பழைய (நினைப்பில்) 63 தொகுதிகளைக் கேட்கும் காங்கிரஸ்.... 40க்கு ஓகே சொல்லும் திமுக...!
சென்னை: திமுக கூட்டணியில் 63 தொகுதிகளை ஒதுக்க வேண்டும் என்று காங்கிரஸ் கட்சி வலியுறுத்தி வருகிறது. ஆனால் திமுகவோ அதிகபட்சமாக 40 தொகுதிகள் வரை ஒதுக்க முன்வந்திருப்பதாக கூறப்படுகிறது.
2011 சட்டசபை தேர்தலில் திமுக கூட்டணியில் 63 தொகுதிகளைப் போராடி பெற்றது காங்கிரஸ் கட்சி. தற்போதும் அதே 63 தொகுதிகளை ஒதுக்க வேண்டும் என்பதை காங்கிரஸ் தொடக்கம் முதல்வர் வலியுறுத்தி வருகிறது.
ஆனால் காங்கிரஸ் கட்சியில் இருந்து ஜிகே வாசன் வெளியேறி தனிக்கட்சி தொடங்கியிருக்கும் நிலையில் 63 தொகுதிகளைத் தர முடியாது என்பதில் திமுக உறுதியாக இருந்து வருகிறது. கூட்டணியில் தேமுதிகவும் இணையும் என்பதால் 25 முதல் 30 தொகுதிகள் வரை தரலாம் என்பது திமுக நிலைப்பாடாக இருந்தது.

தற்போது தேமுதிக கூட்டணியில் இணையாத நிலையில் இந்த நிலைப்பாட்டை திமுக மாற்ற வேண்டும் என வலியுறுத்துகிறது காங்கிரஸ். கருணாநிதியை இன்று சந்தித்த மூத்த காங்கிரஸ் தலைவர் குலாம்நபி ஆசாத்தும் 63 தொகுதிகளைக் கேட்டு வலியுறுத்தியிருக்கிறார்.
ஆனாலும் கருணாநிதியோ, கூட்டணியில் மேலும் சில கட்சிகள் இணைய இருப்பதால் நிச்சயம் அத்தனை தொகுதிகளைத் தர முடியாது; அதிகபட்சமாக 30 முதல் 40 தொகுதிகளை தரலாம் என கூறியிருக்கிறார்.
இதனைத் தொடர்ந்து டெல்லி மேலிடத்தில் பேசிவிட்டு தாம் மீண்டும் பேச்சுவார்த்தை நடத்த வருவதாக கூறிவிட்டு சென்றிருக்கிறார் குலாம்நபி ஆசாத். திமுக 25-ல் இருந்து சற்று இறங்கி வந்திருப்பதே மிகப் பெரிய வெற்றியாக காங்கிரஸ் வட்டாரங்கள் கருதுகின்றன.
-
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
விஜய்க்கு விஷப் பரிட்சை..திமுகவுக்கு அக்னி பரிட்சை! இடைத் தேர்தலுக்கு ரெடியான கழகங்கள்! அதிமுக அமைதி -
Gen Z DMK Meetup.. விஜய் ஏற்படுத்திய ‘இன்ஸ்டா’ புயல்! இளைய தலைமுறையை நெருங்கும் திமுக! கைகொடுக்குமா? -
இதாம்லே ட்விஸ்டு.. துண்டை போட்ட உடன்பிறப்புகள்! நழுவிய தவெக நிர்வாகிகள்! விஜய் காதுக்கு போன மேட்டர்! -
CBSE: மொபைல்களில் ஸ்கேன் செய்யப்பட்ட விடைத்தாள்கள்! குற்றச்சாட்டுகளை அடுக்கும் ராகுல் காந்தி! -
அதிமுகவிற்கு ஆதரவாக வந்த திமுக.. முதல்வர் விஜய்க்கு எதிராக வியூகம்.. கவனிச்சீங்களா -
"திமுககாரன்னா திமிர் இருக்கணும்".. காரணம் சொல்லி ‘ஜென் ஸி' மீட்டப்பில் பேசிய டிஆர்பி ராஜா -
திட்டமிட்டு விஜய்யுடனான சந்திப்பை அமித்ஷா ரத்து செய்தார்.. திமுகவின் முரசொலி விமர்சனம் -
எதிர்காலம் நம்பிக்கையளிக்கிறது.. எனர்ஜி கூடுகிறது! ஜென் ஸி கூட்டம் குறித்து மு.க.ஸ்டாலின் நெகிழ்ச்சி -
குடும்பத்தினருடன் குடகு மலைக்குச் சென்ற திமுக தலைவர் ஸ்டாலின்.. கூட யார் யார்லாம் பாருங்க! -
கர்நாடகா முதல்வராக தேர்வானார் டிகே சிவக்குமார்.. காங்., எம்எல்ஏக்கள் ஆதரவு.. பதவியேற்பு எப்போது? -
டி.கே.சிவகுமாருக்கு செக்.. ஆட்டத்தை தொடங்கிய சித்தராமையா! ராகுல் காந்திக்கு பறந்த முக்கிய கோரிக்கை!












Click it and Unblock the Notifications