"பட்டை, நாமம்" அமைச்சர் பொன்முடியின் சர்ச்சை பேச்சு.. கொந்தளித்த கனிமொழி.. என்ன நடந்தது?
சென்னை: அமைச்சர் பொன்முடியின் பேச்சு ஏற்றுக் கொள்ள முடியாதது என்று திமுக எம்பி கனிமொழி கண்டனம் தெரிவித்துள்ளார். அமைச்சர் பொன்முடியின் பேச்சுக்கு கண்டனம் தெரிவித்துள்ள அவர், இப்படியான கொச்சையான பேச்சுகள் கண்டிக்கத்தக்கது என்றும் தெரிவித்துள்ளார்.
அமைச்சர் பொன்முடி மகளிருக்கான விடியல் பேருந்து பயணத் திட்டத்தை பற்றி கடந்த ஆண்டு ஒரு நிகழ்ச்சியில் பேசிய போது, பெண்கள் பேருந்தில் ஓசியாக பயணிக்கிறார்கள் என்று கூறி சர்ச்சையில் மாட்டிக் கொண்டார். தற்போது மீண்டும் அமைச்சர் பொன்முடியின் பேச்சு சர்ச்சையாகி இருக்கிறது. திமுக நிகழ்ச்சி ஒன்றில் பேசிய அமைச்சர் பொன்முடி, விலைமாது தொடர்பாகவும், சைவம், வைணவம் ஆகியவை குறித்து பேசி இருக்கிறார்.

அதில் அமைச்சர் பொன்முடி பேசுகையில், ஒரு விலைமாது வீட்டிற்கு போகிறான்.. அங்கு போகும் போது ஒரு பெண், நீங்கள் சைவமா, வைணவமா? என்று கேட்கிறார். அது அந்த பையனுக்கு புரியவில்லை.. விலைமாது வீட்டில் சைவமா, வைணவமா என்று கேட்கிறார்கள் என்று குழம்புகிறார். இவ்வாறு பேசிய பொன்முடி சைவமென்றால் பட்டை, வைணவம் என்றால் நாமம் என்று மேடையில் செய்து காட்டினார்.
அதுமட்டுமல்லாமல் சைவம், வைணவம் என்றால் என்ன என்பதற்கு மோசமான ஒப்புமையும் அளித்தார். இதனால் அவர் பேச்சு சர்ச்சையாகியது. இதற்கு பாஜக உள்ளிட்ட பல்வேறு தரப்பினரும் கண்டனம் தெரிவித்து வருகின்றனர். பெண்கள் குறித்தும், சமூகங்கள் குறித்தும் பேசியது சர்ச்சையாகியது. இந்த நிலையில் திமுக எம்பி கனிமொழியும் அமைச்சர் பொன்முடிக்கு கண்டனம் தெரிவித்துள்ளார்.
அதில், அமைச்சர் பொன்முடி அவர்களின் சமீபத்திய பேச்சு ஏற்றுக்கொள்ள முடியாதது. எந்த காரணத்திற்காகப் பேசப்பட்டிருந்தாலும் இப்படிப்பட்ட கொச்சையான பேச்சுகள் கண்டிக்கத்தக்கது என்று பதிவிட்டுள்ளார். இந்த நிலையில், அமைச்சர் பொன்முடியை கட்சி பொறுப்பில் இருந்து முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் நீக்கி அறிவித்துள்ளார்.
அமைச்சர் பொன்முடி அவர்களின் சமீபத்திய பேச்சு ஏற்றுக்கொள்ள முடியாதது. எந்த காரணத்திற்காகப் பேசப் பட்டிருந்தாலும் இப்படிப்பட்ட கொச்சையான பேச்சுகள் கண்டிக்கத்தக்கது.
— Kanimozhi (கனிமொழி) (@KanimozhiDMK) April 11, 2025












Click it and Unblock the Notifications