உதயநிதி கருவிலேயே அரசியலுக்கு வந்தவர்... ஸ்டாலினுக்கு பின் நிற்கவேண்டும் - மா.சுப்ரமணியன்
உதயநிதி அரசியலுக்கு வர ஸ்டாலின் தடையாக இருக்க மாட்டார் என்று முன்னாள் மேயர் மா.சுப்ரமணியன் கூறியுள்ளார்.
Recommended Video

சென்னை: திமுக தியாக வரலாறு கொண்டது. உதயநிதி ஸ்டாலின் கருவிலேயே அரசியலுக்கு வந்தவர் என்று கூறியுள்ளார் சைதாபேட்டை தொகுதி திமுக எம்எல்ஏவும், முன்னாள் மேயருமான மா.சுப்ரமணியன் கூறியுள்ளார்.
உதயநிதி ஸ்டாலின் அரசியலுக்கு வர தயார் என்று சமீபத்தில் கூறியிருந்தார். ஸ்டாலின் உத்தரவிட்டால் வரத்தயாராக இருப்பதாகவும் ஊடகங்களில் பேட்டி கொடுத்திருந்தார். உதயநிதி ஸ்டாலினை அரசியலுக்கு அழைக்கும் வகையில் முன்னாள் மேயர் மா. சுப்ரமணியன் கூறியுள்ளார்.
சைதாபேட்டையில் நடைபெற்ற பொங்கல் விழாவில் பேசிய மா. சுப்ரமணியன், ஒரு சிலர் ஒரு படத்தில் நடித்து விட்டு முதல்வராக ஆசைப்படுகின்றனர். இன்றைக்கு அப்படி ஒரு சூழல் உருவாகி விட்டது.

உதயநிதி ஸ்டாலின்
திமுகவில் உள்ளவர்கள் தியாகம் செய்தவர்கள். கருணாநிதி சிறையில் இருந்த போது ஸ்டாலின் சிறு வயதில் சென்று பார்த்தார். அதே போல ஸ்டாலின் சிறையில் இருந்த போது கருவிலேயே சென்று பார்த்தவர் உதயநிதி.

ஸ்டாலின் தடையில்லை
உதயநிதி அரசியலுக்கு வர ஸ்டாலின் ஒருபோதும் தடையாக இருக்க மாட்டார். உங்களைப் போன்ற இளைஞர்கள் ஸ்டாலின் பின்னால் உறுதுணையாக நிற்க வேண்டும். இந்த மேடையை விட்டு இறங்கும் போதே அரசியலுக்கு வந்து விட்டேன் என்று கூற வேண்டும் என்று தெரிவித்தார்.

இளைஞர்கள் அரசியல்
நாங்கள் எல்லாம் ரிட்டையர் ஆகும் வயது வந்து விட்டது. உதயநிதி, அன்பில் மகேஷ் போன்றவர்கள் அரசியலில் இளைஞர்கள் என்பதால் மூத்த தலைவர்களின் பின்னால் நின்று அரசியலில் ஈடுபடவேண்டும் என்றும் கூறினார்.

மா.சுப்ரமணியன்
தந்தை ஸ்டாலினை தம்பி வா...தலைமையேற்க வா என்று கண் கலக்கி அழைத்தார் துரைமுருகன். இப்போது மா. சுப்ரமணியன், உதயநிதி ஸ்டாலின் அரசியலுக்கு வர வேண்டும் என்று அழைப்பு விடுத்துள்ளார். விரைவில் இளைஞர் அணி தலைவர் பதவி உதயநிதி வசமாகும் என்று எதிர்பார்க்கலாம்.
-
ஸ்டாலின் குடகு பயணம்.. திமுகவில் நடக்கும் பெரிய மாற்றம்.. கூண்டோடு தூக்கப்படும் தலைகள்! பின்னணி -
Gen Z மீட்டிங் நடத்திய திமுக.. தவெக பலமான இடமே வேறு.. நெட்டிசன்கள் சொல்லும் விஷயம் -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
"திமுககாரன்னா திமிர் இருக்கணும்".. காரணம் சொல்லி ‘ஜென் ஸி' மீட்டப்பில் பேசிய டிஆர்பி ராஜா -
“கொளத்தூரில் ஸ்டாலின் தோற்பார் என முன்பே தெரியும்.. திமுகவிடம் சொன்னோம்”.. காதர் மொய்தீன் தடாலடி! -
பொதுச்செயலாளர் பதவியை விட்டு விலகுகிறார் திமுக துரைமுருகன்? ஸ்டாலினின் அடுத்த சாய்ஸ் அவர்? -
ஸ்டாலினே சொன்னா தான் உண்டு.. திமுக - அதிமுக கூட்டணி முயற்சி நடந்ததா? 30 நாளாய் நீடிக்கும் மர்மம்! -
எதிர்காலம் நம்பிக்கையளிக்கிறது.. எனர்ஜி கூடுகிறது! ஜென் ஸி கூட்டம் குறித்து மு.க.ஸ்டாலின் நெகிழ்ச்சி -
10ல் 1ல் மட்டுமே வெற்றி.. எனன் நடந்தது? தேமுதிக மா.செக்களை அழைத்து விசாரிக்கும் பிரேமலதா விஜயகாந்த் -
விஜய்க்கு விஷப் பரிட்சை..திமுகவுக்கு அக்னி பரிட்சை! இடைத் தேர்தலுக்கு ரெடியான கழகங்கள்! அதிமுக அமைதி -
Gen Z DMK Meetup.. விஜய் ஏற்படுத்திய ‘இன்ஸ்டா’ புயல்! இளைய தலைமுறையை நெருங்கும் திமுக! கைகொடுக்குமா? -
அதிமுகவிற்கு ஆதரவாக வந்த திமுக.. முதல்வர் விஜய்க்கு எதிராக வியூகம்.. கவனிச்சீங்களா












Click it and Unblock the Notifications