கூட்டணி பேச்சுவார்த்தையை உடனே தொடங்க கருணாநிதிக்கு கனிமொழி நெருக்கடி!
சென்னை: சட்டசபை தேர்தலுக்கான கூட்டணிப் பேச்சுவார்த்தையை உடனே தொடங்க வேண்டும் என்று திமுக தலைவர் கருணாநிதிக்கு அவரது மகளும் ராஜ்யசபா எம்.பி.யுமான கனிமொழி தரப்பில் நெருக்கடி கொடுப்பதாகக் கூறப்படுகிறது.
லோக்சபா தேர்தலை மு.க.ஸ்டாலின் தலைமையில் திமுக சந்தித்தது. ஆனால் திமுக வெற்றி பெறவில்லை. அத்துடன் உட்கட்சி குழப்பம் உச்சகட்டத்தை எட்டியது.

அழகிரி சேர்க்கப்படுகிறார்
இதனைத் தொடர்ந்து திமுகவை மீண்டும் தம் கைகளில் எடுத்தார் கருணாநிதி. முதல் கட்டமாக அழகிரியை திமுகவில் சேர்ப்பதற்கான முடிவெடுக்கப்பட்டுள்ளது.

கூட்டணிப் பேச்சு
இந்த நிலையில் கனிமொழி தரப்போ, 'கருணாநிதி' தலைமையில் சட்டசபை தேர்தலை சந்திக்க வேண்டும்; 'கருணாநிதி'யே கூட்டணிப் பேச்சுவார்த்தைகளை உடனே தொடங்க வேண்டும் என்று நெருக்கடி கொடுக்க தொடங்கியுள்ளது. இதன் மூலம் ஸ்டாலினின் ஆதிக்கத்துக்கு முற்றுப்புள்ளி வைக்க முடியும் என்று அவர்கள் கருதுகின்றனர்.

வெற்றி உறுதி
மேலும் தற்போதே பலமான கூட்டணியை உருவாக்கி வேலைகளைத் தொடங்கினால் கட்சியில் இருக்கும் பிளவுகள் சரியாகி நிச்சயம் வெற்றி பெறுவோம் என்றும் கருணாநிதிக்கு கனிமொழி தரப்பு ஆலோசனை கூறி வருகிறதாம்.

உள்ளாட்சித் தேர்தலுக்குப் பின்..
இதை கருணாநிதியும் ஏற்றுக் கொண்டதாக கூறப்படுகிறது. உள்ளாட்சித் இடைத் தேர்தல் பஞ்சாயத்துகள் முடிந்த உடனேயே வலுவான கூட்டணிக்கான பேச்சுவார்த்தைகளை தொடங்குகிறேன் என்றும் கருணாநிதி உறுதி அளித்திருப்பதாகவும் அறிவாலய வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

ஸ்டாலின் நிலை
அதே நேரத்தில் தம்மை ஓரங்கட்டும் இந்த நடவடிக்கைகள் குறித்து மு.க.ஸ்டாலின் மவுனமாக பார்த்துக் கொண்டிருப்பதாகவும் உரிய நேரத்தில் அதிரடியாக செயல்படுவார் என்றும் அவரது ஆதரவாளர்கள் கூறி வருகின்றனர்.
-
திமுகவில் உதயநிதிக்கு செயல் தலைவர் பதவி? மெல்ல நகரும் திட்டம்.. ஸ்டாலின் மேஜையில் ரிப்போர்ட் -
திமுகவில் மீண்டும் ‘செயல் தலைவர்’ பதவி? களமிறக்கப்படும் உதயநிதி - கனிமொழி.. ஸ்டாலின் பிளான் என்ன? -
கிளிக்கு றெக்கை முளைச்சுடுத்து... பறந்து போயிடுத்து! ஸ்டாலினை பார்த்த ஆளூர்? எம்பியாக்கும் திருமா? -
சென்னையில் மின்வெட்டின் பின்னணி.. அமைச்சர் கருத்துக்கு திமுக தொழிற்சங்கம் திட்டவட்டமாக மறுப்பு -
CM Saar.. மாறி மாறி மக்களை ஏமாற்றும் விஜய்.. SCAM செய்யும் தவெக அரசு.. உதயநிதி ஸ்டாலின் அதிரடி! -
சிலுப்பிகிட்டு போகும் சிறுத்தை குட்டிகள்..க்ரீன் சிக்னல் காட்டிய அறிவாலயம்! குறுக்கே நிற்கும் திருமா -
தலைமைச் செயலகத்தை தவெக கட்சி அலுவலகமாக மாற்றுவதா? திமுக எம்பி வில்சன் கண்டனம் -
கைய குடுங்க பங்கு.. விஜய்ய முடிச்சு விடனும்! திரைமறைவில் கைகோர்த்த திமுக -அதிமுக! உடைந்த கூட்டணிகள்! -
ஃபேக் நியூஸ்.. தூக்கம் தொலைத்த திமுக நிர்வாகிகள்.. களம் இறங்கிய திமுக தலைமை.. வில்சன் எம்பி அதிரடி -
திமுகவிற்கு குட்பையா? தனிச்சின்னத்தில் போட்டியிட துடிப்பது ஏன்? சர்ச்சைக்கு நடுவே விளக்கிய ஜவாஹிருல்லா -
குதிரை பேரமா? 2009 கலைஞர் பாலிடிக்ஸ்.. 2011ல் காப்பி அடித்த ஜெ.,! அப்படியே ஃபாலோ செய்யும் தவெக விஜய் -
வாட் ப்ரோ.. இட்ஸ் வெரி ராங் ப்ரோ! திராவிட மாடல் 2.0 ஆட்சி தான் தவெக! அடித்து துவைத்த அர்ஜுன் சம்பத்












Click it and Unblock the Notifications