For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

விருதுநகரில் திமுகவுக்கு வெற்றி - வைகோ தோல்வி முகம்.- அதிமுகவுக்கு 3வது இடம்தானாம்: நக்கீரன் சர்வே

By Mathi
|

சென்னை: விருதுநகர் லோக்சபா தொகுதியில் மதிமுக பொதுச்செயலர் வைகோ தோல்வியடையக் கூடுமாம். இத்தொகுதியில் திமுக வேட்பாளர் ரத்தினவேல் வெற்றி பெறுவார் என்கிறது நக்கீரன் சர்வே.

லோக்சபா தேர்தலையொட்டி நக்கீரன் வாரம் இருமுறை தமிழகம், புதுவையில் 40 தொகுதிகளிலும் சர்வே நடத்தி முடிவுகளை வெளியிட்டுள்ளது. ஒவ்வொரு சட்டசபை தொகுதிக்கு 50 ஆண்கள், 50 பெண்கள் என்ற அடிப்படையில் ஒரு லோக்சபா தொகுதிக்கு மொத்தம் 600 பேரிடம் இக்கருத்து கணிப்பை நக்கீரன் மேற்கொண்டிருக்கிறது.

DMK lead in Vaiko's Virudhunagar

இதனடிப்படையில் முதல் கட்டமாக 15 தொகுதிகளுக்கு முடிவுகள் எப்படியிருக்கும் என்று நக்கீரன் வெளியிட்டுள்ளது. விருதுநகர் தொகுதி நிலவரம்:

வைகோவுக்கு தோல்வி

இத்தொகுதியில் மதிமுக பொதுச்செயலர் வைகோ போட்டியிடுவதால் நட்சத்திர அந்தஸ்து தொகுதியாக இருக்கிறது. இங்கு திமுக வேட்பாளர் ரத்தினவேல் வெல்வார் என்றும் மதிமுக வேட்பாளர் வைகோ 2வது இடத்திலும் அதிமுக வேட்பாளர் ராதாகிருஷ்ணன் 3வது இடம் பெறுவார் என்றும் கூறுகிறது கருத்து கணிப்பு. 4வது இடம் காங்கிரசுக்கும் 5வது இடம் மார்க்சிஸ்ட் கட்சிக்கும் கிடைக்குமாம்.

விருதுநகர் சட்டசபை தொகுதியில் வைகோ..

விருதுநகர் லோக்சபா தொகுதிக்குட்பட்ட விருதுநகர் சட்டசபையில் 100 பேரில் 33 பேர் வைகோவுக்கும் திமுக மற்றும் அதிமுக வேட்பாளருக்கு தலா 28 பேரும் ஆதரவளிப்பதாக தெரிவித்துள்ளனர். காங்கிரஸுக்கு 5 பேரும் மார்க்சிஸ்ட் கட்சிக்கு 3 பேரும் ஆதரவாம்.

சாத்தூரில் திமுக வேட்பாளர்

சாத்தூர் சட்டசபை தொகுதியில் திமுகவி ரத்தினவேலுக்கு 35 பேரும் வைகோவுக்கு 31 பேரும் அதிமுகவின் ராதாகிருஷ்ணனுக்கு 24 பேரும் ஆதரவு தெரிவித்துள்ளனர்.

சிவகாசியில் வைகோ..

சிவகாசி சட்டசபை தொகுதியில் வைகோவுக்கு 33 பேரும் அதிமுகவின் ராதாகிருஷ்ணனுக்கு 32 பேரும் திமுகவின் ரத்தினவேலுக்கு 28 பேரும் ஆதரவு தெரிவித்துள்ளனர்.

அருப்புக் கோட்டையில்..

அருப்புக் கோட்டை தொகுதியில் அதிமுகவின் ராதாகிருஷ்ணன் மற்றும் வைகோவுக்கு தலா 31 பேரும் திமுக ரத்னவேலுக்கு 29 பேரும் ஆதரவாம்.

திருமங்கலத்தில் வைகோ

திருமங்கலம் தொகுதியில் வைகோவுக்கு 29 பேரும், திமுகவுக்கு 25, அதிமுக ரத்தினவேலுக்கு 23 பேர் ஆதரவு.

வைகோ காலைவாரிய திருப்பரங்குன்றம்

திருப்பரங்குன்றம் தொகுதியில்தான் வைகோ பெரும் பின்னடைவை சந்திக்கிறார். அதாவது 100 பேரில் 13 பேர்தான் இங்கு வைகோவுக்கு ஆதரவு. திமுகவுக்கு 36 பேரும் அதிமுகவுக்கு 30 பேரும் ஆதரவாம்.

மொத்தமாக

மொத்தமாக அதிமுகவுக்கு 600 பேரில் 168 பேரும் திமுகவுக்கு 181 பேரும் வைகோவுக்கு 170 பேரும் ஆதரவாம். காங்கிரஸ் கட்சிக்கு 32, மார்க்சிஸ்ட் கட்சிக்கு 28 பேரும் ஆதரவு தெரிவித்துள்ளனர்.

English summary
According to Nakheeran Survey, DMK candidate Rathinavel leads in Virudhunagar constituency, MDMK leader Vaiko gets 2nd place.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X