உதயநிதி நெல்லையை நெருங்கும் போது வந்த தகவல்! மாரி செல்வராஜ் மீட்பு பணி பற்றி திமுக நிர்வாகி விளக்கம்
நெல்லை: நெல்லை மாவட்டத்தில் மழை வெள்ள மீட்புப் பணியின் போது அமைச்சர் உதயநிதி ஸ்டாலினோடு இயக்குநர் மாரி செல்வராஜ் நிற்கும் புகைப்படம் சர்ச்சைகளையும், விமர்சனங்களையும் எழுப்பியுள்ளது. இந்நிலையில் நடந்தது என்ன என்பது குறித்து திமுக பொறியாளர் அணியின் மாநிலச் செயலாளர் எஸ்.கே.பி. கருணா ஒரு பதிவை வெளியிட்டுள்ளார். அதன் விவரம் வருமாறு;
''இயக்குநர் மாரி செல்வராஜ் குடும்பம் சொந்த ஊரில் வெள்ளத்தில் சிக்கிக் கொண்டிருக்கிறது. அவரது தந்தை வேறொரு ஊரில் சிக்கியுள்ளார். திருநெல்வேலியில் இருந்த மாரி செல்வராஜ் அவரது சொந்த ஊர் மக்களை மீட்க அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் உதவியைக் கோருகிறார்.''

''அப்போது நெல்லையை நெருங்கிக் கொண்டிருந்த அமைச்சர், நீங்க அங்கேயே இருங்க. கலெக்டரை சந்தித்து விட்டு நாங்கள் அங்கே வருகிறோம் என சொல்லி விட்டு இரவில் அந்த இடத்துக்குச் சென்றுள்ளார். ஆற்றில் நீரோட்டம் மிக அதிகமாக இருப்பதாலும், அன்று இரவும் கனமழை வரும் என்பதாலும் மீட்புப்பணி இப்போது சாத்தியமில்லை என்பதை அறிந்து கொள்கின்றனர்.''
''நாளை காலையில் நிலைமையைப் பார்த்து விட்டு பிறகு முடிவு செய்யலாம் என மாரியிடம் சொல்லி விட்டு அமைச்சர் அடுத்த இடத்துக்கு புறப்படுகிறார். ஒரு புகைப்படத்தை வைத்துக் கொண்டு என்னென்ன கதைகளைக் கட்டினாலும் இதுதான் உண்மை என்பதை அங்கிருந்த ஓராயிரம் பேர்கள் அறிவார்கள்.''
''சரி! அதெல்லாம் இருக்கட்டும்.வெள்ளத்தில் பாதிக்கப்பட்ட அந்த மக்கள் இதை எப்படி உணர்வார்கள்? பெரிய சினிமா டைரக்டரா இருந்தாலும் நம்மூர் பையன் நமக்கு கஷ்டம் வரும்போது ஓடி வந்து நிற்கிறான் என்பார்கள். அமைச்சராகவே இருந்தாலும் நமக்கு ஓர் ஆபத்து என்றால், நம்ம ஊர் பையன் அழைத்தவுடன் நேரில் வந்து நின்றார் என நினைப்பார்கள். அமைச்சருக்கு நண்பர் என்றாலும் அரசு நிர்வாகம் முன்னுரிமை, சூழ்நிலை அடிப்படையில்தான் செயல்படுகிறது என்பதை மீட்புக்குழுவினர் புரிந்து கொள்வார்கள்.''
''இத்தகைய நம்பிக்கையும், புரிதலும்தான் பேரிடர் நேரத்தில் முக்கியமே தவிர, தொலைவில் நின்று வேடிக்கைப் பார்க்கும், எல்லாவற்றிலும் அரசியல் லாபம் தேடும் சல்லித்தனமான இழிபிறவிகளின் அவதூறுகள் எதுவுமே பொருட்படுத்தத்தக்கவை அல்ல. இந்த பொருநை வெள்ளம் வடியும் முன்னரே இவர்களின் இருப்பும் காலத்தால் மறக்கப்பட்டு விடும்.''
-
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்! -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
ஆனானப்பட்ட அமெரிக்காவுக்கே இந்த நிலைமையா..? அப்போ இந்தியா? -
அண்ணாமலை ஒரு பிராண்டு.. விட்றாதீங்க! லெட்டரைப் பார்த்ததும் பதறிப் போன டெல்லி! குவியும் ஆஃபர்கள்! -
கோட்டைச்சாமி.. எந்திரி.. இப்போ நீதான் முதலமைச்சர்.. இன்னமும் பிரச்சாரமா? விஜய்யை கிண்டலடித்த திமுக -
வாசலுக்கு வந்த புகார் பெட்டி.. இனி தலைமை செயலகத்தில் எல்லோருக்கும் அனுமதி இல்லை.. தவெக அரசு கறார்












Click it and Unblock the Notifications