அதிமுகவினர் போராட்டத்தால் தமிழகத்தில் சட்டம், ஒழுங்கு சீர்குலைவு: ஆளுநரிடம் திமுக மனு
சென்னை: தமிழகத்தில் சட்டம் ஒழுங்கை பாதுகாக்கக் கோரி, திமுக சார்பில் தமிழக ஆளுநர் ரோசய்யாவிடம் மனு ஒன்று அளிக்கப் பட்டுள்ளது.
18 வருடங்களாக நடைபெற்று வந்த ஜெயலலிதா, சசிகலா, இளவரசி மற்றும் சுதாகரன் மீதான சொத்துக் குவிப்பு வழக்கில் கடந்த சனிக்கிழமையன்று பெங்களூர் சிறப்பு நீதிமன்றம் தீர்ப்பளித்தது. அதன்படி, ஜெயலலிதாவிற்கு 4 ஆண்டுகள் சிறையும், ரூ. 100 கோடி அபராதமும் விதிக்கப் பட்டது.

ஜெயலலிதாவிற்கு எதிரான இந்தத் திர்ப்பையடுத்து கடந்த ஒருவாரமாக தமிழகம் முழுவதும் அதிமுகவினர் போராட்டங்களில் ஈடுபட்டு வருகின்றனர். சென்னை மாநகராட்சி மன்றக் கூட்டத்தில் திமுக உறுப்பினர்கள் மீது தாக்குதலும் நடத்தப்பட்டது.
இந்நிலையில், இது தொடர்பாக இன்று திமுக சார்பில் தமிழக ஆளுநர் ரோசய்யாவிடம் மனு அளிக்கப்பட்டுள்ளது. திமுக அமைப்பு செயலாளர் ஆர் எஸ் பாரதி மற்றும் மாநகராட்சி முன்னாள் மேயர் மா சுப்ரமணியன் ஆகியோர் தலைமையிலான திமுகவினர், இன்று ஆளுநர் ரோசய்யாவை சந்தித்து இந்த மனு அளித்தனர்.
அந்த மனுவில், கடந்த 30ஆம் தேதி சென்னை மாநகராட்சி கூட்டம் நடைபெற்ற போது, திமுக உறுப்பினர்கள் தாக்குதல் நடத்தியவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்தப்பட்டுள்ளது.
மேலும் ஜெயலலிதா மீதான சொத்துக் குவிப்பு வழக்கில் தீர்ப்பளித்த கர்நாடக மாநில சிறப்பு நீதிமன்ற நீதிபதி ஜான் மைக்கேல் டிகுன்ஹாவுக்கு கண்டனம் தெரிவித்து மாநகராட்சி கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானத்துக்கும் எதிர்ப்பு தெரிவிக்கப்பட்டுள்ளது.
கடந்த 27ஆம் தேதி முதல் தமிழகத்தின் பல பகுதிகளிலும் அதிமுகவினர் போராட்டங்கள் நடத்தி வருவதால் சட்டம் ஒழுங்கு சீர் கெட்டுள்ளதாகவும், இதனை உடனடியாக சரி செய்ய வேண்டும் எனவும் திமுக தனது மனுவில் வலியுறுத்தியுள்ளது.
-
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
வருங்கால இளைஞர்களுக்கு வழிவிடுங்க! அதிமுக ராஜசத்யன் திடீர் ட்வீட்! டீகோடு செய்து பார்த்தால்..! -
இர்ஃபானின் ரூ. 3650 பிரியாணியை வறுத்தெடுத்த யூடியூப்பர்.. ப்ளூ சட்டை மாறனுடன் ஒப்பிட்டு கலாய் -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்!












Click it and Unblock the Notifications