சட்டசபை சம்பவங்கள் தொடர்பாக வழக்கு தொடருவோம்: ஸ்டாலின்
சட்டசபையில் நடைபெற்ற சம்பவங்கள் தொடர்பாக வழக்கு தொடருவோம் என திமுக செயல் தலைவர் ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
சென்னை: சட்டசபையில் நிகழ்ந்த சம்பவங்கள் தொடர்பாக வழக்கு தொடருவோம் என திமுக செயல் தலைவர் ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
சட்டசபையில் எடப்பாடி பழனிச்சாமி அரசு மீதான நம்பிக்கை வாக்கெடுப்பை ரகசிய வாக்கெடுப்பாக நடத்த வேண்டும் என்பது திமுகவின் கோரிக்கை. சட்டசபையில் இதை திமுக எம்.எல்.ஏக்கள் நேற்று வலியுறுத்தினர்.

ஆனால் சபாநாயகர் இந்த கோரிக்கையை நிராகரித்தார். இதனால் சட்டசபையில் பெரும் அமளி ஏற்பட்டது. ரகசிய வாக்கெடுப்பு கோரி ஸ்டாலின் சட்டசபைக்குள் அமர்ந்து தர்ணா போராட்டம் நடத்தினார்.
இதையடுத்து சென்னை போலீஸ் அதிகாரிகள், சட்டசபை காவலர்கள் சீருடையில் வரவழைக்கப்பட்டு ஸ்டாலின் உள்ளிட்ட திமுகவினரை வெளியேற்றினர். இதில் ஸ்டாலின் உட்பட திமுக எம்.எல்.ஏக்கள் தாக்கப்பட்டனர். ஸ்டாலினின் சட்டையும் கிழிக்கப்பட்டது.
இச்சம்பவம் தொடர்பாக ஆளுநர் வித்யாசாகர் ராவிடம் புகார் தெரிவித்த ஸ்டாலின், சென்னை மெரினா கடற்கரையில் உண்ணாவிரதப் போராட்டம் நடத்தி கைதானார். இந்த நிலையில் சென்னையில் இன்று செய்தியாளர்களிடம் பேசிய ஸ்டாலின், சட்டசபை சம்பவங்கள் தொடர்பாக வழக்கு தொடரப் போவதாக தெரிவித்துள்ளார்.
-
ராஜாக்கள் மந்திரியானால் இப்படித்தான்! டி.ஆர்.பி ராஜாவுக்கு எதிராக கிளம்பிய மா.செ.க்கள்! -
"கடைசி மூச்சு வரை உங்களுக்காக உழைப்பேன்!" - கலைஞர் கருணாநிதியின் இறுதிப் பேருரை.. என்ன பேசினார்? -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
கங்கணம் கட்டி சதி பண்ணிருக்கீங்க.. சேகர் பாபுவை போனில் வறுத்து எடுத்த ஸ்டாலின்.. ஷாக் தகவல்! -
"இது அதுல்ல?.. ஜனநாயகத்தை சிதைப்பதில் பாஜகவும் தவெகவும் ஒண்ணு” - திமுக சரமாரி அட்டாக்! -
கை கால் ஆட்டி பேசி..சட்டமன்றத்தில் எங்க போச்சு BRO உங்க BODY LANGUAGE விஜய்யை விடாமல் அடித்த ஆ.ராசா! -
உதயநிதிக்கு ஸ்டாலின் சொன்ன நோ! செயல் தலைவர் பதவி கிடையாது.. கூர்க் ரகசிய மீட்டிங்கில் முடிவு? -
அரசியல் சதுரங்கத்தின் அசாத்திய மூளை.. நவீன தமிழகத்தின் சிற்பி! யார் இந்த ‘கலைஞர்’ கருணாநிதி? -
திமுகவை குறை கூறுவதால்.. சட்டம் ஒழுங்கு பிரச்சனையை மக்கள் மறக்க மாட்டார்கள்.. கனிமொழி கொடுத்த பதில்! -
திமுக தொண்டர்களுக்கு டபுள் ட்ரீட்.. கருணாநிதியின் 103வது பிறந்தநாள் விழாவில் ஸ்டாலின் மெகா விழா -
அப்பன் மகனுக்கு சம உரிமை கொடுக்க இது என்ன குடும்ப சொத்தா? கே.என்.நேரு குறித்து திருச்சி சூர்யா -
Ilaiyaraja Birthday: ராஜாவின் ராஜாங்கம் தொடரட்டும்! இளையராஜாவுக்கு ஸ்டாலின் வாழ்த்து












Click it and Unblock the Notifications