தேர்தல் விதிமீறல் வழக்கு: திமுக மாவட்ட செயலாளர் சுப. தங்கவேலன் கைது
ராமநாதபுரம்: திமுக மாவட்ட செயலாளர் சுப. தங்கவேலன் தேர்தல் விதிமீறல் வழக்கில் கைது செய்யப்பட்டார்.
கடந்த மார்ச் மாதம் 20ம் தேதி ராமநாதபுரம் நாடாளுமன்ற தொகுதியில் திமுக வேட்பாளர் முகமது ஜலீலை ஆதரித்து கமுதி, அபிராமம் பகுதிகளில் திமுக மாவட்ட செயலாளர் சுப. தங்கவேலன் எம்.எல்.ஏ தேர்தல் பிரச்சாரம் செய்தார்.
அப்போது அவர் தேர்தல் விதிமுறைகளை மீறி 16 வாகனங்களில் தனது ஆதரவாளர்களுடன் பிரச்சாரம் செய்ததாக தேர்தல் பறக்கும் படை அதிகாரி புகார் அளித்தார். இந்த புகாரின் பேரில் அபிராமம் போலீஸார் சுப. தங்கவேலன் மீது வழக்குபதிவு செய்தனர். ஆனால் அப்போதே அவரை கைது செய்யவில்லை.
இந்த நிலையில் இன்று காலை 10 மணி அளவில் பரமகுடி டி.எஸ்.பி வினோத் சாந்தாராம் உத்தரவின் பேரில் அபிராமம் சப் -இன்ஸ்பெக்டர் சுப. தங்கவேலனை கைது செய்தார். பின்பு சொந்த ஜாமீனில் அவர் விடுதலை செய்யப்பட்டார்.
-
ஸ்டாலின் குடகு பயணம்.. திமுகவில் நடக்கும் பெரிய மாற்றம்.. கூண்டோடு தூக்கப்படும் தலைகள்! பின்னணி -
Gen Z மீட்டிங் நடத்திய திமுக.. தவெக பலமான இடமே வேறு.. நெட்டிசன்கள் சொல்லும் விஷயம் -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
“கொளத்தூரில் ஸ்டாலின் தோற்பார் என முன்பே தெரியும்.. திமுகவிடம் சொன்னோம்”.. காதர் மொய்தீன் தடாலடி! -
இதாம்லே ட்விஸ்டு.. துண்டை போட்ட உடன்பிறப்புகள்! நழுவிய தவெக நிர்வாகிகள்! விஜய் காதுக்கு போன மேட்டர்! -
பொதுச்செயலாளர் பதவியை விட்டு விலகுகிறார் திமுக துரைமுருகன்? ஸ்டாலினின் அடுத்த சாய்ஸ் அவர்? -
பிளான் A எடப்பாடி.. பிளான் B திருமா.. திமுக பிளான்.. புட்டு புட்டு வைத்த காதர் மொகிதீன் -
ஸ்டாலினே சொன்னா தான் உண்டு.. திமுக - அதிமுக கூட்டணி முயற்சி நடந்ததா? 30 நாளாய் நீடிக்கும் மர்மம்! -
எதிர்காலம் நம்பிக்கையளிக்கிறது.. எனர்ஜி கூடுகிறது! ஜென் ஸி கூட்டம் குறித்து மு.க.ஸ்டாலின் நெகிழ்ச்சி -
10ல் 1ல் மட்டுமே வெற்றி.. எனன் நடந்தது? தேமுதிக மா.செக்களை அழைத்து விசாரிக்கும் பிரேமலதா விஜயகாந்த் -
விஜய்க்கு விஷப் பரிட்சை..திமுகவுக்கு அக்னி பரிட்சை! இடைத் தேர்தலுக்கு ரெடியான கழகங்கள்! அதிமுக அமைதி -
Gen Z DMK Meetup.. விஜய் ஏற்படுத்திய ‘இன்ஸ்டா’ புயல்! இளைய தலைமுறையை நெருங்கும் திமுக! கைகொடுக்குமா?












Click it and Unblock the Notifications