சபாநாயகர் மீது நம்பிக்கையில்லா தீர்மானம்.. சட்டசபை செயலாளரிடம் ஸ்டாலின் கடிதம்
சென்னை: சட்டசபையில் பிப்ரவரி 18ஆம் தேதியன்று சபாநாயகர் ஒருதலைபட்சமாக நடந்து கொண்டதால் அவர் மீது நம்பிக்கையில்லா தீர்மானம் கொண்டு வரக்கோரி பேரவை செயலாளரிடம் கடிதம் அளித்துள்ளதாக எதிர்க்கட்சி தலைவர் ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
சட்டசபையில் 18ஆம் தேதியன்று எடப்பாடி பழனிச்சாமி அரசு மீதான நம்பிக்கை வாக்கெடுப்பு நடைபெற்றது. அப்போது திமுகவினர் ரகசிய வாக்கெடுப்பு கோரி அமளியில் ஈடுபட்டனர். இதற்கு சபாநாயகர் மறுத்து விட்டார். அமளிக்கு இடையே திமுகவினர் சபாநாயகரை பிடித்து தள்ளினர். அவரது நாற்காலியில் அமர்ந்தனர்.

இதனையடுத்து அவையை ஒத்தி வைத்த சபாநாயகர் தனபால், திமுக உறுப்பினரை அவையை விட்டு வெளியேற்றுமாறு காவலர்களிடம் உத்தரவிட்டார். வெளியேற மறுத்து தர்ணாவில் ஈடுபட்ட ஸ்டாலின் உள்ளிட்ட திமுக எம்எல்ஏக்களை குண்டு கட்டாக தூக்கிக்கொண்டு போய் வெளியேற்றினர்.
இதனையடுத்து ஆளுநரிடம் எதிர்கட்சித்தலைவர் ஸ்டாலின் புகார் அளித்துள்ளார். உயர்நீதிமன்றத்திலும் வழக்கு தொடர்ந்துள்ளார். இதனிடையே நேற்று செய்தியாளர்களிடம் பேசிய ஸ்டாலின், சபாநாயகர் தனபால் மீது நம்பிக்கையில்லா தீர்மானம் கொண்டு வரப்படும் என்று கூறினார்.
இன்று தலைமைச் செயலகம் வந்த ஸ்டாலின், சபாநாயகர் மீது நம்பிக்கையில்லா தீர்மானம் கொண்டு வருவது தொடர்பாக சட்டப்பேரவை செயலரிடம் மனு அளிக்கப்பட்டுள்ளது என்று கூறினார். செய்தியாளர்களிடம் பேசிய அவர், கடிதத்தின் நகல் சபாநாயகரிடமும் தரப்பட்டது என்றும் கூறினார்.
ரேசன் கடைகளில் சர்க்கரை, மண்ணெண்ணெய் உள்ளிட்டவை விநியோகம் செய்யப்படுவதில்லை என்ற கேள்விக்கு, முதல்வர் கோட்டையில் இருக்கிறார் அவரிடம் கேளுங்கள் என்றார்.
தொடர்ந்து பேசிய அவரிடம் சட்டசபையில் இருந்து வெளியே வரும் போது சட்டை கிழியாமல் இருப்பது போலவும், பின்னர் கிழிந்திருப்பதாகவும் சமூக வலைத்தளங்களில் வெளியான புகைப்படம் குறித்து கேள்வி எழுப்பட்டது. இது குறித்து தான் பதிலளிக்க விரும்பவில்லை என்றும் ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
சட்டசபைக்குழுக்களை அமைக்காத சபாநாயகர் மீது நம்பிக்கையில்லா தீர்மானம் கொண்டு வரப்படும் என்று கடந்த சில மாதங்களுக்கு முன்பு ஸ்டாலின் கூறியிருந்தார். இந்த நிலையில் இன்று பிப்ரவரி 18ஆம் தேதி நடந்த சம்பவம் தொடர்பாக நம்பிக்கையில்லா தீர்மானம் கொண்டு வர கடிதம் அளித்துள்ளார் ஸ்டாலின்.
-
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன? -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்! -
காலியான ராஜ்யசபா எம்பி பதவி! இன்று வேட்புமனு தாக்கல் தொடக்கம்! தவெகவின் முதல் எம்பி யார்?












Click it and Unblock the Notifications