ஹைட்ரோ கார்பன் திட்டத்திற்கு எதிர்ப்பு.. திமுக சார்பில் 5 மாவட்டங்களில் போராட்டம்
சென்னை: ஹைட்ரோ கார்பன் திட்டத்திற்கு எதிராக டெல்டா மாவட்டங்களில் திமுக சார்பில் இன்று போராட்டம் நடைபெற்றது.
காவிரி டெல்டா பகுதியில் அமைக்கப்படும் ஹைட்ரோ கார்பன் திட்டத்திற்கு சுற்றுச்சூழல் துறையின் அனுமதியோ மக்கள் கருத்து கேட்பு கூட்டமோ நடத்த தேவையில்லை என மத்திய அரசு அண்மையில் அறிவித்தது.

இந்த அறிவிப்புக்கு தமிழக அரசியல் கட்சியினர், விவசாயிகள் கடும் கண்டனம் தெரிவித்தனர். ஹைட்ரோ கார்பன் திட்டத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து தமிழகத்தில் மாணவர்கள், விவசாயிகள் போராட்டம் நடத்தி வருகின்றனர்.
டெல்டா மாவட்டங்களில் குடியரசு தினத்தன்று நடந்த கிராம சபை கூட்டங்களில் ஹைட்ரோ கார்பன் திட்டத்தை எதிர்த்து தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
இந்த நிலையில் ஜனவரி 28-ஆம் தேதி டெல்டா மாவட்டங்களில் திமுக சார்பில் கண்டன போராட்டம் நடைபெற இருப்பதாக ஸ்டாலின் அறிவித்திருந்தார். அதற்கு காவல் துறை அனுமதி அளிக்கவில்லை. இதையடுத்து நேற்று இரவு அனுமதி அளிக்கப்பட்டது.
இதை தொடர்ந்து இன்று தஞ்சை, கடலூர், நாகை, திருவாரூர், புதுக்கோட்டை ஆகிய மாவட்டங்களில் ஹைட்ரோ கார்பன் திட்டத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து திமுக சார்பில் போராட்டம் நடைபெற்றது.
-
சிதறும் கிறிஸ்தவ வாக்குகள்? தமிழகத்தில் இதுவரை நடக்காத சைலண்ட் மாற்றம்! கள நிலவரம் என்ன? -
'இல்லத்தரசி' கூப்பன்.. எங்கே வாங்கலாம்? எப்படிப் பயன்படுத்தலாம்? கோட்டை வட்டாரத்தில் கசிந்த தகவல் -
ஸ்டாலின் தான் சிறந்த CM வேட்பாளர்.. பின்னாலேயே துரத்தும் எடப்பாடி.. விஜய்க்கு அதிர்ச்சி! புதிய சர்வே -
மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் வேட்பாளர் பட்டியல் வெளியானது.. சின்னதுரைக்கு மீண்டும் வாய்ப்பு! -
பெரும் பணக்காரர்களுக்கு செல்வ வரி விதிக்கப்படுமா? நாடாளுமன்றத்தில் திமுக எம்.பி. வில்சன் கேள்வி -
ஆர்.கே.நகர் தொகுதியில் அனல் பறக்கும் போட்டி.. வாக்குறுதிகளை அள்ளி வீசி களமிறங்கிய தவெக வேட்பாளர்! -
ரூ.2000 + ரூ.8000.. இல்லத்தரசிகளின் மனதை வெல்லும் திமுக மாஸ்டர் பிளான்.. கூப்பன் தருவது ஏன்? -
திமுக கூட்டணிக்கு ஆதரவு தெரிவித்த முன்னாள் MLA செ.கு.தமிழரசன்! இரட்டை இலையில் வென்றவர்! அதான் ஹைலைட் -
4 மண்டலங்களாக.. வகுக்கப்படும் தமிழ்நாடு.. திமுகவின் மிகப்பெரிய வாக்குறுதியே இதுதான்.. அடிதூள்! -
ஸ்டாலின் 6.. கனிமொழி கையில் எடுத்த மேஜிக்.. தேர்தல் போக்கையே மாற்றும் அந்த 6 வாக்குறுதிகள்? -
"ஈ அடிச்சான் காப்பி".. அதிமுக தேர்தல் அறிக்கையை காப்பியடித்த திமுக? எவ்வளவு ஒற்றுமை பாருங்க -
நாங்க 10000..அவங்க 8000 தான்! அத்தைக்கு மீசை வச்சா சித்தப்பா மாதிரி இருக்கு! திண்டுக்கல்லார் ராக்ஸ்!












Click it and Unblock the Notifications