நூலிழையில் தப்பிய திமுக எம்.பி ஆ.ராசா.. திடீரென சாய்ந்த விளக்கு கம்பம்.. மயிலாடுதுறையில் பரபரப்பு
மயிலாடுதுறை: திமுக சார்பில் மயிலாடுதுறையில் பட்ஜெட் விளக்கப் பொதுக்கூட்டம் நடைபெற்றது. அதில் ஆ ராசா எம்பி பேசிக் கொண்டிருந்த போது அருகே பொருத்தப்பட்டிருந்த மின்விளக்குகள் திடீரெனச் சாய்ந்தது. சரியாக அதைக் கவனித்த ராசா சில நொடிகளுக்கு முன்பு அங்கிருந்து நகர்ந்தார். இதன் மூலம் நூலிழையில் ராசா தப்பினார். இது தொடர்பான வீடியோ இணையத்தில் டிரெண்டாகி வருகிறது.
இன்று தமிழ்நாட்டில் பல்வேறு பகுதிகளிலும் இடி மின்னலுடன் கூடிய கனமழை கொட்டி வருகிறது. பெரும்பாலான இடங்களில் சூறை காற்றுடன் மழை நிற்காமல் கொட்டி வருகிறது. தமிழ்நாட்டில் பெரும்பாலான இடங்களில் இதே நிலை தான்.

இதற்கிடையே மயிலாடுதுறையில் வீசிய சூறைக்காற்றால் திமுக நிகழ்ச்சியில் ஒரு சிறு விபத்து ஏற்பட்டுள்ளது. இந்த நிகழ்ச்சியில் ஆ ராசா பேசிக் கொண்டு இருந்த நிலையில், அவர் நூலிழையில் உயிர் தப்பினார். ஆ ராசா ஒரு நொடி தாமதித்து இருந்தாலும் கூட பெரிய பாதிப்பு ஏற்பட்டிருக்கும்.
அதாவது மயிலாடுதுறை மாவட்டத்தில் பட்ஜெட் விளக்கப் பொதுக்கூட்டம் நடைபெற்று வந்தது. திமுக சார்பில் நடந்த இந்த நிகழ்ச்சியில் திமுகவை சேர்ந்த பல்வேறு தலைவர்கள் கலந்து கொண்டனர். குறிப்பாக திமுக துணைப் பொதுச்செயலாளரும் நீலகிரி எம்பியுமான ஆ ராசா இந்த நிகழ்ச்சியில் சிறப்பு விருந்தினராகப் பங்கேற்றார். அவர் பட்ஜெட் குறித்து விளக்கமாகப் பேசிக் கொண்டு இருந்தார்.
அங்கு மேடையில் பேசுவது கூட்டத்தில் பங்கேற்கும் அனைவருக்கும் தெரிய வேண்டும் என்பதற்காக மேடைக்கு முன்பு மின்விளக்குகள் வைக்கப்பட்டு இருந்தது. பொதுவாக எல்லா நிகழ்ச்சிகளிலும் இதுபோன்ற மின்விளக்குகளை வைப்பார்கள். அதுபோலவே இன்றைய தினமும் வைத்திருந்தனர். ஆனால், எதிர்பாராத வகையில் பலத்த காற்று வீசியதில் மேடையின் அருகே நிறுத்தப்பட்டிருந்த மின்விளக்குகள் சாய்ந்தது.
சட்டென இதைப் பார்த்துச் சுதாரித்துக் கொண்ட ராசா, அங்கிருந்து நகர்ந்துவிட்டார். அவர் நகர்ந்த அடுத்த நொடியே மைக் மீது அந்த மின்விளக்குகள் விழுந்தது.. இதையடுத்து உடனடியாகப் பேச்சை நிறுத்திய ஆ ராசா அங்கே இருந்து புறப்பட்டுச் சென்றதாகத் தெரிகிறது. இது தொடர்பான வீடியோ இணையத்தில் வேகமாகப் பரவி வருகிறது.
-
கடைசியில் ட்விஸ்ட்.. பாஜக சொன்ன பாயிண்டு! காங்கிரஸ் வேட்பாளர் மீனாட்சி நடராஜன் வேட்புமனு நிராகரிப்பு -
திமுகவை உதறும் துரை வைகோ.. மதிமுக பொதுக்குழு அதிரடி முடிவு? 2 எம்எல்ஏகள் ராஜினாமா? -
சொந்த கட்சிக்கு எதிராக சீறிய சென்னை மாநகராட்சி கவுனசிலர் மணிகண்டன்.. பின்னணியில் தவெக? -
ஆமை வேகத்தில் நகரும் மதுரை டைடல் பார்க்.. இளைஞர்களின் ஐடி கனவு என்னாவது? கொதிக்கும் சமூக ஆர்வலர்கள்! -
பாஜகவுக்கு ஆதரவு தரும் திமுக? டெல்லியை அதிர வைக்க போகும் மாற்றம்.. ரெடியாகும் மாஸ்டர் பிளான் -
“கூட்டணியில் யாருமே இல்லாவிட்டாலும் திமுகவுக்கு கவலையில்லை.. சொந்த பலம் இருக்கு” - ஆர்.எஸ்.பாரதி -
திமுக கூட்டணியில் இருந்து வெளியேறியது இந்திய கம்யூனிஸ்ட் கட்சி - வீரபாண்டியன் அறிவிப்பு! -
திமுகவின் ஆபரேஷன் சென்னை.. கையிலெடுத்த சேகர்பாபு.. அதிமுக மாஜி பெஞ்சமினுடன் திடீர் சந்திப்பு! -
அண்ணாமலைக்கும் - விஜய்க்கும் இடையேதான் போட்டி.. உடைத்து பேசிய அமர் பிரசாத் ரெட்டி! -
ஒரு மணி நேரம் நடந்த மீட்டிங்.. ரஜினிகாந்த் மருமகனுக்கு மிகப்பெரிய பொறுப்பை கொடுக்கும் அண்ணாமலை! -
ஒருகாலத்துல எப்படி இருந்த மனுஷன்? விழுப்புரத்தில் ஓரம் கட்டப்பட்ட சிவி சண்முகம்! கண்முன் 3 சான்ஸ்? -
யாரை நம்பி நான் பொறந்தேன்.. விரக்தியான எடப்பாடி! இலைக் கட்சியின் 10 மா.செ.க்கள் தவெகவுடன் பேச்சு?












Click it and Unblock the Notifications