For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

தேமுதிகவுடன் கூட்டணி இல்லை- 35 தொகுதிகளில் திமுக போட்டி?

By Mathi
Google Oneindia Tamil News

சென்னை: லோக்சபா தேர்தலில் தேமுதிகவுடனான திமுகவின் கூட்டணி முயற்சிகள் தோல்வியில் முடிவடைந்துவிட்டதாகவே தெரிகிறது. இதனால் தற்போதைய கூட்டணி கட்சிகளுடன் தொகுதிப் பங்கீட்டு பேச்சுவார்த்தையை மேற்கொண்டிருக்கும் திமுக 35 தொகுதிகளில் போட்டியிடக் கூடும் எனத் தெரிகிறது.

லோக்சபா தேர்தலில் திமுக தலைமையிலான கூட்டணியில் விடுதலை சிறுத்தைகள், இந்திய யூனியன் முஸ்லிம் லீக், மனித நேய மக்கள் கட்சி, புதிய தமிழகம் ஆகியவை இடம்பெறுள்ளன.

இக்கட்சிகளுடன் இன்று தொகுதிப் பங்கீட்டு பேச்சுவார்த்தையை திமுக நடத்துகிறது. இன்றே தொகுதிகளை இறுதி செய்யவும் திமுக மும்முரம் காட்டி வருகிறது.

தேமுதிக வரவில்லை..

தேமுதிக வரவில்லை..

தேமுதிகவுடன் கூட்டணி அமைக்க பகீரத முயற்சிகளை திமுக மேற்கொண்டது. விஜயகாந்தின் சிங்கப்பூர் பயணத்துக்கு முன்பு வரைகூட திமுக முட்டி மோதிப் பார்த்தது. ஆனாலும் எந்த ஒரு பயனும் இல்லை என்றே கூறப்படுகிறது.

புதிய கட்சிகள் எதுவும் இல்லை...

புதிய கட்சிகள் எதுவும் இல்லை...

இந்த நிலையில் திமுக அணியில் புதிய கட்சிகள் இணைய வாய்ப்பில்லை என்று திமுக தலைவர் கருணாநிதி நேற்று கூறியும் இருக்கிறார். இதனால் திமுக அணியில் தேமுதிக இடம்பெறுவதற்கான வாய்ப்புகள் இல்லை என்றே தெரிகிறது.

தொகுதி பங்கீட்டு பேச்சுவார்த்தை

தொகுதி பங்கீட்டு பேச்சுவார்த்தை

இதைத் தொடர்ந்து திமுகவில் இருக்கும் கூட்டணிக் கட்சிகளுடனான பேச்சுவார்த்தையை ஜரூராக தொடங்குகிறது திமுக

விசிக்கு 2 தொகுதிகள்

விசிக்கு 2 தொகுதிகள்

திமுக அணியில் விடுதலை சிறுத்தைகள் கடந்த முறை 2 தொகுதிகளைப் பெற்றது. இம்முறை கூடுதல் தொகுதிகளை அக்கட்சி வலியுறுத்தினாலும் சிதம்பரம் மற்றும் காஞ்சிபுரம் தொகுதிகள் ஒதுக்கப்படலாம் எனக் கூறப்படுகிறது.

புதிய தமிழகத்துக்கு தென்காசி

புதிய தமிழகத்துக்கு தென்காசி

புதிய தமிழகம் கட்சிக்கு தென்காசி தொகுதி ஒதுக்கீடு செய்யப்படுவது உறுதியான ஒன்று என கூறப்படுகிறது. அங்கு புதிய தமிழகம் கட்சியின் தலைவர் டாக்டர் கிருஷ்ணசாமியின் மகள் டாக்டர் சங்கீதா போட்டியிடக் கூடும்.

வேலூரில் இ.மு.லீக்

வேலூரில் இ.மு.லீக்

இந்திய யூனியன் முஸ்லிம் லீக் கட்சிக்கு வேலூர் தொகுதி ஒதுக்கப்படும் எனத் தெரிகிறது. ஆனால் திமுக கூட்டணியில் முஸ்லிம் லீக் மற்றும் மனித நேய மக்கள் கட்சி என இரண்டு முஸ்லிம் கட்சிகள் இருப்பதால் தலா 2 தொகுதிகள் கொடுத்தால் மகிழ்வோம் என்று முஸ்லிம் லீக் தலைவர் காதர் மொகிதீன் கருத்து தெரிவித்துள்ளார்.

ராமநாதபுரத்தில் ம.ம.க.

ராமநாதபுரத்தில் ம.ம.க.

மனித நேய மக்கள் கட்சிக்கு ராமநாதபுரம் தொகுதி ஒதுக்கப்பட இருக்கிறது.

35 தொகுதிகளில் திமுக போட்டி?

35 தொகுதிகளில் திமுக போட்டி?

இதனால் கூட்டணிக் கட்சிகளுக்கு ஒதுக்கியது போக 35 தொகுதிகளில் திமுக போட்டியிடக் கூடும் என்பது உறுதியாகி இருக்கிறது.

வேட்பாளர் பட்டியல்?

வேட்பாளர் பட்டியல்?

இன்று தொகுதிப் பங்கீடு முடிவடைந்துவிடும் நிலையில் உடனடியாக நாளையே திமுகவின் வேட்பாளர் பட்டியலும், தேர்தல் அறிக்கையும் வெளியாகக் கூடும் என்றும் அறிவாலய வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

அதிமுகவும் 30க்கு மேற்பட்ட தொகுதிகளில்..

அதிமுகவும் 30க்கு மேற்பட்ட தொகுதிகளில்..

அதிமுக அணியிலும் இடதுசாரிகளுக்கு சில தொகுதிகளை மட்டும் ஒதுக்கிவிட்டு அக்கட்சியும் 35க்கும் மேற்பட்ட இடங்களில் போட்டியிடக் கூடும் என்பது குறிப்பிடத்தக்கது.

English summary
ith no progress in DMK's efforts to rope in DMDK into its fold, the party may end up contesting 35 seats including neighbouring Puducherry.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X