திமுக அமளியால் போர்க்களமானது சட்டசபை.. நாற்காலிகள் உடைப்பு, பேப்பர்கள் கிழிப்பு
சென்னை: சட்டசபையில் சபாநாயகர் எதிரேயுள்ள நாற்காலியை உடைத்து திமுகவினர் ரகளையில் ஈடுபட்டனர். இதனால் போர்க்களமானது சட்டசபை.

எடப்பாடி அரசுக்கு எதிரான நம்பிக்கை வாக்கெடுப்பை இன்னொரு நாளில் வைத்துக்கொள்ளலாம் என்று திமுக உறுப்பினர்கள் விடுத்த கோரிக்கையை சபாநாயகர் தனபால் ஏற்க மறுத்தார். ரகசிய வாக்கெடுப்பு நடத்தலாம் என்ற கோரிக்கையையும் அவர் ஏற்கவில்லை. இதையடுத்து சபாநாயகர் தனபாலை முற்றுகையிட்டு திமுகவினர் ரகளை செய்தனர். திமுக உறுப்பினர் பூங்கோதை மேஜை மீது ஏறி நின்று கோஷமிட்டார். சபாநாயகர் எதிரேயிருந்த நாற்காலிகள் சில தூக்கி வீசப்பட்டன. நாற்காலிகள் உடைக்கப்பட்டன. அதேநேரம், வன்முறை நிலை ஏற்பட்டால் ஆட்சி கலையுமோ என்ற அச்சத்தால் எடப்பாடி தரப்பு அமைதியாக இருந்தது.

திமுகவினரின் அமளியால் சட்டசபை போர்க்களமாக காட்சியளிக்கிறது. சபாநாயகரால் சபையை நடத்த முடியவில்லை. இதையடுத்து அவர் பாதியிலேயே வெளியேறினார். நம்பிக்கை வாக்கெடுப்பு நடத்தும் முடிவை அவர் கைவிட்டார். மதியம் நம்பிக்கை வாக்கெடுப்பு நடைபெற வாய்ப்புள்ளது
-
ஸ்டாலின் குடகு பயணம்.. திமுகவில் நடக்கும் பெரிய மாற்றம்.. கூண்டோடு தூக்கப்படும் தலைகள்! பின்னணி -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
"திமுககாரன்னா திமிர் இருக்கணும்".. காரணம் சொல்லி ‘ஜென் ஸி' மீட்டப்பில் பேசிய டிஆர்பி ராஜா -
“கொளத்தூரில் ஸ்டாலின் தோற்பார் என முன்பே தெரியும்.. திமுகவிடம் சொன்னோம்”.. காதர் மொய்தீன் தடாலடி! -
அதிமுகவிற்கு ஆதரவாக வந்த திமுக.. முதல்வர் விஜய்க்கு எதிராக வியூகம்.. கவனிச்சீங்களா -
பொதுச்செயலாளர் பதவியை விட்டு விலகுகிறார் திமுக துரைமுருகன்? ஸ்டாலினின் அடுத்த சாய்ஸ் அவர்? -
பிளான் A எடப்பாடி.. பிளான் B திருமா.. திமுக பிளான்.. புட்டு புட்டு வைத்த காதர் மொகிதீன் -
ஸ்டாலினே சொன்னா தான் உண்டு.. திமுக - அதிமுக கூட்டணி முயற்சி நடந்ததா? 30 நாளாய் நீடிக்கும் மர்மம்! -
எதிர்காலம் நம்பிக்கையளிக்கிறது.. எனர்ஜி கூடுகிறது! ஜென் ஸி கூட்டம் குறித்து மு.க.ஸ்டாலின் நெகிழ்ச்சி -
10ல் 1ல் மட்டுமே வெற்றி.. எனன் நடந்தது? தேமுதிக மா.செக்களை அழைத்து விசாரிக்கும் பிரேமலதா விஜயகாந்த் -
விஜய்க்கு விஷப் பரிட்சை..திமுகவுக்கு அக்னி பரிட்சை! இடைத் தேர்தலுக்கு ரெடியான கழகங்கள்! அதிமுக அமைதி -
Gen Z DMK Meetup.. விஜய் ஏற்படுத்திய ‘இன்ஸ்டா’ புயல்! இளைய தலைமுறையை நெருங்கும் திமுக! கைகொடுக்குமா?












Click it and Unblock the Notifications