ராணுவம் போல் ஆக்கிரமிக்கப்பட்டுள்ள மெரினா.. காவல்துறைக்கு அவமானம்.. ஜெ. அன்பழகன்
மெரினா கடற்கரை ராணுவம் போல காவல் கட்டுப்பாட்டில் வைக்கப்பட்டுள்ளதாகவும், அதனை மக்கள் பயன்பாட்டிற்கு வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் திமுக எம்எல்ஏ ஜெ. அன்பழகன் காவல் ஆணையரை கேட்டுக் கொண்டுள்ளா
சென்னை : மெரினா கடற்கரையை காவல் கட்டுப்பாட்டில் வைத்துள்ளது சென்னை நகர காவல்துறைக்கு களங்கம் என்பதால் உடனடியாக மக்கள் பயன்பாட்டுக்கு அளிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று காவல் ஆணையரை திமுக எம்எல்எ ஜெ. அன்பழகன் கேட்டுக் கொண்டுள்ளார்.
நீட் தேர்வுக்கு தடை கேட்டு கடந்த இரண்மு நாட்களுக்கு முன்னர் திடீரென மாணவ அமைப்பினர் சென்னை மெரினாவில் உள்ள ஜெயலலிதா சமாதி முன்பு போராட்டத்தில் ஈடுபட்டனர். போராட்டத்தில் ஈடுபட்ட மாணவர்களை போலீசார் வலுக்கட்டாயமாக வெளியேற்றினர்.
இதனையடுத்து மெரினா கடற்கரையில் மாணவர்கள் ஒன்று திரண்டு போராட்டம் நடத்தக் கூடும் என்பதால் மெரினா கடற்கரை சாலையில் கடுமையான கெடுபிடிகள் போடப்பட்டுள்ளன. இதே போன்று மெரினா கடற்கரை செல்லும் சர்வீஸ் சாலையிலும் ஆங்காங்கே பேரிகார்டுகள் அமைத்து போலீஸ் கண்காணிப்பு அதிகரிக்கப்பட்டுள்ளது.

மெரினாவிற்கு சீல்
இந்நிலையில் மெரினாவில் போலீஸ் போடப்பட்டிருக்கது குறித்து சேப்பாக்கம் தொகுதி எம்எல்ஏ ஜெ.அன்பழகன் சென்னை மாநகர ஆணையருக்கு எழுதியுள்ள கடிதத்தின் நகலை டுவிட்டரில் வெளியிட்டுள்ளார். அதில் அவர் கூறியுள்ளதாவது : உலகின் அழகான கடற்கரையில் இரண்டாவது இடம் பெற்ற மெரினா கடற்கரை தற்போது காவல்துறை கட்டுப்பாட்டில் சீல் வைத்துள்ளனர்.
|
மக்கள் பயன்பாட்டிற்கு
சென்னை நகரின் பொழுதுபோக்கு அம்சமாக விளங்குவதும் குறிப்பாக என்னுடைய சேப்பாக்கம் - திருவல்லிக்கேனி தொகுதி மக்களக்கு மிகவும் விரும்பும் இடமாக உள்ள மெரினா கடற்கரைக்கு யாரும் செல்லமுடியவில்லை. எனக்கு வலைதளங்கள் மூலம் பொதுமக்கள் தெரிவித்துள்ளனர், அரசுக்கு எடுத்துச் சொல்லி உடனடியாக மக்கள் பயன்பாட்டிற்கு ஏற்பாடு செய்ய வேண்டும் என கேட்டுள்ளனர்.

களங்கம்
ஆகவே சென்னை நகர காவல்துறை கமிஷனர் உடனடியாக தலையிட்டு காவல்துறைக்கு உத்தரவிட்டு மக்கள் பயன்பெற அனுமதிக்க வேண்டும்.
போராட்டங்களை கண்டு காவல்துறை ராணுவம் போல் கடற்கரையை ஆக்கிரமித்திருப்பது சென்னை நகர காவல்துறைக்கு களங்கம். ஆகவே மாநகர் என்று அன்பழகன் குறிப்பிட்டுள்ளார்.

எதிர்பார்ப்பு
நாளை மற்றும் நாளை மறுதினம் வாரவிடுமுறையாக உள்ள நிலையில் அன்பழகன் காவல் ஆணையருக்கு இந்த கோரிக்கையை விடுத்துள்ளார். இந்த கோரிக்கையை ஏற்று கட்டுப்பாடுகள் தளர்க்கப்படுமா என்ற எதிர்பார்ப்பில் மக்கள் உள்ளனர்.
-
Thirupparankundram Files: திருப்பரங்குன்றம் பைல்ஸ் ஆவணப்பட திரையிடலுக்கு அனுமதி மறுப்பு.. "மேலிட உத்தரவு" என்ற போலீஸ் -
இர்ஃபானின் ரூ. 3650 பிரியாணியை வறுத்தெடுத்த யூடியூப்பர்.. ப்ளூ சட்டை மாறனுடன் ஒப்பிட்டு கலாய் -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்?












Click it and Unblock the Notifications