எனக்கு இந்த 2 அமைச்சர்களை ரொம்ப பிடிக்கும்.. ஏன் தெரியுமா? திமுக எம்எல்ஏ பேச்சால் குலுங்கிய சட்டசபை
திமுக எம்எல்ஏ அன்பில் மகேஷ் பொய்யா மொழி தமக்கு 2 அமைச்சர்களை மிகவும் பிடிக்கும் என தெரிவித்தார்.
சென்னை: திமுக எம்எல்ஏ அன்பில் மகேஷ் பொய்யா மொழி தமக்கு 2 அமைச்சர்களை மிகவும் பிடிக்கும் என கூறி அதற்கு விளக்கமும் அளித்துள்ளார்.
தமிழக சட்டசபை துறை வாரியான மானிய கோரிக்கைகள் மீதான விவாதம் நடைபெற்று வருகிறது. இன்றைய கூட்டத்தில் போக்குவரத்துத்துறை மீதான மானிய கோரிக்கை மீதான விவாதம் நடைபெற்றது.
அப்போது பேசிய திமுக எம்எல்ஏ அன்பில் மகேஷ் பொய்யாமொழி அதிமுக அமைச்சர்கள் வரிசையில் தமக்கு 2 அமைச்சர்களை மிகவும் பிடிக்கும் என்றார்.

பேசவே மாட்டாங்க
ஒருவர் பாலகிருஷ்ணாரெட்டி மற்றொருவர் பாஸ்கரன் என்றார். இந்த இருவரும் தமக்கு மிகவும் பிடித்தவர்கள் என்றும், ஒருவர் எப்போது சிரித்தமுகத்துடன் இருப்பார் என்றும் மற்றொருவர் அமைதியாகவும் இருப்பார் என்றும் அன்பில் பொய்யாமொழி கூறினார்.

தமக்கு வசதியாக இருக்கும்
அதேபோல், அனைத்து அமைச்சர்களும் இருந்தால் தமது உரையை முடிக்க வசதியாக இருக்கும் என்றும் அவர் கூறினார். இதனால் சட்டசபையில் சிரிப்பலை எழுந்தது.

வருவதும் தெரியாது போவதும் தெரியாது
அப்போது குறுக்கிட்டு பேசிய துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம், மிகப்பெரிய அரசியல் பாரம்பரிய குடும்பத்தை சேர்ந்த அன்பில் மகேஷ் பொய்யாமொழி, அவைக்கு வருவதும் தெரியாது, போவதும் தெரியாது.

மீண்டும் சிரிப்பலை
அந்த அளவுக்கு அமைதியானவர் என்று தெரிவித்தார். அவரை போலவே மற்ற திமுக உறுப்பினர்களும் இருக்க வேண்டும் என கேட்டுக்கொள்வதாக கூறினார். இதனால் மீண்டும் அவையில் சிரிப்பலை ஏற்பட்டது.

சட்டசபையில் உதயநிதி
திமுக எம்எல்ஏ அன்பில் மகேஷ் பொய்யாமொழி மற்றும் துணை முதல்வர் ஓபிஎஸின் பேச்சால் சட்டசபை சிரிப்பலையில் குலுங்கியது. இதனிடையே அன்பில் மகேஷ் பொய்யாமொழி பேசுவதை பார்க்க அவரது நண்பர் உதயநிதி ஸ்டாலின் இன்று சட்டசபைக்கு வந்திருந்தார்.
-
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
Gen Z மீட்டிங் நடத்திய திமுக.. தவெக பலமான இடமே வேறு.. நெட்டிசன்கள் சொல்லும் விஷயம் -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
"திமுககாரன்னா திமிர் இருக்கணும்".. காரணம் சொல்லி ‘ஜென் ஸி' மீட்டப்பில் பேசிய டிஆர்பி ராஜா -
“கொளத்தூரில் ஸ்டாலின் தோற்பார் என முன்பே தெரியும்.. திமுகவிடம் சொன்னோம்”.. காதர் மொய்தீன் தடாலடி! -
தீக்குளித்த தஞ்சை மகேந்திரனின் குடும்பத்தினரிடம் மன்னிப்பு கேட்டார் எடப்பாடி! ரூ 55 லட்சம் நிவாரணம் -
அதிமுகவிற்கு ஆதரவாக வந்த திமுக.. முதல்வர் விஜய்க்கு எதிராக வியூகம்.. கவனிச்சீங்களா -
எடப்பாடி பழனிசாமி இந்த அதிர்ச்சியை தாங்குவாரா? மேலும் 3 அதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா? -
பிளான் A எடப்பாடி.. பிளான் B திருமா.. திமுக பிளான்.. புட்டு புட்டு வைத்த காதர் மொகிதீன் -
ஸ்டாலினே சொன்னா தான் உண்டு.. திமுக - அதிமுக கூட்டணி முயற்சி நடந்ததா? 30 நாளாய் நீடிக்கும் மர்மம்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
விஜய்க்கு விஷப் பரிட்சை..திமுகவுக்கு அக்னி பரிட்சை! இடைத் தேர்தலுக்கு ரெடியான கழகங்கள்! அதிமுக அமைதி












Click it and Unblock the Notifications