For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

தமிழக சட்டசபைத் தேர்தலில் திமுக தேர்தல் அறிக்கை தான் சூப்பர் ஹீரோ...: ஸ்டாலின்

Google Oneindia Tamil News

சென்னை: மக்களின் நாடித் துடிப்பை அறிந்து, அதற்கேற்ற வகையில் தயாரிக்கப்பட்டுள்ள திமுக தேர்தல் அறிக்கை, தமிழக சட்டசபைத் தேர்தலில் சூப்பர் கதாநாயகனாக இருக்கும் என அக்கட்சியின் பொருளாளர் ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

கடந்த ஞாயிறன்று திமுக தேர்தல் அறிக்கை வெளியிடப்பட்டது. அதில், மதுவிலக்கு சட்டம், விவசாயக் கடன், கல்விக் கடன் ரத்து உள்ளிட்ட பல்வேறு திட்டங்கள் வாக்குறுதிகளாக அறிவிக்கப்பட்டுள்ளன.

இந்நிலையில், சட்டசபைத் தேர்தல் பணிகள் குறித்து திமுக தலைவர் கருணாநிதியை கோபாலபுரம் இல்லத்தில் சந்தித்துப் பேசினார் அக்கட்சியின் பொருளாளர் ஸ்டாலின்.

அதனைத் தொடர்ந்து செய்தியாளர்களைச் சந்தித்தார் ஸ்டாலின். அப்போது அவர் கூறியதாவது:-

சூப்பர் கதாநாயகன்...

சூப்பர் கதாநாயகன்...

இளைஞர்கள், மாணவர்கள், மகளிர், தொழிலாளர்கள், மாற்றுத் திறனாளிகள், அரசு ஊழியர்கள், நெசவாளர்கள், விவசாயிகள் என்று எல்லாதரப்பு மக்களுடைய நாடித்துடிப்பை அறிந்து, அதற்கு ஏற்ற வகையில் இந்த தேர்தல் அறிக்கை தயாரிக்கப்பட்டுள்ளது. எனவே, வரும் தேர்தலில் திமுக தேர்தல் அறிக்கை சூப்பர் கதாநாயகனாக இருக்கும்.

மக்களிடம் வரவேற்பு...

மக்களிடம் வரவேற்பு...

கல்விக் கடன் ரத்து, விவசாயக் கடன் ரத்து, முழு மதுவிலக்கு, வேளாண் துறைக்கு தனி பட்ஜெட், நீர்ப்பாசனத்துக்கு தனி துறை போன்ற அம்சங்கள் மக்களிடம் பெரும் வரவேற்பை பெற்றுள்ளன.

திமுகவின் வரலாறு...

திமுகவின் வரலாறு...

திமுகவைப் பொறுத்தவரை ‘சொன்னதைச் செய்வோம், செய் வதைச் சொல்வோம்' என்பதுதான் வரலாறு.

ராமதாஸின் குற்றச்சாட்டு...

ராமதாஸின் குற்றச்சாட்டு...

பாமக தேர்தல் அறிக்கையை திமுக காப்பி அடித்துள்ள தாக ராமதாஸ் கூறியிருக்கிறார். அவரது தேவையற்ற கருத்துக்கு பதில் சொல்லி எனது நேரத்தை வீணடிக்க விரும்பவில்லை.

வேட்பாளர் பட்டியல்...

வேட்பாளர் பட்டியல்...

திமுக வேட்பாளர் பட்டியல் விரைவில் வெளியிடப்படும்" என இவ்வாறு அவர் தெரிவித்தார்.

English summary
DMK treasurer Stalin has said that his party's manifesto is a super hero in this assembly election.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X