உயர்நீதிமன்றத்திற்கு வந்த கருணாநிதி.. உற்சாகத்தில் மூழ்கிய திமுகவினர்!
Subscribe to Oneindia Tamil
சென்னை: திமுக தலைவர் கருணாநிதி இன்று சென்னை உயர்நீதிமன்றத்திற்கு வருகை தந்தார். திமுகவினரின் இன்றைய 'டாப் மோஸ்ட்' சந்தோஷமே இதுதான்.
அவதூறு வழக்கில் ஆஜராவதற்காக சென்னை உயர்நீதிமன்ற வளாகத்திற்கு வந்த கருணாநிதி, அங்குள்ள சென்னை முதன்மை செஷன்ஸ் நீதிமன்றத்தில் நேரில் ஆஜரானார். பின்னர் வழக்கு விசாரணை மார்ச் மாதத்திற்கு ஒத்திவைக்கப்பட்டது.

கருணாநிதியின் வருகை கிட்டத்தட்ட திருவிழா போல மாறி விட்டது திமுகவினரின் வருகையால். கருணாநிதியின் உயர்நீதிமன்ற விஜயம் குறித்த ஒரு ரவுண்டப்..
- காலை 10 மணிக்கு திமுக தலைவர் உயர்நீதிமன்றத்திற்கு வந்து சேர்ந்தார்.
- கருணாநிதியுடன் அவருடன் மகன் திமுக பொருளாளர் மு.க.ஸ்டாலின், மகள் கனிமொழி உள்ளிட்டோரும் வந்திருந்தனர்.
- மு.க.ஸ்டாலின், கனிமொழியும் ஒரே காரில் வந்து இறங்கினர். இது திமுகவினரை மகிழ்ச்சிக் கடலில் ஆழ்த்தியது.
- அதிமுகவினரைப் போல திமுக சார்பில் கட் அவுட்டோ, பேனரோ இடம் பெறவில்லை. மாறாக ஒரே ஒரு கட்சிக் கொடி மட்டுமே தெரிந்தது.
- கருணாநிதியின் கார் வந்த கேட்டிலிருந்து செஷன்ஸ் கோர்ட் வரைக்கும் எங்கு பார்த்தாலும் திமுக வக்கீல்களே நீக்கமற நிறைந்திருந்தனர்.
- கோர்ட் வளாகத்திற்குள் பி.கே.சேகர்பாபு, ஜெ. அன்பழகன் உள்ளிட்ட மா.செக்களும், மற்றவர்களும் அணிவகுத்து நின்றிருந்தனர்.
- கோர்ட்டுக்கு வெளியேயயும் திமுக பிரபலங்கள் குவிந்திருந்தனர். அவர்களில் நடிகர் சங்கப் பிரமுகரான பூச்சி முருகனும் அடக்கம்.
- கருணாநிதி வருகையால் உயர்நீதிமன்ற வளாகமே திமுக பொதுக் கூட்டம் நடக்கும் இடம் போல காணப்பட்டது.
- திமுகவினர் மிகப் பெரிய அளவில் திரண்டு விட்டதால் கூடியிருந்த செய்தியாளர்களால் கருணாநிதியை நெருங்கவே சிரமமாகி விட்டது.
- கருணாநிதியின் வருகையால் பாதுகாப்பு அதிகரிக்கப்பட்டதாக கூறப்பட்டிருந்ததே ஒழியே ஒரு இன்ஸ்பெக்டரைக் கூட காணவில்லை.
- கோர்ட் வளாகத்தில் பிரச்சினை வந்து விடாமல் தொண்டர்களே அடக்கம் ஒடுக்கமாக நடந்து கொண்டனர்.
- மீடியாக்காரர்களைப் பார்த்ததும் கருணாநிதியின் முகத்தில் புன்னகை தெரிந்தது. அவர்களை நோக்கி கை காட்டி உற்சாகமாக சிரித்தார்.












Click it and Unblock the Notifications