வேட்பாளருக்கு ஆரத்தி எடுத்த பெண்களுக்கு தட்டில் துட்டு போட்ட திமுக நிர்வாகி கைது!
மதுரை: மதுரையில் வேட்பாளருக்கு ஆரத்தி எடுத்த பெண்களுக்கு பணம் கொடுத்ததாக, திமுக நிர்வாகி ஒருவரை தேர்தல் பறக்கும் படையினர் கைது செய்துள்ளனர்.
தமிழக சட்டசபைத் தேர்தலுக்கு இன்னும் இரண்டு வாரங்களுக்கும் குறைவான நாட்களே இருப்பதால், பிரச்சாரம் சூடு பிடித்துள்ளது. வேட்பாளர்கள் வீதிவீதியாகச் சென்று பிரச்சாரம் மேற்கொண்டு வருகின்றனர்.

இவ்வாறு பிரச்சாரம் செய்ய வரும் வேட்பாளர்களுக்கு பெண்கள் ஆரத்தி எடுக்கும் பழக்கம் காலம்காலமாக நடந்து வருகிறது. ஆரத்தி எடுத்தால் தட்டில் பணம் போட வேண்டும். இதற்காகவே ஆரத்தி எடுக்க அலை மோதும் கூட்டமும் உண்டு.
அந்தவகையில், மதுரை மாவட்டம் மேலுாரில் வாக்குச் சேகரிக்கச் சென்ற திமுக வேட்பாளர் ரகுபதிக்கு அப்பகுதி பெண்கள் ஆரத்தி எடுத்தனர். அப்போது ஆரத்தி எடுத்த பெண்களுக்கு திமுக நிர்வாகி ராஜகோபால் என்பவர் பணம் கொடுத்ததாக புகார் எழுந்தது.
இவ்வாறு ஆரத்தி எடுப்பவர்களுக்கு பணம் அல்லது பரிசுப் பொருட்கள் கொடுப்பது தேர்தல் நடத்தை விதிமுறை மீறல் ஆகும். எனவே இது குறித்து தகவலறிந்த தேர்தல் பறக்கும் படை அதிகாரிகள் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து, பன விநியோகத்தில் ஈடுபட்ட ராஜகோபாலைக் கைது செய்தனர்.
மேலும், அவரிடமிருந்து ரூ.6,500ஐயும் தேர்தல் அதிகாரிகள் பறிமுதல் செய்துள்ளனர்.
-
அதிமுக, தமிழக வெற்றிக் கழகம்.. மொத்தமாக கேம் ஓவர்.. அடித்து சொல்லும் 3 பெரிய கருத்து கணிப்புகள்! -
திமுக கூட்டணிக்கு 172 முதல் 178 இடங்கள்.. அதிமுக சறுக்கல்.. அப்போ தவெக.. வெளியான பரபர சர்வே! -
176 தொகுதிகளில் உதயசூரியன்! சீர்காழி தொகுதியிலும் தனிச் சின்னம் வேண்டாம்.. வைகோ எடுத்த அதிரடி முடிவு -
கோவை தெற்கு மட்டுமல்ல 10 தொகுதிகளிலும் இறங்கியடிக்க போகும் செந்தில் பாலாஜி.. அதிமுக பாஜக ஷாக் -
“என் மகன் பிரச்சாரம் செய்துதான் நான் வெற்றி பெறவேண்டும் என்ற அவசியமில்லை” - கருணாஸ் பேட்டி -
பொருளாக தராமல் ரூ.8,000 கூப்பன் கொடுப்பது ஏன்? மக்களிடம் முதல்வர் ஸ்டாலின் சொன்ன விளக்கம்! -
காங்கிரஸ் வேட்பாளர்கள் யார் யார்? வெளியானது உத்தேச பட்டியல்! இன்றிரவு அதிகாரப்பூர்வ அறிவிப்பு -
கரூர் டூ கோவை தெற்கு.. செந்தில் பாலாஜிக்கு தொகுதியை மாற்றியது ஏன்? ஸ்டாலின் கொடுத்த விளக்கம்! -
திமுக, அதிமுக, தவெக தேர்தல் வாக்குறுதிகள்.. தமிழ்நாட்டின் வருமானம் என்ன.. நிறைவேற்ற முடியுமா? -
உறுதியளிக்கப்பட்ட ஓய்வூதியத் திட்டம் அம்போ! ஊதிய உயர்வும் அம்போ! தேர்தல் நேரத்தில் பறந்த கண்டனம்! -
அண்ணன் சொல்லிட்டாரு.. சட்டென களத்திற்கு வந்த பிரேமலதா.. இல்லத்தரசி கூப்பன் பற்றி செம அப்டேட்! -
“இன்று இரவுக்குள் காங்கிரஸ் வேட்பாளர் பட்டியலை ராகுல் காந்தி வெளியிடுவார்"- ஈரோட்டில் சொன்ன ஸ்டாலின்












Click it and Unblock the Notifications