அழகிரி விவகாரம்: தமிழக சட்டசபையில் அமளி: திமுக உறுப்பினர்கள் வெளியேற்றம்

தமிழக சட்டசபை நேற்று ஆளுநர் உரையுடன் துவங்கியது. நடப்பாண்டின் முதல் தொடரான இதில் கலந்து கொண்டு மக்கள் பிரச்சனைகள் பற்றி பேசுவோம் என்று திமுக பொருளாளர் மு.க. ஸ்டாலின் தெரிவித்திருந்தார்.
இந்நிலையில் இன்று சபை கூடிய பிறகு அதிமுக உறுப்பினர் மார்க்கண்டேயன் பேசுகையில்,
திமுக தலைவர் கருணாநிதி தனது மகன்கள் முக ஸ்டாலின் மற்றும் அழகிரி இடையேயான பிரச்சனையை வைத்து நாடகமாடுகிறார். தனது படுக்கை அறையில் அழகிரி அத்துமீறி நுழைந்ததாக கூறும் கருணாநிதி அவர் மீது போலீசில் புகார் கொடுக்காமல் பத்திரிக்கையாளர்களுக்கு பேட்டி கொடுத்துள்ளார் என்றார்.
அவரது பேச்சுக்கு கண்டனம் தெரிவித்த திமுக உறுப்பினர்கள் சபாநாயகர் தனபாலின் இருக்கைக்கு சென்று முற்றுகையிட்டனர்.
சபை குறிப்பில் இருந்து அதிமுகவினரின் அவதூறு பேச்சை நீக்க வேண்டும் என்று அவர்கள் கோஷமிட்டனர். மேலும் சபாநாயகர் அதிமுகவினருக்கு ஆதரவாக செயல்படுவதாகவும் அவர்கள் குற்றம்சாட்டினர்.
இதையடுத்து திமுக உறுப்பினர்கள் அனைவரும் சபையில் இருந்து வெளியேற்றப்பட்டனர்.












Click it and Unblock the Notifications