வேலூர் சிறைவாசலில் செய்தியாளர்களை அசிங்கமாக திட்டிய திமுக நிர்வாகிகள்
வேலூர்: பத்திரிக்கையாளர்களை தாக்கிய வழக்கில் கைது செய்யப்பட்ட திமுக நிர்வாகிகள் வேலூர் சிறைவாசல் முன்பு செய்தியாளர்களை ஆபாச வார்த்தைகளால் திட்டினர்.
நாடாளுமன்ற தேர்தலில் திமுக போட்டியிட்ட அனைத்து இடங்களிலும் தோல்வியை தழுவியது. இந்த நிலையில் அக்கட்சியின் பொருளாளர் மு.க.ஸடாலின் தோல்விக்கு பொறுப்பு ஏற்று தனது பதவியை ராஜினாமா செய்யதுள்ளார் என்ற பரபரப்பு தகவல் வெளியானது.
இதையடுத்து செய்தியாளர்கள் குழு சென்னையில் உள்ள அண்ணா அறிவாலயம், திமுக தலைவர் கருணாநிதி இல்லம், பொருளாளர் மு.க.ஸ்டாலின் இல்லம் ஆகிய இடங்களுக்கு சென்று அந்த தகவலின் உண்மைத் தன்மையை உறுதி செய்ய முயன்று கொண்டு இருந்தது.
இந்த நிலையில் ஸ்டாலின் இல்லம் முன்பு செய்தியாளர்களை திமுக நிர்வாகிகள் சிலர் தாக்கினர். இந்த தாக்குதலில் காயம் அடைந்தவர்கள் மருத்துவ மனையில் அனுமதிக்கப்பட்டனர். மேலும் இந்த விவாகரம் குறித்து சென்னை பெருநகர காவல் ஆணையரிடம் புகார் செய்தனர்.
அவர்களின் புகாரின் பேரில் திமுகவைச் சேர்ந்த முக்கிய நிர்வாகிகள் 11 பேர் கைது செய்யப்பட்டனர். கைது செய்யப்பட்ட அனைவரும் வேலூர் சிறையில் அடைக்கப்பட்டனர்.
அவர்களை வேலூர் சிறைவாசலுக்கு கொண்டு வரும்போது அங்கு செய்தியாளர்கள், பத்திரிக்கையாளர்கள், ஒளிப்பதிவாளர்கள், புகைப்படக் கலைஞர்கள் குழுமியிருந்தனர்.
கைது செய்யப்பட்ட திமுக நிர்வாகிகளை படம் எடுத்த போது அனைவரையும் கைதான 11 பேரும் தகாத வார்த்தைகளில் திட்டி கொலை மிரட்டல் விடுத்தனர். மேலும் மு.க.ஸ்டாலினுக்கு ஆதரவாக கோஷம் எழுப்பினர்.
-
"வாயை மூடி பேசவும்" மாவட்டச் செயலாளர்கள் கண்ட்ரோலில் திமுக குழு.. விரக்தியில் அடிமட்ட தொண்டர்கள்! -
திமுகவில் உதயநிதிக்கு செயல் தலைவர் பதவி? மெல்ல நகரும் திட்டம்.. ஸ்டாலின் மேஜையில் ரிப்போர்ட் -
சிலுப்பிகிட்டு போகும் சிறுத்தை குட்டிகள்..க்ரீன் சிக்னல் காட்டிய அறிவாலயம்! குறுக்கே நிற்கும் திருமா -
கிளிக்கு றெக்கை முளைச்சுடுத்து... பறந்து போயிடுத்து! ஸ்டாலினை பார்த்த ஆளூர்? எம்பியாக்கும் திருமா? -
குதிரை வேகத்தில் குதிரை பேரம்! இந்த கண்றாவி காட்சியை பார்க்கத்தான் ஓட்டு போட்டார்களா? -மு.க.ஸ்டாலின் -
CM Saar.. மாறி மாறி மக்களை ஏமாற்றும் விஜய்.. SCAM செய்யும் தவெக அரசு.. உதயநிதி ஸ்டாலின் அதிரடி! -
தலைமைச் செயலகத்தை தவெக கட்சி அலுவலகமாக மாற்றுவதா? திமுக எம்பி வில்சன் கண்டனம் -
திமுகவில் மீண்டும் ‘செயல் தலைவர்’ பதவி? களமிறக்கப்படும் உதயநிதி - கனிமொழி.. ஸ்டாலின் பிளான் என்ன? -
கோவை சிறுமி விவகாரத்தை.. திமுகவுடன் தொடர்புபடுத்துவதா? ஆர்.எஸ்.பாரதி கண்டனம் -
ஃபேக் நியூஸ்.. தூக்கம் தொலைத்த திமுக நிர்வாகிகள்.. களம் இறங்கிய திமுக தலைமை.. வில்சன் எம்பி அதிரடி -
கைய குடுங்க பங்கு.. விஜய்ய முடிச்சு விடனும்! திரைமறைவில் கைகோர்த்த திமுக -அதிமுக! உடைந்த கூட்டணிகள்! -
வாட் ப்ரோ.. இட்ஸ் வெரி ராங் ப்ரோ! திராவிட மாடல் 2.0 ஆட்சி தான் தவெக! அடித்து துவைத்த அர்ஜுன் சம்பத்












Click it and Unblock the Notifications