திமுக ஆர்ப்பாட்டத்திற்கு காங்கிரஸ் ஆதரவு - கருணாநிதி வரவேற்பு
சென்னை: சென்னையில் திமுக சார்பில் நடைபெறும் ஆர்ப்பாட்டத்திற்கு தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் ஈ.வி.கே.எஸ். இளங்கோவன் ஆதரவு தெரிவித்துள்ளார். இதை திமுக தலைவர் கருணாநிதி வரவேற்றுள்ளார்.
செம்பரம்பாக்கம் ஏரியிலிருந்து ஒரே நாளில் அதிக அளவு நீர் திறந்துவிடப்பட்டது குறித்து நீதி விசாரணை நடத்த வலியுறுத்தி இன்று சென்னையில் திமுக தலைவர் கருணாநிதி தலைமையில் ஆர்ப்பாட்டம் நடைபெறுகிறது. பொருளாளர் மு.க.ஸ்டாலின் உள்பட முக்கிய நிர்வாகிகள் பங்கேற்க உள்ளனர்.

இந்த நிலையில் திமுக சார்பில் நடைபெறும் ஆர்ப்பாட்டத்திற்கு காங்கிரஸ் ஆதரவு தெரிவிப்பதாக காங்கிரஸ் மாநிலத் தலைவர் ஈ.வி.கே.எஸ்.இளங்கோவன் தெரிவித்தார். இதை கருணாநிதி வரவேற்றுள்ளார்.
கடந்த சில நாட்களுக்கு முன்பு கூட்டணி என்று வரும் போது காங்கிரஸ் கட்சிக்கு இடம் உண்டு. காங்கிரஸை திமுக விலக்கி வைக்கவில்லை என்று திமுக தலைவர் கருணாநிதி கூறியதும், திமுக, தேமுதிக போன்ற மதசார்பற்ற கட்சிகளுடன் காங்கிரஸ் கூட்டணி அமைக்க முயலும் என்று தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் இளங்கோவன் கூறியதும் நினைவு கூறத்தக்கது.
இந்நிலையில் திமுக போராட்டத்துக்கு காங்கிரஸ் ஆதரவு தெரிவித்திருப்பதும், அதற்கு கருணாநிதியின் வரவேற்பும் அரசியல் ஆர்வலர்களால் உன்னிப்பாக பார்க்கப்படுகிறது.
-
இதாம்லே ட்விஸ்டு.. துண்டை போட்ட உடன்பிறப்புகள்! நழுவிய தவெக நிர்வாகிகள்! விஜய் காதுக்கு போன மேட்டர்! -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
அதிமுகவிற்கு ஆதரவாக வந்த திமுக.. முதல்வர் விஜய்க்கு எதிராக வியூகம்.. கவனிச்சீங்களா -
Gen Z DMK Meetup.. விஜய் ஏற்படுத்திய ‘இன்ஸ்டா’ புயல்! இளைய தலைமுறையை நெருங்கும் திமுக! கைகொடுக்குமா? -
10ல் 1ல் மட்டுமே வெற்றி.. எனன் நடந்தது? தேமுதிக மா.செக்களை அழைத்து விசாரிக்கும் பிரேமலதா விஜயகாந்த் -
ஸ்டாலினே சொன்னா தான் உண்டு.. திமுக - அதிமுக கூட்டணி முயற்சி நடந்ததா? 30 நாளாய் நீடிக்கும் மர்மம்! -
"திமுககாரன்னா திமிர் இருக்கணும்".. காரணம் சொல்லி ‘ஜென் ஸி' மீட்டப்பில் பேசிய டிஆர்பி ராஜா -
குடும்பத்தினருடன் குடகு மலைக்குச் சென்ற திமுக தலைவர் ஸ்டாலின்.. கூட யார் யார்லாம் பாருங்க! -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
விஜய்க்கு விஷப் பரிட்சை..திமுகவுக்கு அக்னி பரிட்சை! இடைத் தேர்தலுக்கு ரெடியான கழகங்கள்! அதிமுக அமைதி -
CBSE: மொபைல்களில் ஸ்கேன் செய்யப்பட்ட விடைத்தாள்கள்! குற்றச்சாட்டுகளை அடுக்கும் ராகுல் காந்தி! -
கர்நாடகா முதல்வராக தேர்வானார் டிகே சிவக்குமார்.. காங்., எம்எல்ஏக்கள் ஆதரவு.. பதவியேற்பு எப்போது?












Click it and Unblock the Notifications