For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

வைகோ உருவ பொம்பை எரித்து திமுகவினர் ஆர்ப்பாட்டம்: புதுக்கோட்டையில் 160 பேர் கைது

By Karthikeyan
Google Oneindia Tamil News

சென்னை: திமுக தலைவர் கருணாநிதியை கடுமையாக விமர்சித்த மதிமுக பொதுச்செயலாளர் வைகோவின் உருவ பொம்மையை எரித்து சென்னை, மதுரை, புதுக்கோட்டை உள்ளிட்ட இடங்களில் திமுகவினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

கடந்த சில நாட்களாக தேர்தல் பிரச்சார கூட்டங்களில் திமுகவை பற்றியும், திமுக தலைவர் கருணாநிதியை பற்றியும் மதிமுகவின் பொதுச்செயலாளரும், மக்கள் நலக்கூட்டணியின் ஒருங்கிணைப்பாளருமான வைகோ அவதூறாக பேசி வருவதாக, திமுகவினர் குற்றம்சாட்டி வருகின்றனர்.

Dmk functionary protest aganist vaiko

இந்நிலையில் ம.தி.மு.க. பொதுச்செயலாளர் வைகோ இன்று சென்னையில் உள்ள மதிமுக கட்சி தலைமை அலுவலகமான தாயகத்தில் செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது கருணாநிதி குறித்து சரமாரியாக விமர்சனம் செய்து பேசினார்.

இந்த பேச்சு திமுகவினர் மத்தியில் கடும் அதிருப்தியையும், கோபத்தையும் உருவாக்கியுள்ளது. இதையடுத்து சென்னை, மதுரை, உசிலம்பட்டி, திண்டுக்கல், உசிலம்பட்டி, அரியலூர், செங்கல்பட்டு, திருவண்ணாமலை, தஞ்சாவூர், கன்னியாகுமரி உள்ளிட்ட பல்வேறு இடங்களில் வைகோவின் உருவ மொம்யை ரித்து திமுகவினர் போராட்டம் நடத்தினர்.

புதுக்கேட்டையில் 160 பேர் கைது:

திமுக புதுக்கோட்டை வடக்கு மாவட்ட செயலாளர் கே.கே.செல்லப்பாண்டியன் தலைமையில் கீரனூர் காந்தி சிலை முன்பு திரண்ட அக்கட்சியினர் வைகோவின் உருவ பொம்மையை எரித்து ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

Dmk functionary protest aganist vaiko

அப்போது வைகோவை கண்டித்து கண்டன முழக்கங்களை எழுப்பினர். ஆர்ப்பாட்டத்தில் கலந்துகொண்ட குன்றாண்டார்கோவில் ஒன்றிய பொறுப்புக்குழு செயலாளர்கள் என்.சேட்டு, ஓஎஸ்.வெங்கடாசலம், நகர கழக செயலாளர் க.பழனியப்பன், மாவட்ட மாணவரணி துணை அமைப்பாளரும், கௌரவ பேராசிரியருமான செ.குறிஞ்சிவாணன், பொறியாளர் பாலா உள்பட 160 க்கும் மேற்பட்டோரை போலீசார் கைது செய்தனர். இதனால் அங்கு சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.

English summary
Many places Dmk functionary protest aganist of vaiko
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X