம்! -
விஜய்க்கு விஷப் பரிட்சை..திமுகவுக்கு அக்னி பரிட்சை! இடைத் தேர்தலுக்கு ரெடியான கழகங்கள்! அதிமுக அமைதி -
எடப்பாடி பழனிசாமி இந்த அதிர்ச்சியை தாங்குவாரா? மேலும் 3 அதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா? -
ஸ்டாலின், பினராயி, சித்தராமையா, கே.சி.ஆர்.. அடுத்தடுத்து சரிந்த ராஜ்ஜியம்.. பாஜகவிற்கு அடித்த லக்! -
தொங்கலில் விடப்பட்ட சிங்கப்பெண் அதிரடிப்படை! தவெக அரசு தீவிரத்தை உணரவில்லை என கனிமொழி சாடல் -
“MLA-களை பிடிப்பதை விட்டுவிட்டு.. போலீஸை ஆக்கப்பூர்வமா செயல்பட வைக்கவும்!” விஜய்க்கு உதயநிதி அட்வைஸ்












Click it and Unblock the Notifications