முரசொலி அலுவலக விசிட், கொள்ளுப்பேரன் திருமணம்...தொண்டர்களை அடுத்தடுத்து உற்சாகப்படுத்தும் கருணாநிதி
தனது கொள்ளுபேரனின் திருமணத்தில் திமுக தலைவர் கருணாநிதி பங்கேற்பார் என்ற தகவலால் தொண்டர்கள் உற்சாகமடைந்துள்ளனர்.
Recommended Video

சென்னை: தனது கொள்ளுபேரனின் திருமணத்தில் திமுக தலைவர் கருணாநிதி பங்கேற்பார் என்ற தகவலால் தொண்டர்கள் உற்சாகமடைந்துள்ளனர்.
திமுக தலைவர் கருணாநிதி கடந்த ஓராண்டுக்கும் மேலாக உடல் நலக்குறைவால் பாதிக்கப்பட்டுள்ளார். சுவாச கோளாறு உள்ளிட்ட பிரச்சனைகளுக்காக காவேரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட அவருக்கு டிரக்கியாஸ்டமி கருவி பொருத்தப்பட்டு தொடர் சிகிச்சை பெற்று வந்தார்.
கருணாநிதியின் உடல்நிலை குறித்து அவ்வப்போது வதந்திகள் பரவின. ஆனால் அவரது உடல்நிலையில் முன்னேற்றம் ஏற்பட்டுள்ளதாக மருத்துவர்கள் கூறி வந்தனர்.

காண்காட்சியை பார்வையிட்டார்
இந்நிலையில் கடந்த வாரம் கருணாநிதி சென்னை கோடம்பாக்கத்தில் உள்ள முரசொலி அலுவலகத்திற்கு வந்தார். அங்கு அமைக்கப்பட்டிருந்த முரசொலி புகைப்படக் கண்காட்சியை பார்வையிட்டார்.

கையசைத்த கருணாநிதி
பின்னர் முரசொலி அலுவலகத்தில் இருந்து புறப்பட்ட அவர், காரில் இருந்தபடியே தொண்டர்களை பார்த்து கையசைத்து சிரித்தார். இதனால் தொண்டர்கள் பெரும் மகிழ்ச்சியடைந்தனர்.

மருத்துவர் சொன்ன அதிசயம்
இன்னும் ஒருசில நாட்களில் மேலும் ஒரு அதிசயம் நடைபெறும் என கருணாநிதியில் மருத்துவர் கூறியிருந்தார். இதைத்தொடர்ந்து கருணாநிதி விரைவில் பேசுவார் என அவரது தொண்டர்கள் எதிர்பார்த்துள்ளனர்.

திருமணத்தில் பங்கேற்கும் கருணாநிதி
இந்நிலையில் வரும் நவம்பர் ஒன்றாம் தேதி முக.முத்துவின் பேரனும் கருணாநிதியின் கொள்ளுப் பேரனுமான மனுரஞ்சித்திற்கும் நடிகர் விக்ரமின் மகள் அக்ஷிதாவுக்கும் வரும் நவம்பர் ஒன்றாம் தேதி சென்னை கோபாலபுரத்தில் திருமணம் நடைபெறவுள்ளது. இதில் திமுக தலைவர் கருணாநிதி கலந்துகொள்வார் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

தொண்டர்கள் மகிழ்ச்சி
திமுக தலைவர் கருணாநிதி ஓராண்டுக்குப் பிறகு திருமண நிகழ்ச்சியில் பங்கேற்கவுள்ளார். கருணாநிதி மீண்டும் ஃபார்முக்கு வருவது திமுக தொண்டர்களிடையே மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
-
MDMK quit?: திமுக கூட்டணியில் மதிமுக தொடருமா? கிளைமாக்ஸ் ஜூன் 27-ஆம் தேதி? -
4 தொகுதி இடைத்தேர்தலை புறக்கணிக்க திமுக முடிவு? ஸ்டாலினின் ராஜதந்திரம்! -
இதாம்லே ட்விஸ்டு.. துண்டை போட்ட உடன்பிறப்புகள்! நழுவிய தவெக நிர்வாகிகள்! விஜய் காதுக்கு போன மேட்டர்! -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
"திமுககாரன்னா திமிர் இருக்கணும்".. காரணம் சொல்லி ‘ஜென் ஸி' மீட்டப்பில் பேசிய டிஆர்பி ராஜா -
திருச்சியில் விஜய்யை சிரித்தபடி ஓடிச்சென்று வரவேற்ற மதிமுக துரை வைகோ! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
பிளான் A எடப்பாடி.. பிளான் B திருமா.. திமுக பிளான்.. புட்டு புட்டு வைத்த காதர் மொகிதீன் -
ஸ்டாலினே சொன்னா தான் உண்டு.. திமுக - அதிமுக கூட்டணி முயற்சி நடந்ததா? 30 நாளாய் நீடிக்கும் மர்மம்! -
10ல் 1ல் மட்டுமே வெற்றி.. எனன் நடந்தது? தேமுதிக மா.செக்களை அழைத்து விசாரிக்கும் பிரேமலதா விஜயகாந்த் -
Gen Z DMK Meetup.. விஜய் ஏற்படுத்திய ‘இன்ஸ்டா’ புயல்! இளைய தலைமுறையை நெருங்கும் திமுக! கைகொடுக்குமா? -
விஜய்க்கு விஷப் பரிட்சை..திமுகவுக்கு அக்னி பரிட்சை! இடைத் தேர்தலுக்கு ரெடியான கழகங்கள்! அதிமுக அமைதி










Click it and Unblock the Notifications