அரியாசனம் ஏறும் ஸ்டாலின்.. திமுகவின் தலைவராக போட்டியின்றி தேர்வாகிறார்!
திமுகவில் தலைவர் பதவிக்கு செயல்தலைவர் ஸ்டாலின் போட்டியின்றி தேர்வு செய்யப்பட உள்ளார்.
சென்னை: திமுகவில் தலைவர் பதவிக்கு செயல்தலைவர் ஸ்டாலின் போட்டியின்றி தேர்வு செய்யப்பட உள்ளார். அதிகாரப்பூர்வ் அறிவுப்பு செவ்வாய் கிழமை வெளியாகும்.
திமுக பொதுக்குழு ஆகஸ்ட் 28ல் நடைபெறும் என்று திமுக தலைமைக்கழகம் அறிவித்துள்ளது. இந்த கூட்டத்தில் தி.மு.க. தலைவர், பொருளாளர் தேர்தல் நடைபெறும் என்று க.அன்பழகன் அறிவித்துள்ளார்.
இந்த கூட்டம் ஸ்டாலின் தலைமையில் நடக்க உள்ளது. தலைவர், பொருளாளர் பதவிகளுக்கான வேட்பு மனுக்கள் இன்று பெறப்பட்டது. 27ம் தேதி பிற்பகல் 1.30 மணிக்குள் வரை வேட்பு மனுக்களை திரும்பப்பெறலாம்.

தேர்தல் நடக்கும்
28ம் தேதி வாக்குப்பதிவு நடக்கும். இதில் திமுக பொதுக்குழுவில் பெரும்பாலான உறுப்பினர்களின் ஆதரவு உள்ளவர் வெற்றிபெறுவார். பொதுக்குழு கூட்டத்தில் தலைவர், பொருளாளர் பதவிக்கு தேர்தல் நடக்க உள்ளது. தலைவர் பதவிக்கு தற்போதைய செயல்தலைவர் ஸ்டாலின் வேட்புமனு தாக்கல் செய்து உள்ளார்.

எத்தனை பேர் முன்மொழிந்தனர்
பொருளாளர் பதவிக்கு துரைமுருகன் வேட்புமனு தாக்கல் செய்து உள்ளார். இரண்டு பேரும் தேர்தலில் போட்டியிடுவது உறுதியாகி உள்ளது.65 மாவட்ட செயலாளர்கள் ஸ்டாலின் பெயரை முன்மொழிந்தனர். முக்கிய செயலாளர்கள் ஸ்டாலின் பெயரை முன்மொழிந்தனர். திமுக அமைப்புச் செயலாளர் ஆர்.எஸ் பாரதியிடம் இருவரும் மனுதாக்கல் செய்தார்.

எதிர் வேட்புமனு
திமுகவில் ஸ்டாலினுக்கு எதிராக யாரும் வேட்புமனு தாக்கல் செய்யவில்லை. வேட்புமனு தாக்கல் செய்ய காலஅவகாசம் இன்று மாலை 4 மணியோடு முடிவடைந்துள்ளது. இதனால் திமுகவின் தலைவராக ஸ்டாலின் போட்டியின்றி தேர்வாகிறார்.

எப்போது பதவி ஏற்பு
திமுக தொடங்கிய பின் 2வது தலைவராகிறார் ஸ்டாலின். இதுகுறித்து ஆக.28 நடக்கும் பொதுக்குழுவில் அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகும். ஆனாலும் பதவி ஏற்பு விழா பெரிய அளவில் நடக்கும் என்றும் கூறப்படுகிறது.
-
ஏற்கனவே கொதிக்குது.. ஆத்திரத்தில் திமுக! தூபம் போட்ட துரை! பனையூருக்கு பறக்கும் எழும்பூர் எக்ஸ்ப்ரஸ் -
திமுக தொண்டர்களுக்கு டபுள் ட்ரீட்.. கருணாநிதியின் 103வது பிறந்தநாள் விழாவில் ஸ்டாலின் மெகா விழா -
கை கால் ஆட்டி பேசி..சட்டமன்றத்தில் எங்க போச்சு BRO உங்க BODY LANGUAGE விஜய்யை விடாமல் அடித்த ஆ.ராசா! -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
Ilaiyaraja Birthday: ராஜாவின் ராஜாங்கம் தொடரட்டும்! இளையராஜாவுக்கு ஸ்டாலின் வாழ்த்து -
இந்த லட்சணத்துல உங்களுக்கு பொ.செ பதவி வேற வேணுமா? தேர்தல் தோல்விக்குப் பின் ஸ்டாலின் ஆவேசம் -
கங்கணம் கட்டி சதி பண்ணிருக்கீங்க.. சேகர் பாபுவை போனில் வறுத்து எடுத்த ஸ்டாலின்.. ஷாக் தகவல்! -
திமுகவை குறை கூறுவதால்.. சட்டம் ஒழுங்கு பிரச்சனையை மக்கள் மறக்க மாட்டார்கள்.. கனிமொழி கொடுத்த பதில்! -
MDMK quit?: திமுக கூட்டணியில் மதிமுக தொடருமா? கிளைமாக்ஸ் ஜூன் 27-ஆம் தேதி? -
4 தொகுதி இடைத்தேர்தலை புறக்கணிக்க திமுக முடிவு? ஸ்டாலினின் ராஜதந்திரம்! -
ஸ்டாலின் குடகு பயணம்.. திமுகவில் நடக்கும் பெரிய மாற்றம்.. கூண்டோடு தூக்கப்படும் தலைகள்! பின்னணி -
அதிமுகவிற்கு ஆதரவாக வந்த திமுக.. முதல்வர் விஜய்க்கு எதிராக வியூகம்.. கவனிச்சீங்களா












Click it and Unblock the Notifications