கட்சி பெயரையே காப்பாற்ற முடியாத அதிமுகவினர்… தமிழகத்தை எப்படி காப்பாற்றுவார்கள்… துரைமுருகன் கேள்வி
கட்சியின் பெயரைக் கூட காப்பாற்ற முடியாத அதிமுகவினர் தமிழகத்தை எப்படி காப்பாற்றப் போகிறார்கள் என்று துரைமுருகன் கேள்வி எழுப்பியுள்ளார்.
சென்னை: ஆர்.கே. நகர் இடைத்தேர்தலுக்கான பிரச்சாரத்தில் ஈடுபட்ட திமுக துணை பொதுச் செயலாளர் துரைமுருகன், அதிமுகவினர் அவர்களுடைய கட்சியையே காப்பாற்ற முடியாதவர்கள் என்று கிண்டல் அடித்தார்.
ஜெயலலிதா மரணம் அடைந்ததால் ஆர்.கே. நகர் தொகுதி காலியானதாக அறிவிக்கப்பட்டது. இதனையடுத்து வரும் 12ம் தேதி இந்தத் தொகுதிக்கு தேர்தல் நடைபெற உள்ளது. இந்தத் தேர்லில் போட்டியிடுவதற்காக அதிமுக சசிகலா அணியில் தினகரன், ஓபிஎஸ் அணியில் மதுசூதனன், திமுக சார்பில் மருது கணேஷ் மற்றும் தேமுதிகவின் மதிவாணன், தீபா உள்ளிட்டோர் வேட்புமனுக்களை தாக்கல் செய்துள்ளனர்.

இதனைத் தொடர்ந்து ஆர்.கே. நகரில் பிரச்சாரம் சூடுபிடித்துள்ளது. அந்த வகையில் நேற்று திமுக சார்பில் போட்டியிடும் மருது கணேஷை ஆதரித்து திமுக துணை பொதுச் செயலாளரும் எதிர்க்கட்சித் துணைத் தலைவருமான துரைமுருகன் பிரச்சாரத்தில் ஈடுபட்டார்.
அப்போது பேசிய அவர், இந்தத் தொகுதி, தமிழகத்தின் முதல்வராக இருந்த ஜெயலலிதா வெற்றி பெற்றும் எந்த வளர்ச்சியையும் அடையவில்லை என்று விமர்சனம் செய்தார். மேலும், கட்சியின் பெயரைக் கூட அதிமுகவினரால் காப்பாற்ற முடியவில்லை என்றும் இரட்டை இலை சின்னத்தை பாதுகாக்க முடியவில்லை என்றும் கூறிய துரைமுருகன் தமிழகத்தை எப்படி இவர்கள் காப்பாற்றுவார்கள் என்று கிண்டல் அடித்தார்.
அதிமுகவைச் சேர்ந்த ஒருவரால் அவர்களது கட்சியின் பெயரை உச்சரிக்கக் கூட முடியவில்லை என்று கூறிய துரைமுருகன் ஆர்.கே. நகர் தொகுதியில் திமுக அமோக வெற்றி பெறும் என்று நம்பிக்கை தெரிவித்தார். மேலும், இன்னும் 6 மாதத்தில், தமிழகத்தில் ஆட்சி மாற்றம் உறுதியாக ஏற்படும் என்றும் அதனைத் தொடர்ந்து மு.க. ஸ்டாலின் முதல்வராவது உறுதி என்றும் துரைமுருகன் கூறினார்.
-
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன? -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்! -
காலியான ராஜ்யசபா எம்பி பதவி! இன்று வேட்புமனு தாக்கல் தொடக்கம்! தவெகவின் முதல் எம்பி யார்?












Click it and Unblock the Notifications