For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

அதிமுகவின் கொள்கையும், பாஜக கொள்கையும் வேறு வேறு - எடப்பாடி பழனிச்சாமி

அதிமுகவின் கொள்கையும், பாஜக கொள்கையும் வேறு வேறு என்று முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி கூறியுள்ளார்.

By Mayura Akhilan
Google Oneindia Tamil News

சென்னை: மத்திய அரசுக்கு மாநில அரசு அடிபணிந்துள்ளது என்பது தவறானது என்று முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி கூறயுள்ளார்.

சென்னை ஆர்.கே.நகரில் ஜெயலலிதா பிறந்தநாள் கொண்டாட்டம் நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில் பங்கேற்று பேசிய முதல்வர் பழனிசாமி, மத்திய அரசுக்கு தமிழக அரசு அடிபணிந்துவிட்டது என கூறுவது தவறான கருத்து என்றார்.

DMK did not fulfill any scheme says Edapadi Palanisamy

மத்தியில் ஆளும் பாஜக அரசின் பினாமியாக மாநில அரசு செயல்படுகிறது என்று எதிர்கட்சித்தலைவர் ஸ்டாலின் பேசி வருகிறார். பினாமி அரசு என்றும் அவர் புகார் கூறி வருகிறார். மோடி அரசின் சொல்படி கேட்டு மாநில அரசு நடப்பதாகவும் எதிர்கட்சியினர் குற்றம் சாட்டி வருகின்றனர்.

அதிமுகவின் கொள்கை வேறு, பாஜகவின் கொள்கை வேறு. மத்திய அரசுடன் இணக்கமாக இருந்தால் தான் பல்வேறு திட்டங்களை தமிழக அரசு பெறமுடியும். மத்திய அரசில் திமுக முன்னர் அங்கம் வகித்த போது மாநிலத்தில் திமுக ஆட்சியில் எந்த திட்டத்தையும் நிறைவேற்றவில்லை.

தமிழ்நாட்டு மக்களுக்கு தேவையான திட்டங்களை செயல்படுத்த அரசு முனைப்புடன் உள்ளது என்றார்.
மத்திய அரசுடன் இணைந்து செயல்பட்டால்தான் மக்களுக்கான திட்டங்களை செயல்படுத்த முடியும் கோதாவரி தண்ணீர் திட்டம் தமிழக மக்களுக்கு கிடைத்துள்ளது என்றும் முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி பேசினார்.

English summary
Chief Minister Edappadi Palanicamy has said that the state government is subordinate to the central government.The DMK did not fulfill any scheme in the DMK regime when the DMK had previously been a part of the central government.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X