ஆர்கே நகர் பணப்பட்டுவாடா விவகாரம்... முதல்வரின் ஒருவரி பதிலில் அதிருப்தி- திமுக வெளிநடப்பு!
ஆர்கே நகர் இடைத் தேர்தலில் வாக்காளர்களுக்கு பணம் விநியோகம் செய்யப்பட்ட விவகாரத்தில் முதல்வர் மீது வழக்கு பதிவு குறித்து அவரின் பதில் திருப்தி அளிக்கவில்லை என்று கூறி திமுக வெளிநடப்பு செய்தது.
சென்னை: ஆர்கே நகர் இடைத் தேர்தலில் பணப்பட்டுவாடா குறித்து முதல்வருக்கு எதிராக வழக்குப் பதிவு செய்ய தேர்தல் ஆணையம் உத்தரவிடப்பட்டுள்ளது குறித்த கேள்விக்கு புலன் விசாரணைக்கு உத்தரவிட்டுள்ளதாக முதல்வர் ஒரு வரியில் பதில் கூறியதால் திமுக எம்.எல்.ஏக்கள் சட்டசபையில் இருந்து வெளிநடப்பு செய்தனர்.
ஆர்.கே நகர் இடைத்தேர்தல் கடந்த ஏப்ரல் 12-ஆம் தேதி நடத்துவதாக தேர்தல் ஆணையம் அறிவித்தது. அதில் அதிமுகவின் இரு அணிகளு்ம போட்டியிட்டன. அதிமுக அம்மா அணி சார்பில் போட்டியிட்ட தினகரன் உள்ளிட்ட அமைச்சர்கள் பணப்பட்டுவாடா ஈடுபட்டதாக ஆதாரங்களுடன் நிரூபிக்கப்பட்டது.
இதைத் தொடர்ந்து கடந்த ஏப்.7-ஆம் தேதி தமிழக சுகாதாரத் துறை அமைச்சர் விஜயபாஸ்கர் உள்ளிட்டோர் வீடுகளில் வருமான வரி துறையினர் ரெய்டு நடத்தினர். அப்போது ரூ.89 கோடி கணக்கில் வராத பணம் பறிமுதல் செய்யப்பட்டது. இதைத் தொடர்ந்து ஐடி துறையினர் அளித்த அறிக்கையின் அடிப்படையில் ஆர் கே நகர் தேர்தல் ரத்து செய்யப்பட்டது.

தேர்தல் ஆணையம் உத்தரவு
இந்நிலையில் வழக்கறிஞர் வைரக்கண்ணன் தகவல் அறியும் உரிமை சட்டத்தின்படி தேர்தல் ஆணையத்தில் ஆர்கே நகர் தொகுதி பணப்பட்டுவாடா தொடர்பாக மனு ஒன்றைத் தாக்கல் செய்தார். இதற்கு பதிலளித்த தேர்தல் ஆணையம், முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி, 9 அமைச்சர்கள் மற்றும் டிடிவி தினகரன் மீது வழக்கு பதிவு செய்ய உத்தரவிட்டிருந்ததாக கூறியிருந்தது.

சட்டசபையில் ஸ்டாலின்
இந்த விவகாரத்தை இன்று சட்டசபையில் எதிர்க்கட்சித் தலைவர் ஸ்டாலின் எழுப்பினார். முதல்வர் மீது வழக்கு பதிவு செய்ய தேர்தல் ஆணையம் உத்தரவிட்டும் இதுவரை வழக்கு பதிவு செய்யப்படாதது ஏன் என்று முக ஸ்டாலின் கேள்வி எழுப்பினார்.

சபாநாயகர் அனுமதி மறுப்பு
இந்த விவகாரம் குறித்தும் விவாதம் நடத்தவும் அவர் அனுமதி கோரியும் சபாநாயகர் தனபால் அனுமதி வழங்கவில்லை. திமுக சார்பில் கவன ஈர்ப்பு தீர்மானம் கொண்டு வரப்பட்டது. எனினும் ஸ்டாலினை பேசவிடாமல் சபாநாயகர் தடுத்தார்.

திமுகவினர் அமளி
இதைத் தொடர்ந்து திமுகவினர் அதிமுக அரசுக்கு எதிராக கோஷங்களை எழுப்பி அமளியில் ஈடுபட்டனர். பின்னர் முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி எழுந்து பதிலளிக்கையில், ஆர்.கே.நகர் விவகாரம் குறித்து புலன் விசாரணைக்கு உத்தரவிடப்பட்டுள்ளது என்று ஒரு வரியில் விளக்கம் அளித்தார்.

வெளிநடப்பு
முதல்வர் எடப்பாடி பழனிச்சாமியின் இந்த ஒருவரி விளக்கம் திருப்தி அளிக்கவில்லை என்று கூறி திமுக எம்.எல்.ஏக்கள் வெளிநடப்பு செய்தனர். பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய ஸ்டாலின், தேர்தல் ஆணையத்தின் உத்தரவை மூடி மறைக்க தமிழக அரசு முயற்சிப்பதாக குற்றம்சாட்டினார்.
-
பொருளாக தராமல் ரூ.8,000 கூப்பன் கொடுப்பது ஏன்? மக்களிடம் முதல்வர் ஸ்டாலின் சொன்ன விளக்கம்! -
“இன்று இரவுக்குள் காங்கிரஸ் வேட்பாளர் பட்டியலை ராகுல் காந்தி வெளியிடுவார்"- ஈரோட்டில் சொன்ன ஸ்டாலின் -
பல லட்சம் ஊழியர்களுக்கு.. அடுத்தடுத்து கணக்கில் வரும் ரூ.3000.. யாருக்கு கிடைக்கும்? என்ன காரணம்? -
இரண்டாக உடையும் வானம்.. இடி, மின்னலுடன் பேய் மழை! வார்னிங் கொடுத்த வானிலை மையம் -
மூட்டை மூட்டையாக போய் தங்கத்தை அடகு வைக்கும் மக்கள்.. வெளியான ஷாக் தகவல்.. இப்படி ஒரு காரணமா? -
பத்திரப்பதிவில் இன்று முதல் புதிய ரூல்ஸ்! அதிகரிக்கும் சொத்து பதிவு செலவு! கலங்கும் நடுத்தர மக்கள் -
அந்த பேச்சு பேசின ஆதவ் அர்ஜுனா.. வில்லிவாக்கம் சம்பவத்தில் வாய் திறக்கலயே! கப்சிப் தவெக! -
ஏப்ரல் 1ம் தேதியான இன்று சம்பளம், கடன் எதுவுமே சாத்தியமில்லை... மக்கள் அறிய வேண்டிய உண்மை -
தங்கத்தை இப்போது வாங்கலாமா? இல்லை கொஞ்சம் காத்திருக்கலாமா? ஒரே வரியில் ஆனந்த் சீனிவாசன் விளக்கம் -
அண்ணாமலை போட்ட கண்டிஷன்.. அதிர்ந்துபோன டெல்லி.. கோவை வடக்குத் தொகுதியில் எகிறும் எதிர்பார்ப்பு -
Gold Loan: தங்க நகைக் கடன் இனி இவ்வளவுதான்! ரிசர்வ் வங்கியின் புதிய விதிகள் இன்று முதல் அமல்! -
தவெக கூட்டத்தில் மதுபாட்டில் வீச்சு.. சிக்கிய 2 பேர்.. யார் இவர்கள்? போலீஸ் சொன்ன ஷாக் தகவல்












Click it and Unblock the Notifications